பஞ்ச தந்திரம்-10
பஞ்ச தந்திரம்-10 வேதாந்த் நைனிகாவை பார்த்து விட்டு, திரிஷ்யா கூட வந்த மற்றவர்களை பார்வையால் அலசினான். ரஞ்சனா மாடர்ன் உடையில் வந்திருந்தாள். அதனால் அவளை அளவிட்டவன் மஞ்சரியை பார்த்து சிரித்தான். நைனிகாவை பார்த்து மஞ்சரியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான். "என்னடா மாதர் சங்கத்துக்கு போய் நாலு நல்ல மனுஷங்களை கூட்டிட்டு வந்து முன்ன நிற்கறியோனு ஒரு நிமிஷம் பயந்துட்டேன். பிகாஸ் மாதர் சங்கத்து ஆட்களோட வந்தேன்னு தான் லேசா பயந்துட்டேன். கடைசில பார்த்தா போயும் போயும் இவங்களோட..." என்று ஏளனமாய் பேசினான். "இந்த பொண்ணு ஓகே... இவங்க இரண்டு பேரை எதுக்கு கூட்டிட்டு வந்த? இவங்களுக்கு என்ன தகுதியிருக்கு என்ன பத்தி பேச." என்று திரிஷ்யாவிடம் கேள்வி துளைத்தான். திரிஷ்யா வேதாந்த் அள்ளி வீசுப்போகும் நெருப்புகளை அறியாமல், "ஏன் இவங்களுக்கு தகுதி இல்லைன் சொல்லற" என்று கோபமாய் நின்றாள். தான் நியாயம் கேட்க அழைத்து வந்தவர்களையும் இகழ்கின்றானே என்ற கோபம். ...