முதல் முதலாய் ஒரு மெல்லிய-12

💘 12 அடுத்த இரு தினம் கழித்து , தவசுடர் சுவாதியுடன் ஸ்கூட்டியில் வந்து நேராக பவித்ராவை பார்த்து '' ஏன் உனக்கு அஸ்வினை பிடிக்கலை ? அவனை போல பையன் கட்டிக்க கசக்குமா உனக்கு ?'' என்று சண்டைக்கு வராத குறையாக கேள்வி கேட்டு நின்றார். பவித்ராவுக்கு தலை சுற்றியது. இரு தினத்திற்கு முன் இருந்த பேச்சுக்கும் இப்போதைய பேச்சுக்கும் ஒன்றும் விளங்கவில்லை. '' என்ன பார்க்குற ? என் அஸ்வின் வீட்டுக்கு வந்து உன்னை பத்தி சொன்னான். அவன் மனசைத் திருடிட்டு வந்தவளை எப்படி சும்மா விடுவான். போகப் போக அஸ்வினை உனக்கு பிடிக்கும் இந்தா ஸ்வீட் '' என கொண்டு வந்த ரசகுல்லாவை வாயில் ஊட்டி ராதையிடம் சென்றார். '' அரசியல் கட்சி போல் பல்டி அடிக்கறாங்களா ?! அம்மாவுக்கு அஸ்வின்னா ரொம்ப பிடிக்கும் தாத்தாவோட சுபாவம் அப்படியே இருக்கறவன். அவன் விருப்பம் நிறைவேற ஆசை அதான். '' என்று சுவாதி விளக்கம் அளித்தாள். '' எனக்கு எழுத வேண்டியது நிறைய இருக்கு நான் படிக்கிறேன் '' என நழுவினாள். நாட்கள் இனிதாக நகர்ந்தன. கல்லூரியில் இருந்து உணவு நேரம்...