பஞ்ச தந்திரம்-1
தந்திரம்-1 இடம் : மெரீனா கடற்கரை தன்னந்தனியா அங்குமிங்கும் மக்களை பார்த்து கொண்டிருந்தாள் அவள். இந்த பரந்த கடற்கரையில் இவளை போல தனியாக யாரும் கடற்கரை ரசிக்க வந்திருப்பார்களா என்று கணக்கெடுத்தால் நிச்சயம் புள்ளிவிவரப்படி பூஜ்ஜியமாக காட்டலாம். ஆம் அவள் வயது அப்படி. ஆறு வயதானவள் தனியாக கடற்கரைக்கு வந்து உட்கார்ந்து விட்டாள். அவள் வயதிற்கு மணலில் வீடுகட்டி மகிழலாம். இல்லையென்றால் சிப்பி பொறுக்கி குதுகலிக்கலாம், இரண்டுமில்லையென்றால் கடற்கரை அலையில் கால் நனைத்து நுரையோடு விளையாடி சிரிக்கலாம். எதையும் செய்யாமல் இந்த கடல் நீரில் மூழ்கினால் எப்படி மூச்சடைக்கும். மேலே எழும்பால் நீருக்குள் மூழ்கி இழுத்து சென்று கொஞ்சம் கொஞ்சமாய் உயிர் போகுமோ என யோசித்துக் கொண்டிருந்தாள். இந்த வயதில் இந்த எண்ணம் கூடாது தான். ஆனால் சிந்தித்திருந்தாள் குழந்தையவள். அருகேயிருந்த பெண் மெலிதாய் சிரிக்க முகத்தைத் திருப்பிக் கொண்டாள் குழந்தை(சிறுமி) தனுஜா . ஏதோவொரு ஆர்வம் மேலோங்க தனுஜா மெதுவாய் பக...