வாடகைதாரருக்கான முக்கிய சட்ட உரிமைகள்
வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கான சட்ட உரிமைகள் இந்தியாவில் மிக முக்கியமானவை. உங்கள் உரிமைகளைப் புரிந்துகொள்வது, எந்தவொரு சிக்கலிலும் பாதுகாப்பாக இருக்க உதவும். 🏠 வாடகைதாரருக்கான முக்கிய சட்ட உரிமைகள் வாடகை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட வேண்டும்: 11 மாதங்களுக்கு மேல் வாடகை ஒப்பந்தம் இருந்தால், அதை சட்டபூர்வமாக பதிவு செய்ய வேண்டும். சாதாரண காகிதத்தில் எழுதப்பட்ட ஒப்பந்தம் நீதிமன்றத்தில் செல்லாது. வீட்டின் உரிமையாளர் மோசடியில் ஈடுபட்டிருந்தால் இவை உங்களுக்கு பாதுகாப்பாக அமையும் உங்கள் அனுமதி இல்லாமல் வீட்டிற்குள் நுழைய முடியாது: வீட்டு உரிமையாளர் உங்கள் அனுமதி இல்லாமல் வீட்டிற்குள் நுழைவது சட்டவிரோதம். இது தனிப்பட்ட உரிமைக்கு எதிரானது. திடீரென வெளியேற்ற முடியாது :உரிமையாளர் திடீரென உங்களை வெளியேற்ற முடியாது. குறைந்தது 2 மாதம் முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும். அட்வான்ஸ் தொகைக்கு வரம்பு உள்ளது: உரிமையாளர் அட்வான்ஸ் தொகையை கேட்கலாம், ஆனால் அது சட்ட வரம்புக்குள் இருக்க வேண்டும். சில மாநிலங்களில் இது 3 மாத வாடகையை தாண்டக்கூடாது. வாடகை ரசீது பெறுவது உங்கள் உரிமை: நீங...