Posts

Showing posts from 2021

சிரமமில்லாமல் சில கொலைகள்

Image
சிரமமில்லாமல் சில கொலைகள்         முன் ஜென்ம தேடலில் தொலைத்த காதலை இந்த ஜென்மத்தில் உயிர் கொடுக்க முயலுக்கின்றது ஒரு ஆன்மா. கூடவே தன் காதலை தண்டித்த காரணத்தால் பழி வெறியை சேர்த்தே கருவருக்கிறது அவ்வுருவம்.ஜென்மம் தாண்டி காதல் சேருமா? காதலிக்கும் அப்பேதையே  அறியாத காதல்? காண்போம் சில கொலைகளில் சிரமமில்லாமல்.. கதைகளோடு.     சிரமமில்லாமல் சில கொலைகள் -1     சிரமமில்லாமல் சில கொலைகள்-2    சிரமமில்லாமல் சில கொலைகள்-3     சிரமமில்லாமல் சில கொலைகள்-4     சிரமமில்லாமல் சில கொலைகள்-5   சிரமமில்லாமல் சில கொலைகள்-6   சிரமமில்லாமல் சில கொலைகள்-7   சிரமமில்லாமல் சில கொலைகள்-8    சிரமமில்லாமல் சில கொலைகள்-9   சிரமமில்லாமல் சில கொலைகள்-10   சிரமமில்லாமல் சில கொலைகள்-11 சிரமமில்லாமல் சில கொலைகள்-12 சிரமமில்லாமல் சில கொலைகள்-13 சிரமமில்லாமல் சில கொலைகள்-14   சிரமமில்லாமல் சில கொலைகள்-15     சிரமமில்லாமல் சில கொலைகள்-16     சிரமமில்லாமல் சில கொலைகள்-17 ...

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

Image
தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥             தீவிகை அவள் வரையனல் அவன்-1 தீவிகை அவள் வரையனல் அவன்-2 தீவிகை அவள் வரையனல் அவன்-3 தீவிகை அவள் வரையனல் அவன்-4 தீவிகை அவள் வரையனல் அவன்-5 தீவிகை அவள் வரையனல் அவன் -6 தீவிகை அவள் வரையனல் அவன் -7 தீவிகை அவள் வரையனல் அவன் -8 தீவிகை அவள் வரையனல் அவன் -9 தீவிகை அவள் வரையனல் அவன்-10 தீவிகை அவள் வரையனல் அவன்-11 தீவிகை அவள் வரையனல் அவன்-12 தீவிகை அவள் வரையனல் அவன்-13  தீவிகை அவள் வரையனல் அவன்-14     தீவிகை அவள் வரையனல் அவன்-15  தீவிகை அவள் வரையனல் அவன்-16   தீவிகை அவள் வரையனல் அவன்-17   தீவிகை அவள் வரையனல் அவன்-18   தீவிகை அவள் வரையனல் அவன் -19 தீவிகை அவள் வரையனல் அவன்-20 தீவிகை அவள் வரையனல் அவன்-21 தீவிகை அவள் வரையனல் அவன்-22   தீவிகை அவள் வரையனல் அவன்-23 தீவிகை அவள் வரையனல் அவன்-24   தீவிகை அவள் வரையனல் அவன்-25 தீவிகை அவள் வரையனல் அவன்-26   தீவிகை அவள் வரையனல் அவன்-27 தீவிகை அவள் வரையனல் அவன்-28 தீவிகை அவள் வரையனல் அவன்-29 தீவிகை அவள் வரையனல் அவன்-30(com...

