Magic Water                 ரகி உறங்கி  கொண்டிருந்தாள். எங்கோ கேட்கும் குரலாக, "அந்த தண்ணீரை பாதுகாப்பா எடுத்து  வை." என்று விஜய் குரல் கொடுத்து வெளியேறினான். அந்த குளிர்சாதன பெட்டியில்  வைக்க சென்றாள் ப்ரியா.       "ப்ரியா" என்ற  அழைப்பு தொடுத்தான் விஜய். இரண்டாம் தளத்தில் இருந்து என்னயென்று கேட்க,  "என் போன்" என்றதும் அதை கொடுக்க சென்றாள்.      அந்த நேரம் ரகி விழி  திறந்தாள். குளிருட்டப்பெற்ற அறையில் அவள் மட்டும் இருக்க, தனது ஷாக்ஸ்  அணிந்த காலில் மெல்ல நடந்து வந்தாள்.       அந்த இடத்தில் யாருமே இல்லை என்பதை அறிந்து தன்னை பூட்டி வைத்த அறையிலிருந்து வெளியே வந்தாள்.       ஜன்னல் வழியே பகலவன்  கதிர்கள் ஒளியை தர இதுவரை ஒளியை காணாத அவள் கண்கள் கூசியது.     ஒவ்வொர் அடியாக எடுத்து வைத்தாள் அவளின் நடை எந்திரம் போல மெதுவாக இருந்தது.       கண்கள்  நாலப்பக்கமும் தூழாவியது. இங்கே தன்னை தவிர யாருமில்லையென்ற எண்ணம்  எழுவும், குளிர்சாதன பெட்டியில் கை சென்றது. அங்கே அந்த நீரும் இருந்தது.      கண்...