Posts

செம்புல பெயல் நீர்போல

Image
                                செம்புல பெயல் நீர்போல     விழியன் என்னும் அபிஷேக் அவளுக்காக காத்திருந்தான். அவள் தான் அபிராமி.      ஆறு மாதமாக விழியன் சோஷியல் மீடியாவில் நட்பு பாராட்டி பேசியதில் அபிராமியின் பேச்சில் பிடித்தம் ஏற்பட்டு காதல் என்று அங்கீகரிக்கும் நேரம் அபிராமியோ 'நாம நேர்ல மீட் பண்ணலாமா'னு கேட்டு விட்டாள்.      விழியனும் காதலை இந்த சோஷியல் மீடியாவில் இன்பாக்ஸில் சொல்லி விடுவதற்கு பதிலாக நேரில் சொல்லலாமென்ற ஆவல் பெருகியது. இன்பாக்ஸில் சொல்லி அவள் பார்க்க வரும் இந்த சந்தர்ப்பத்தை தவிர்ப்பானேன.     'என்னடா இவ்வளவு நேரம் வெயிட் பண்ணறோம் அவளை காணோமே' என்று அபிஷேக் உள்ளத்து குரலாய் கேட்டு விட்டான். விழியன் என்பது அபிஷேக்கின் புனைப்பெயர் அல்லவா.     "வருவா வருவா. தேவதைகள் பொறுமையா தான் வருவாங்க." என்று கவிஞனாய் விழியன் பதில் தந்தான் மனசாட்சியிடம்.      சட்டென மின்னல் குறுஞ்செய்தியாக "ஹாய் தனியா தானே வந்திருக்கிங்க" என்று ...

துளிர் விடும் விடியல்

Image
                                            துளிர் விடும் விடியல்       ஞாயிறு மதியம் கறிக்குழம்பு அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தது. அதை விடத் திவ்யபாரதி மனம் கொதித்தது. மற்றவர்களுக்குத் திவ்யா என்று நெருக்கம்.      தன்னைப் படிக்க வைக்காமல் தந்தை திருமணம் பற்றிப் பேச்சை எடுப்பது எரிச்சலை தந்தது.     தான் ஒன்றும் பார்டர் பாஸ் அல்ல. அதே நேரம் பத்திரிகையில் இடம் பிடிக்கும் முதல் தரமும் அல்ல. அறுபத்தியிரெண்டு விழுக்காடு பெற்ற மத்திய ரகம்.      அளவுக்கதிகமாகப் படிக்க வைக்கக் கேட்கவில்லை. சின்னதாய் பெயருக்குப் பின்னால் ஒரு டிகிரி. அது மட்டும் போதும். அதற்குப் பின் கண்ணை மூடி தந்தை கூறும் வினோத்தை திருமணம் செய்ய அவளுக்கு ஒப்புதலே. ஆனால் படிக்கவிடாமல் இப்படிப் பதினெட்டு அடியெடுத்து வைத்து விட்டாளென உடனே சந்தையில் விற்பது போல வர...

காயத்ரி

Image
                                                    காயத்ரி     இரண்டு பக்கமும் கொரனா தடுப்பு வைத்து அந்த தெருவில் பெரிய வாகனங்கள் போக விடாமல் அடைத்தனர்.     அந்த மூன்றடுக்கு கட்டிடத்தில் ஹாட் ஸ்பாட் போட்டு முடித்திருக்க, ஆம்புலன்ஸில் ஒருவரை ஏற்றி சென்றனர்.   மற்றவர்கறையும் முகமூடி அணிந்து கடத்தி சென்றனர். பார்க்க அப்படி தான் தோன்றியது. கவலை தேய்ந்த முகத்தோடு மூன்று கட்டிட மனிதர்களும் ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றனர்.     ஒருவருக்கு வந்த கொரானா மற்ற குடுத்தினருக்கு பரவுவதாக ஆய்வு செய்ய தனியாக பெரியவர்களை அழைத்து சென்றது. இருவருக்கு தொற்று ஊர்ஜிதமாக அவர்களை அங்கேயே பிடித்து வைத்து கொண்டனர். மற்ற இருவருக்கு இல்லையென அனுப்பி வைத்தார்கள். மேலும் இருவருக்கு தொற்று உள்ளது தங்களாகவே தனிமைப்படுத்தி கொள்ளுங்கள...

