முதல் முதலாய் ஒரு மெல்லிய-29
💘29 வருணும் , நந்தகோபாலனும் அன்று போலவே வரவேற்க வந்தனர். கண்களை அழுத்தி துடைத்து புன்னகைக்க முயன்று தோற்று வந்தாள். '' அக்கா இனிமே எங்க கூடவே இருப்பல '' என்று கேட்டதும் '' ஆமாம் வருண் '' என்று தம்பி தோளில் கைபோட்டு நடந்தாள். '' சாப்பிட்டியா பவித்ரா ?'' என்று நந்தன் கேட்க '' சாப்பிட்டேன் பா '' என பொய்யை நன்றாகச் சொன்னாள். வீடு வந்ததும் அவளது பரிசினை வருணே எடுத்து அனைவரிடம் வழங்கினான். '' அக்கா என் டேப்( Tab) சூப்பர் இனி இதுலயே நான் கேம் , சாங் , மூவி , எல்லாம் இன்ஸ்டால் பண்ணிப்பேன். தன் தந்தை வாட்ச் பார்த்து அப்பா எனக்கு டென்த்ரிசல்ட் வந்த பிறகு இது மாதிரி வாட்ச் வேணும் என்றான் '' மங்கை புடவை பார்த்து '' நல்லா இருக்கு , இந்த நிறம் என்கிட்ட இல்லை , கயல்கிட்டயும் இல்லை '' என்றார் மங்கை. பர்வதம் பாட்டி வீட்டில் இல்லை , ரகு வீட்டிற்குச் சென்று இருக்க சற்று அமைதியானாள். ரகு வீட்டிலோ அவனைப்...