Posts

மொச்சை கத்திரி பொரியல்

Image
🍆🌱 தேவையான பொருட்கள்: பிஞ்சுக் கத்திரிக்காய் – சிறிய துண்டுகளாக வெட்டிய பச்சை மொச்சை – வேகவைத்தது வெங்காயம் நறுக்கியது இஞ்சி பூண்டு விழுது மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள் கடுகு, உளுந்தம் பருப்பு கருவேப்பிலை, கொத்தமல்லி எண்ணெய், உப்பு 🔥 செய்முறை: தாளிக்கவும் – எண்ணெயில் கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். வதக்கவும் – வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து நன்கு வதக்கவும். மசாலா சேர்க்கவும் – மஞ்சள், மிளகாய், தனியா தூள் சேர்த்து கிளறவும். காய்கள் சேர்க்கவும் – வெட்டிய கத்திரிக்காய், வேகவைத்த மொச்சை சேர்த்து நன்கு வதக்கவும். மூடி வேகவைக்கவும் – சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வைத்து மிதமான தீயில் வேகவைக்கவும். முடிவில் – கொத்தமல்லி தூவி பரிமாறவும். இந்த பொரியல் சாதம், சாம்பார், ரசம் போன்றவற்றுடன் சுவைத்தால் நன்றாக இருக்கும். 

உருளைகிழங்கு பொரியல்

Image
  🥔 தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 3 (மீடியம் அளவு) எண்ணெய் – 3 ஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் உளுந்து – 1 துண்டு கருவேப்பிலை கொஞ்சம் வெங்காயம்-ஒன்று மஞ்சள் தூள்-கால்டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு பெருங்காயம்-சீரகம் -மல்லி தழை சிறிதளவும்  🍳 செய்முறை: உருளைக்கிழங்கை நன்றாக கழுவி, சிறிது சிறிதான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் உளுந்து கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் வெட்டிய வெங்காயம் பொன்னிறமாக வதக்கி  உருளைக்கிழங்கை சேர்த்து, மிளகாய் தூள் மற்றும் உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு கிளறி வதக்கவும். கடைசியில் சீரகம் மல்லி தழை  துவவும் உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும் இறக்கி பரிமாறவும். இரெண்டு பல் பூண்டு சேர்த்து வதக்க மணக்கும்.  இந்த உருளைக்கிழங்கு பொரியல் சாதம், சாம்பார், ரசம் போன்றவற்றுடன் சிறப்பாக பொருந்தும் 😋

தொப்பி வியாபாரியும் குரங்குகளும்

  🐒 தொப்பி வியாபாரியும் குரங்குகளும்   ஒரு நாள், ஒரு தொப்பி வியாபாரி தனது தொப்பிகள் நிறைந்த கூடையைத் தலையில் தூக்கி விற்பதற்காகப் பாதையில் நடந்து சென்றான். வெயிலில் களைப்பாகி, ஒரு மரத்தின் கீழ் தூங்கினான். அந்த மரத்தில் சில குரங்குகள் இருந்தன. வியாபாரியின் கூடையைப் பார்த்த குரங்குகள், அதிலிருந்த தொப்பிகளை எடுத்து , தங்களது தலையில் போட்டுக்கொண்டு மரத்தின் மேலே ஏறின. வியாபாரி எழுந்ததும், தொப்பிகள் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தான். மரத்தில் குரங்குகள் தொப்பி போட்டிருப்பதைப் பார்த்ததும், அவன் தன் தொப்பியை எறிந்தான் . குரங்குகள் அவனைப் பின்பற்றி தங்கள் தொப்பிகளையும் கீழே எறிந்தன! வியாபாரி மகிழ்ச்சியுடன் எல்லா தொப்பிகளையும் திரும்பப் பெற்றுக் கொண்டு தனது வியாபாரத்தைத் தொடர்ந்தான். 📘 பாடம் (Moral of the Story) : புத்திசாலித்தனமாக யோசித்தால் எந்த பிரச்சனையும் தீர்க்கலாம்.

கழுத்து வலிக்கான வைத்தியம்

  🏠 வீட்டு வைத்தியங்கள் வெந்நீர் ஒத்தடம் (Hot Pack) : கழுத்து பகுதியில் வெந்நீர் துணி வைத்து ஒத்தடம் கொடுத்தால் தசைகள் தளர்ந்து வலி குறையும். ஐஸ் பேக் (Cold Pack) : வலி அதிகமாக இருந்தால் ஐஸ் துணி வைத்து ஒத்தடம் கொடுத்தால் வீக்கம் குறையும். மென்மையான பயிற்சிகள் : கழுத்தை மெதுவாக சுழற்றும், மேலே கீழே நகர்த்தும் பயிற்சிகள் தசை விறைப்பை குறைக்கும். உயரமான தலையணை தவிர்க்கவும் : தூங்கும்போது கழுத்து நேராக இருக்கும்படி தலையணையை தேர்வு செய்ய வேண்டும். தூக்க முறையை சரிசெய்யவும் : பக்கவாட்டில் அல்லது முதுகில் நேராக தூங்குவது சிறந்தது. ⚠️ எச்சரிக்கைகள் வலி தொடர்ந்து நீடித்தால், அல்லது கை/கால் பகுதியில் உணர்விழப்பு, பலவீனம் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம் . தவறான உட்காரும் நிலை, நீண்ட நேரம் மொபைல்/கம்ப்யூட்டர் பயன்படுத்துவது போன்றவை வலியை அதிகரிக்கலாம்.

