நின் பார்வை தவமல்லவா (புத்தக அறிவிப்பு)
ராணிமுத்து வெளியீடு (புத்தக அறிவிப்பு)
💝நின் பார்வை தவமல்லவா!💝
டாக்டர் செழியன் வர்ஷனி இருவரது மென்காதல் காதை.
'செழியன் இங்க தான் தங்கியிருக்கார். அவருக்கு இன்னமும் கல்யாணமாகலை. அவரிடம் அதிகமா பேசினா, என்னை மீறி அவர் தோளில் சாய்ந்து அழுதுடுவேன்.
உடனே ஓடி வந்தது தான் சரி.' என்று முடிவெடுத்தாள்.
செழியனோ அறைக்கு வந்தவன், 'இங்க தான் ஏதோவொரு ரூம்ல வர்ஷினி இருக்கா. அவளிடம் மறுபடியும் பேசணும்.' என்றவன் இன்விடேஷனை தேடினான்.
அதில் கலந்துக்கொள்ள வந்தவரின் பெயர் பட்டியலை வாசித்தான்.
'V.Varshini M.B.B.S M.D என்ற பெயரை கவனித்தான்.
இந்த பெயரால் எத்தனை குழப்பம். முதலில் அவளது எண்ணை எப்படி கண்டறிய?' என்றவனுக்கு சிரமம் கொடுக்காமல் வர்ஷனியே அழைத்து விட்டாள்.
அவளுக்கு ஆர்யனின் எண் அவளது அலைப்பேசியில் பதிவு செய்திருந்ததால், உடனடியாக ஆர்யனுக்கே நம்பரை போட்டு, செழியன் எண்ணை கேட்டு இதோ அழைத்துவிட்டாள்.
ஆர்யனுக்கு இவளது எண் தெரியாது. அதனால் செழியன் கேட்டப்போது கொடுக்க முடியவில்லை. தற்போது வர்ஷினியே கேட்டதும் ஆர்யன் ஏன்? எதுக்கு? என்ற காரணமின்றி கொடுத்துவிட்டான். அவன் தான் செழியனின் விவரம் அறிந்தவன் ஆயிற்றே.
செழியன் புது எண் என்று போனை எடுத்ததும். "ஹலோ டாக்டர் செழியன் இயர்" என்றதும், "நான் வர்ஷினி பேசறேன். ஆர்யன் அண்ணாவிடமிருந்து நம்பரை வாங்கினேன்." என்று படபடவென உரைத்தாள்.
"வர்ஷினி... இது உன் நம்பரா?" என்று கனவா நினைவா என்பதாக கேட்டான்.
முன்பு போலவே "ஆமா... என் நம்பர். பழைய நம்பர் நான் உபயோகப்படுத்தறது இல்லை." என்றாள். அது தான் செழியனுக்கு நன்றாக தெரியுமே. எத்தனை முறை அழைத்து பார்த்து, சலித்து, அவள் மட்டுமாவது நன்றாக இருக்கட்டுமென்று நினைத்தான்.
"சாரி... பேசிட்டே இருந்துட்டு அப்படியே அனிதா கூப்பிடவும் வந்துட்டேன். என்னை தப்பா எடுத்துக்காதிங்க." என்று மன்னிப்பு கேட்டாள் வர்ஷினி.
"பரவாயில்லை... நீயும் இங்க தானே தங்கியிருக்க? சந்திக்கலாமா?" என்றான் செழியன்.
அவளிடம் பேசியபின்னே தவறாக கேட்டுவிட்டோமோ? அவளுக்கு கணவன், குழந்தை என்று இருந்தால்?
ஆனால் தான் தவறாக எண்ணி சந்திப்பை நாடவில்லை என்ற உண்மையும் எடுத்துரைத்தது மனம். நீண்ட வருடமாக பார்க்காதவளை பார்த்ததில் செழியன் கேட்டதில் தவறில்லையே. அவன் வாழும் இந்த உப்பு சப்பில்லாத வாழ்க்கை, இந்த சந்திப்பால், மாறினாலும் மாறுமே.