மத்தாப்பூ மலரே

Image
  மத்தாப்பூ மலரே      வீட்டில் அப்பொழுது தான் பறித்து தொடுத்த பூவை கட்டி தலையில் இரட்டை ஜடையில் சூடியிருந்தாள் மலர். அதன் வாசம் பேருந்தில் அனைவரையும் ஒர் கணம் சுவாசத்தில் நுகர வைத்திருப்பது என்னவோ உண்மை.      மலரோ எட்டி எட்டி பின் இருக்கையை கண்டவள் தன் தாய் செல்வியை சுரண்டினாள்.     "அம்மா... அம்மா... அங்க ஜன்னல் சீட் காலியா இருக்கு போலாமா?" என்றாள்.     செல்வி திரும்பி பார்த்து சரியென்று சம்மதிக்க பேருந்தில் இருவர் இருக்கையில் மூவராய் அமர்ந்திருந்த மலருக்கு ஜன்னலிருக்கை அதுவும் தானும் தாயும் மட்டும் என்று சவுகரியமாக அமர்ந்தாள்.      "அம்மா... டவுன்ல இருக்கற பெரிய கடைக்கு தானே போறோம்" என்று மீண்டும் தன் கேள்விக்கு பதிலை தெளிவுப்படுத்தி கொண்டாள்.      "ஆமா டா குட்டி" என்று தாடை பிடித்து கொஞ்சினாள்.       "அம்மா அம்மா மருதாணி பறிச்சு வச்சியா?" என்று அடுத்த கேள்வியை கேட்டாள்.     இரவானால் பாம்பு பூச்சி வந்திடுமென அம்மா பறிக்க தயங்குவாரென ஏற்கனவே பறித...

பாயிரம் இன்றேல்

Image
   பாயிரம் இன்றேல்      கொலுசொலி தவிர அந்த இருட்டில் தவளை ரிங்காரமும், சிறு சிறு பூச்சியின் சப்தமும் கேட்டது.     கொலுசொலி கால்கள் மெல்ல மெல்ல இருட்டில் மழை பெய்ததால் அந்த குழைந்த மண்ணில் நடந்தாள்.  தன் நயன விழியிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்து வீட்டின் பின் பக்க கிணற்றில் ஏறி நின்றாள் ஜானவி.      முடிவாக இறந்திட முடிவெடுத்து விட்டாயா? என்று ஓர் குரல் அவள் மூளையிடமிருந்து கேட்டது.     'ஆமா... அப்பா பார்க்கற ஒயின் ஷாப் ஒனரை கட்டிக்கிட்டு வாழறதும் ஒன்று தான் சாவறதும் ஒன்று தான்' என்றது மனம்.      'ஓ... அப்படின்னா சரி. நீ தானே தப்பு செய்த. அப்ப நீயே சாவு' என்று மூளை கூற மனம் திடுக்கிட்டு விழித்தது.       'நான் என்ன தப்பு செய்தேன். அவன் தான் தப்பானவன். எத்தனை பேர் வாழ்வு அந்த ஒயின் ஷாப்ல போகுதோ. அவன் என் வாழ்வை முடிவெடுப்பதா என்று யோசித்தவள்' சட்டென குதித்தாள் கிணற்றுக்குள் அல்ல கிணற்றுக்கு வெளியே.        என் இருபத்தி ஒன்று வயது வரை என் வாழ்வை நான் தான்...

உவகை கொள்(ல்)

Image
உவகை கொள்(ல்)        ஓலா ஆட்டோ அந்த குறுக்கு சந்தில் செல்ல எதிரே லாரி வண்டி வரவும் ஓரமாய் நின்று வழிக் கொடுத்து பின்னரே இரண்டு நான்கு தெரு உள்ளுக்குள் வளைந்து வளைந்து சென்று லொகேஷன் காட்டிய அந்த வீட்டின் முன் நின்றது.      பேசியபடி பணத்தை நீட்ட ஆட்டோக்காரன் பெற்று கொண்டு சென்றான்.        "இந்த வீடானு செக் பண்ணு ஷாலினி" என்றான் தீபக்.        "இரண்டு பக்கம் வாழை மரம் இருக்கு. புது வீடு... இதுக்கு மேல என்ன செக்கிங் தீபக்" என்று தன் மேடிட்ட வயிற்றை பிடித்தபடி கூறினாள்.       "எல்லா வீடும் புதுசா தான் இருக்கு மா." என்றதும் சின்ன முறைப்பை பனிசளித்து பரிசுப்பொருளை எடுத்து நுழைந்தாள்.       "ஏ...  ஷாலு... வா வா. காலையிலேயே வருவனு பார்த்தேன். வாங்க அண்ணா" என்று அழைக்க தன் மாமன் மகள் நதியா வாங்கிய புதுமன புகுவிழாவிற்குள் அடியெடுத்து நுழைந்தாள் ஷாலினி.       "வீடு ரொம்ப அழகாயிருக்கு" என்று ஷாலினி கூறவும் "தேங்க்ஸ் எ லாட் மா. இந்தா வெல்கம் டிரிங்க்....