Homemade ஸ்டாபெர்ரி ஐஸ்கிரீம்

Image
🍓 ஹோம் மேட் ஸ்டாபெர்ரி  ஐஸ்கிரீம் ஸ்டாபெர்ரி -தேவைக்கு தேவைக்கு ஏற்ப banana, watermelon mango என்று மாற்றி கொள்ளலாம்.  கொழுப்பு நிறைந்த பால் – 1 கப் சர்க்கரை அல்லது milkmaid cream  🍨 செய்முறை: ஸ்டாபெர்ரி , சிறு துண்டுகளாக வெட்டவும். இந்த துண்டுகளை 3–4 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். பிறகு மிக்ஸியில் ஸ்டாபெர்ரி துண்டுகளை நன்றாக அரைக்கவும். அதனுடன் பாலை சேர்த்து மீண்டும் நன்றாக அரைக்கவும். இந்த கலவையை ஒரு டப்பாவில் ஊற்றி, 1–2 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். பிறகு ஸ்கூப்பில் எடுத்து பரிமாறலாம்! இந்த ஐஸ்கிரீம் குழந்தைகளுக்கு மிகவும் சுகாதாரமானதும், ரசிக்கத்தக்கதுமானதும் ஆகும். 🎉 

குழந்தைகளுக்கான மொஜிட்டோ

Image
  இங்கே ஒரு குழந்தைகளுக்கேற்ற மொஜிட்டோ (Virgin Mojito) செய்முறை  🥤 தேவையான பொருட்கள்: எலுமிச்சை – 1 (நறுக்கி பிழிந்து கொள்ளவும்) நீங்கள் விரும்பினால், தர்பூசணி, ரோஸ் அல்லது ஸ்பிரைட் அடிப்படையிலான மொஜிட்டோ வகைகளையும் முயற்சி செய்யலாம். புதினா இலைகள் – 8–10 சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன் (அல்லது சுவைக்கு ஏற்ப) உப்பு – 1 சிட்டிகை சோடா அல்லது ஸ்பிரைட் – தேவையான அளவு ஐஸ் கட்டிகள் – 4–5 பெப்பர் மிண்ட் போலோ மிட்டாய் – 1 (தூள் செய்து கொள்ளலாம் – விருப்பப்படி) 🍹 செய்முறை: ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை பிழிந்து, புதினா இலைகள், சர்க்கரை, உப்பு மற்றும் போலோ மிட்டாய் தூள் சேர்க்கவும். இதனை நன்கு பிசைந்து, சாறு வெளியேறும்படி செய்யவும். ஒரு கண்ணாடி டம்ளரில் ஐஸ் கட்டிகள் போடவும். பிசைந்த கலவையை அதில் ஊற்றி, மேலாக சோடா அல்லது ஸ்பிரைட் ஊற்றவும். சிறிது புதினா இலை மற்றும் எலுமிச்சை துண்டுகள் கொண்டு அலங்கரிக்கவும். இது வெயில் காலத்தில் ஜில்லென்று இருக்கும் ஒரு சிறந்த பானம்! 🎉

பேபிகார்ன் பாஸ்தா

Image
   பேபி கார்ன் பஸ்தா செய்முறை தேவையான பொருட்கள்: பேபி கார்ன் – 10–12 (நறுக்கி வேகவைத்தது) பாஸ்தா – 1 கப் (penne, fusilli அல்லது macaroni) வெங்காயம் – 1 (நறுக்கியது) தக்காளி – 2 (அரைத்தது) பூண்டு – 3 பற்கள் (நறுக்கியது) பாஸ்தா சாஸ் – 2 மேசைக்கரண்டி (optional) மிளகாய்த்தூள் – ½ மேசைக்கரண்டி மஞ்சள்தூள் – ¼ மேசைக்கரண்டி கரம் மசாலா – ½ மேசைக்கரண்டி எண்ணெய் – 2 மேசைக்கரண்டி உப்பு – தேவையான அளவு கொத்தமல்லி – அலங்கரிக்க செய்முறை: பாஸ்தாவை வேக வைக்கவும் – உப்பு சேர்த்த நீரில் பாஸ்தாவை 8–10 நிமிடம் வேக வைக்கவும். வடிகட்டி வைக்கவும். பேபி கார்னை வதக்கவும் – ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பூண்டு வதக்கவும். பிறகு தக்காளி, மசாலா தூள்கள், உப்பு சேர்த்து வதக்கவும். பாஸ்தா சேர்க்கவும் – வதங்கிய மசாலாவில் பேபி கார்ன் மற்றும் வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து நன்கு கிளறவும். சாஸ் சேர்க்கவும் – விருப்பமிருந்தால் பாஸ்தா சாஸ் சேர்த்து 2 நிமிடம் சிம்மில் வதக்கவும். அலங்கரிக்கவும் – கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