வர்ஷினியோ "அதுவந்து... ஈவினிங் வேண்டுமின்னா சந்திக்கலாம். இப்ப உடனே உடனேனா... அனிதா என்னை ஆயிரம் கேள்வி கேட்பா" என்று தன்னிலையும் விவரித்தாள்.
செழியனும் அவளது நிலைமை புரிந்து, "இட்ஸ் ஓகே... நாம ஈவினிங் சந்திக்கலாம்." என்று கூறி, பரஸ்பரமாக போனை துண்டித்து கொண்டனர்.
வர்ஷினி போனை துண்டித்தப்பின், 'இதுக்கு முன்ன எத்தனை முறை அவரிடம் உரிமையா பேசியிருக்கேன். அப்ப எல்லாம் பட்டர்பிளை பறக்கற மௌமெண்ட்ஸ்.
எங்களுக்கு கல்யாணம் பேசி முடிச்சியிருக்க, எப்படியெல்லாம் பேசியிருக்கோம். அதெல்லாம் மறந்து சாதாரணமா அவரிடம் என்னால எப்படி பேச முடிந்தது.
கல்யாணம் குழந்தை... அதுவும் இரண்டு குழந்தை வேண்டும்னு அவர் எவ்ளோ ஆசையா என்னிடம் கேட்டு பேசியிருக்கார்.
தானுமே வெட்கமில்லாமல் 'செழியன் நீங்க ரொம்ப மோசம் போனை வையுங்க' என்று சிணுங்கி உச்சரித்து போனை துண்டிக்காமல் குழைவாக கிறக்கமாக எத்தனை கதை பேசியது. அந்த நாட்கள் எல்லாம் மறந்து, அவரை மறந்து இத்தனை வருடம் எப்படி கடத்தினேன்.' என்று கண்ணாடியில் தன் பிம்பத்தை கண்டாள்.
அனிதாவுக்கு தனியறை, தனக்கும் தனியறை என்பதால் தன்னிலை யாருமறியாது மனதோடு அல்லவா உறவாடுகின்றது.
இன்று அளவிற்கு அதிகமாக உன் முகம் ஆனந்தம் கொள்கின்றது. கனவில் உறவாடி பேசி மகிழ்ந்தவனோடு நேரில் நீண்ட வருடம் கழித்து பேசினேன். ஏனோ மனம் இறகு போல இதமாக உணர்கின்றது.
அவருக்கு இன்னமும் மணமாகவில்லை.' என்று மகிழ, அடுத்த நொடியே 'எப்படி திருமணம் அமையும். அவரது வாழ்க்கையை தான் மேடை போட்டு அவமானம் படுத்திவிட்டாயே' என்று எண்ண அங்கிருந்த மேஜையில் அமர்ந்து குலுங்கி அழுதாள்.
எத்தகைய அவமானம் ஒரு ஆண்மகனை அந்த இடத்தில் நிற்க வைத்து அவமானப்படுத்தியிருக்க கூடாது.
அவர் அதை அவமானமாக கருதினாலும், தன்னை ஒருவார்த்தை கடியவில்லையே. தன் தந்தையை உயர்த்தி மதிக்கின்றார். ஆனால் அவரது குடும்பத்தோடு வாழவில்லை என்றாரே. அவருடைய அம்மாவிடம் பேசி பத்து வருடத்திற்கு மேலானது என்றாரே ஏன்?
பத்து வருடமென்றால் அது என்னால் மட்டுமே. இதுக்கூட புரியாதவளா?
மேலும் கதை பற்றி இன்று செப்டம்பர்-16 ஆம் தேதி வெளியாகும் ராணிமுத்து இதழை வாங்கி வாசித்து பாருங்க. விலை 10/- ரூபாய் மட்டுமே.
யாராவது கதை படித்து வாசித்தால் உங்கள் அபிப்ராயத்தை வழங்குக.

Comments
Post a Comment