நீ என் முதல் காதல் -30
அத்தியாயம்-30 தங்கள் மகனும் மகளும் கூடவேயிருக்க ஆசைக்கொண்ட தாரிகாவிற்கு கரும்பு திண்ண கூலியா வாடி ராசாத்தி என்று கூப்பிட, பைரவும் மகன் வந்ததும் திருமணம் முடித்து இங்கே வந்ததால் கூடவே இருந்து திருமண ஜோடியை கண்குளிர பார்க்க ஆசைக் கொண்டார்கள். அதன் காரணமாக மதிய விருந்து முடித்து ஸ்ரீநிதி ம்ருத்யுவை கையோடு அழைத்து சென்றனர். ரிதன்யா காலையில் அப்படியே பள்ளிக்கூடம் சென்றதால் ஸ்ரீவினிதா லலிதாவும் பேரன் பேத்தியோடு சென்றனர். ஸ்ரீநிதியை தனியாக அறையில் நிற்க வைத்து, "இங்க பாரு நான் யாருனு எங்கப்பா அம்மாவிடம் சொல்லணும்னு தானே ஊருக்கு முன்ன கிளம்பற. ப்ளீஸ் அதுமாதிரி எதுவும் பண்ணிடாத. அவங்களாவது நிம்மதியா இருக்கட்டும். தயவு செய்து விவாகரத்து தந்துடறேன். நீ ஜீவி கூட வாழ்ந்துக்கோ" என்று ம்ருத்யுஜெயன் கூறவும் ஸ்ரீநிதியோ "கையை விடுடா" என்று கோபமாக மொழிந்துவிட்டு கடந்தாள். ம்ருத்யுவிற்கு ஸ்ரீநிதி தன் பெற்றோரிடம் உரைத்திடுவாளென பயம் வந்தது சில நொடியே. அதன் பின் "எப்படியும் நீ உண்மையை சொன்னா ஷண்மதி அத்தை உன்னை உண்டில்லைனு ஆக்கிடுவாங்க....