அழகிய அருவி , அருகினில் ஓடம் ஆகாய மேகம் , ஆளவரும் சூரியன் . இசைக்கும் குயில்கள் , இன்சுவை கனிகள் . ஈரம் கொண்ட தாமரை -அதற்மேற் ஈர நிர் பனித்துளிகள் , உறங்க வைக்கும் தென்றல் , உரிமையிடும் மலர்வாசம் . ஊஞ்சலிடும் மர விழுது , ஊர்ந்து செல்லும் வண்ணத்துப்பபூச்சி. என்னையே மறந்தேன். எழுதும் சில கவிகளில் , ஏற்றம் கொண்ட வானவில் , ஏணியாக உயர சொல்லும் . ஐயம் இன்றி உளவுவேன் , ஐம்பூதம் துணையுடன் , ஒரு தனிமை உலகில் , ஒருத்தியாய் மண்ணில் , ஓங்கிய மூங்கில் , ஓதும் வண்டுகளின் ரிங்காரம் . ஔவை கூட வாழவில்லை ஔவை கூட நினைக்கவில்லை அஃ கணமே வாழ்வோம் அஃதுவே வாழ்க்கை . -- பிரவீணா தங்கராஜ் .