குளம்பி வாசம் வீசுதே

Image
     குளம்பி வாசம் வீசுதே     தன் கைகடிகாரத்தை நொடிக்கு ஒரு முறை பார்த்து கொண்டு அந்த காபி ஷாப்பில் காத்திருந்தாள் ஸ்ரீமதி.        கிருஷ் இன்னமும் வர தாமதமாக்கி கொண்டிருந்தான்.      அந்த மழை காற்று வேறு ஸ்ரீமதியை சில்லிட வைத்தது. அவனின் எண்ணங்களை அசைப்போட வைத்தது. மழைக்கும் அவனுக்குமான பொருத்தம் அவளுக்கு மட்டுமே தெரியும்.     இதே போல ஒர் கார்காலத்தில் தான் முதல் முறை கிருஷ்ணாவை மதுராவில் கண்டாள். அன்றைய நாட்களை இன்றும் நினைவு சாரலில் மீட்டெடுத்தாள்.    சின்னதாய் துளிதுளியாய் மழை பொழிந்திருக்க அதில் நனைந்தாள் ஸ்ரீமதி.       கூடவே தந்தை சிவம் செய்து கொடுத்த கப்பலை நீரில் வைத்து அது செல்லும் பக்கம் தானும் பார்த்துக் கொண்டே, எதிரே வருபவரையோ சுற்றி இருப்பவரையோ கூட அறியாமல் அதன் போக்கில் சென்று ஒரேயிடத்தில் ஒர் சிறுவனின் தலையில் இடித்து நிமிர்ந்தாள்.      அவனும் ஸ்ரீமதி போல கப்பலை விடும் நோக்கத்தில் அவளை பார்க்காமல் இடித்து கொண்டான். நிமிர்ந்து இருவரும் முறைத...

குலானின் கை வண்ணம்

Image
    குலானின் கை வண்ணம்    https://praveenathangarajnovels.com/%e0%ae%95%e0%af%81%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/

ஓ... பட்டர்பிளை

Image
   ஓ... பட்டர்பிளை     அந்த அறைக்குள் அவளை தள்ளி விடாத குறை தான். உள்ளே வந்தவளின் பார்வை அந்த அறையின் தோற்றத்தில் அச்சத்தை கொடுத்தது. அதிலும் அவனை காணுகையில் உடல் நடுக்கம் கூட கண்டது. அழுது முரண்டு செய்திட கூடாது என்ற அறிவுரையில் கண்ணீரை கட்டுப்படுத்தி நின்றாள். ''என்ன அங்கயே நிற்கற, இங்க வா'' என்ற குரல் தெளிவாக வந்து இவளை அடைந்தது. அவள் தயங்க, அவனோ முரட்டு தனமாக அவளின் கையை பற்றி மலர் மஞ்சதில் அவளின் அனுமதியின்றி கட்டி அணைத்தான். அவனை இதுவரை இரண்டு முறை பார்த்து இருக்கின்றாள். சில நாட்களாக போனில் பேசியிருகின்றாள். ஆனாலும் அவனின் பண்போ, குணநலனோ அறிந்திராத பேதை இவளுக்கு, இவனின் அணைப்பு பஸ்ஸில் தெரியாதவன் சீண்டும் ஒவ்வாமை தான் முன்னே வந்தது. அவள் குமட்டி கொண்டு விடுபட, அவனோ என்னாயே தள்ளி விடறியா என்றே மலரிதழில் வலிக்க வலிக்க முத்தமிட்டான். அவள் எவனோ ஒருவன் எச்சி என்ற அருவருப்பு கூடவே வர தன் ஒட்டு மொத்த பலத்தை கொண்டு அவனை தள்ளி நிறுத்தினாள். இது போதுமே... ஆண்மகன் என்ற அகம்பாவத்தை கிளர்த்து விட, பெண்ணவளினை மென்மையாக பதவிசமாக கையாளும் முதலிரவில் ...