காயத்ரி

காயத்ரி இரண்டு பக்கமும் கொரனா தடுப்பு வைத்து அந்த தெருவில் பெரிய வாகனங்கள் போக விடாமல் அடைத்தனர். அந்த மூன்றடுக்கு கட்டிடத்தில் ஹாட் ஸ்பாட் போட்டு முடித்திருக்க, ஆம்புலன்ஸில் ஒருவரை ஏற்றி சென்றனர். மற்றவர்கறையும் முகமூடி அணிந்து கடத்தி சென்றனர். பார்க்க அப்படி தான் தோன்றியது. கவலை தேய்ந்த முகத்தோடு மூன்று கட்டிட மனிதர்களும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றனர். ஒருவருக்கு வந்த கொரானா மற்ற குடுத்தினருக்கு பரவுவதாக ஆய்வு செய்ய தனியாக பெரியவர்களை அழைத்து சென்றது. இருவருக்கு தொற்று ஊர்ஜிதமாக அவர்களை அங்கேயே பிடித்து வைத்து கொண்டனர். மற்ற இருவருக்கு இல்லையென அனுப்பி வைத்தார்கள். மேலும் இருவருக்கு தொற்று உள்ளது தங்களாகவே தனிமைப்படுத்தி கொள்ளுங்கள...