தேவதையும் விறகுவெட்டியும்

                                  தேவதையும் விறகுவெட்டியும் ஒரு ஊரில் ஒரு விறகு வெட்டி இருந்தான். அவன் ஒரு நாள் குளத்து ஓரமாக மரங்களை வெட்டிக்கொண்டிருக்கும் போது, அவனுடைய கோடரி தவறி குளத்தில் விழுந்து விட்டது. அவன் குளத்தங்கரையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தான். அவன் அழுகையைக்கண்டு மனம் இரங்கிய அந்த குளத்தில் குடியிருக்கும் தேவதை அவன் முன்பே தோன்றி, “ஏன் அழுகிறாய்? உனக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்டது. அவன் உடனே தன்னுடைய கோடரி குளத்தினுள் விழுந்து விட்டதைக் கூறினான். கோடரி இல்லாவிட்டால் தன்னுடைய வாழ்க்கையை ஓட்டுவது மிகுந்த சிரமம் என்று கூறி அழுதான். உடனே தேவதை குளத்தில் மூழ்கி ஒரு தங்கக் கோடரியை எடுத்து வந்து அவனிடம் காட்டி “இது உன் கோடரியா?” என்று கேட்டது. அவர் நேர்மையாக “இது என்னுடையது இல்லை” என்றான். அடுத்ததாக ஒரு வெள்ளிக் கோடரியை எடுத்து வந்து காட்டியது. “இதுவும் என்னுடையது இல்லை” என்றான் விறகுவெட்டி. இறுதியாக தேவதை அவனுடைய இரும்புக் கோடரியை எடுத்து வந்து காட்ட “இதுதான் என் கோடரி” என்றான் விறகுவெட்டி. அ...

இஞ்சியில் இத்தனை மருத்துவமா?

  இஞ்சியை கறிக்கு டீக்கு பெரும்பாலும் யூஸ் பண்றோம். ஆனால் இஞ்சி இருந்தால் உங்களுக்கு எவ்வளவு வெட்டி செலவு மிச்சம் தெரியுமா? நோய்களை நீக்குவதில்  இஞ்சி ஒரு சமையலறை மருத்துவர்! 1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு  இளைக்கும். 2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். 3. இஞ்சியை சுட்டு சிறிது உப்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள்  தீரும். 4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம்  ஏற்படும். 5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும். 6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும். 7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த  தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும். 8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில்  கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும். 9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெ...

ஆண் குழந்தை பெயர்கள்

                  ஆண் குழந்தை பெயர்கள் (தொகுக்கபபட்டவை) அகில் சந்தோஷ் நிவாஸ் லிஷாந்த் அக்சரன் சபரீஷ் நீரஜ் லீலாதர் அக்னிகா சமரன் நீலேஷ் லோகஜித் அக்னிவேஷ் சமேஷ் நேத்ரன் லோகேஷ் அக்ஷ்()ந்த் சரண்யு பத்ரி லோகேஷ்வர் அக்ஷ்()யகுணா சரோஜ் பத்ரிபிரசாத் லோஹித் அச்சுதன் சர்வஜித் பத்ரீஷ் வசந்த் அச்யுத் சர்வின் பரத் வம்சி அதர்வா சர்வேஷ் பரேஷா வம்சிகிருஷ்ணா அதீஷா சஸ்வின் பர்வத் வருண் அதீஷா சஷ்டிக் பர்வேஷ் வஜ்ரேஷ் அத்ரி சஷ்வந்த் பல்ராம் வாஜின் அத்வைத் சாத்விக் பாகுபலி விகாஷ் அபிக் சாந்தனு பாக்யராஜ் விக்கி அபிநந்தன் சாம்ராஜ் பார்கவா விக்ராந்த் அபியுதய் சாய்கணேஷ் பார்த்திவ் விசாகன் அபினவ் சாய்கிரண் பாலேஷ் விதுல் அபினேஷ் சாய்கிருஷ்ணா பாவித்யா வித்யாசங்கர் அபு சாய்குமார் பிக்ரம் வித்யாசரண் அமர் சாய்சங்கர் பிபின் விபின் அமர்நாத் சாய்சரண் பிரகாஷ் விபு அரஷ் சாய்நாத் பிரசன்னா வியாஷ் அருண் சாய்பிரசாத் பிரசாத் விலாஸ் அவனீஷ் சாய்பிரசாந்த் பிரசாந்த் வினய் அவ்யுக்த் சாய்ராம் பிரணய் வினித் அஜய் சித்தார்த் பிரணவ் வினீத் அஜய்குமார் சிபி பிரணீத் வினு அஸ்வத் சிமின் பிரதாப் வின...