தீர்ப்பெழுதிய பேனா

Image
                                   தீர்ப்பெழுதிய பேனா               ராமமூர்த்தி தன் மகள் ராதாவை அணைத்து அழுதுக்கொண்டு, "இந்த இடம் எங்களோட காட்டை வித்து, இருக்கிற கை காசு போட்டு, குருவி சேர்க்கிற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து, இந்த நிலத்தை வாங்கினோம். முன்ன சீண்டுவார் யாருமில்லாதப்ப வாங்கிப் போட்டது. இப்ப இந்த இடத்துல ஸ்கூலு, காலேஜி, காம்பிளக்ஸ், அடுக்குமாடி கட்டிடம் வரப்போகுதுனு தெரிந்ததும் இப்படி அநியாயமா கைக்கு மீறி காசு கேட்கறிங்க. இதை கட்டி முடிக்க இவ்ளோ ஆகும்னா... பேசாம ஒரு குடிசை வீடா போட்டுயிருப்பேனே சாமி. என்னை விட்டுடுங்க" என்று தழதழத்து கூறி முடித்தார்.    எதிரில் இருந்தவர்களோ "இங்க பாருங்க ராமமூர்த்தி ஐயா. நீங்க உங்க நிலத்தை கட்ட கொடுத்த காசுக்கு குடிசை வீடு தான் கிடைக்கும். இங்க நிமிர்ந்து பாருங்க. நாலடுக்கு வீடா மாற்றி கட்டியிருக்கேன். எங்களுக்கு எங்க பங்...

சைராவும்🐕 சேட்டைக்காரியும்👧🏻

Image
                         சைராவும் சேட்டைக்காரியும்           ஒரு ஊரில் ஒரு அழகான நாய் ஒன்று வாழ்ந்து வந்தது. அது எப்பொழுதும் அவ்வூரின் தனிமையான இடமான பெரிய ஆலமரத்தின் கீழ் வாழும்.      தற்போது அதன் வாழிடமான ஆலமரத்தின் கீழ் பகுதியிலிருந்து வேறிடம் நோக்கி இடம் பெயர யோசித்து கொண்டிருந்தது. ஏனென்றால் அது வயிற்றில் தற்போது குட்டிநாய்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் வெளியே பிறந்து விடும் நிலைக்கு இருந்தது.     அதனால் அது தக்க பாதுக்காப்பான இடம் நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தது.     அவ்வூரில் சற்று நெடுஞ்சாலையை தாண்டி சென்ற போது பசி வாட்டியெடுக்க ஒரு டீக்கடையின் கீழ் நின்றது. அப்போது அங்கே வந்த பருப்பு வியாபாரி ஒருவர் அந்த நாயை கண்டு பாவம் பார்த்து பட்டர் பிஸ்கேட் வாங்கி அதற்கு போட்டார்.       நாயும் வாலாட்டி நன்றி உரைத்து பிஸ்கேட்டை சாப்பிட்டது. அந்த பருப்பு வியாபாரி அவ்விடம் விட்டு பைக்கில் அவரது வீட்டுக்கு செல்லவும் அந்த நாயும் பின் தொடர்ந்...

அ-அம்மா ஆ-ஆதிரா

Image
                                               அ-அம்மா ஆ-ஆதிரா           "தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி சூர்யா அவள் கைப்பட எழுதிய கடிதம் கண்டு பெற்றோர் களங்கிய காட்சி மனதை ரணப்படுத்தியது.     சமூக ஆர்வலர் பலரும் அந்த மாணவி படித்த பள்ளியில் ஆசிரியராக பதவி வகிப்பவரை பணிநீக்கம் செய்ய கோரி கண்டனம் செய்து கொண்டிருந்தனர்.     மேலும் இது போன்ற பாலியல் கொடுமைகள் எதிர்த்து பலரும்..." என்று செய்தி போய்கொண்டிருக்க அதனை அனைத்து வைத்து தலையை தாங்கி அமர்ந்தாள் ஜானவி.       இது போன்ற செய்தி வருடத்துக்கு பல தடவை வந்து அச்சத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதுவும் பெண் பிள்ளை பெற்றெடுத்தவர்களை கதிகலங்க வைத்து கவலை கொள்ள செய்கின்றது.      எத்தனை விழிப்புணர்வு பதிவுகள் கொடுத்து பள்ளியிலேயே குட் டச், பேட் டச் என்று பாடம் நடத்துவதாகட்டும், வகுப்பில் இது போன்று பேசி புரியவைக்கும் முயற்சியாகட்டும், அடிக்கடி ...