தீவிகை அவள்🪔வரையனல் அவன்🔥-5

🪔தீவிகை 🔥வரையனல்-5


      நாளை காலை ஆரவ்- ஜனனி திருமணம்.

     ஆரவ் எந்தவித ஆர்ப்பாட்டம் இன்றி தனது கல்லூரி தோழர்களுக்கு பேட்சுலர் பார்ட்டி வழங்கினான்.

   சந்துருவிற்கு தான் மனம் திக்திக்கென்று பதறியது.

    வைஷ்ணவி தெரிவித்தால் எப்படியும் அத்தை சுபாங்கினியிடம் எதையாவது உளறுவாள் என்றே அவளிடமும் எதையும் தெரிவிக்கவில்லை.

     ஜனனியோ தன் கைகள் செக்க சிவந்த மருதாணியை பார்த்து கொண்டு இருந்தாள்.

    சுபாங்கினி ஊரில் உள்ள இறைவனுக்கு எல்லாம் மகன் திருமணம் நல்லபடியாக முடிவடைய பிரார்த்தனை விடுத்தாள்.

     சுவாமிநாதன் தான், " அவனுக்கு நம்ம கம்பெனி புராஜக்ட்ல சீன் பண்ணி கொடுத்திருக்க கூடாது சம்யு. அவனுக்கு போய்... என்னமா நீ.."

    "டாட்... அது அவர் என்று தெரியாம சீன் பண்ணியது. அதுக்கு பிறகு மாற்ற முடியலை" என்றதும் சுவாமிநாதன் அவளை உறுத்து விழிக்க, சம்யு பார்வையை மாற்றினாள்.

    ஆப்பிளை கட் செய்ய ஆரம்பித்தாள்.

   "அவர்.... இன்னமும் மரியாதையா மா?" என்றதும் சம்யுக்தா தந்தையை நேரிடையாக பார்த்து அவர் நம்ம ஆபிஸ் வந்தப்ப ஆரவ் என்று எட்டி நின்று தான் பேசினேன். அதுலயே அவருக்கு கோபம் உச்சம் தொட்டு இருக்கும் போதுமா. அப்பா அவர் என்னோட வயசுல பெரியவர் அந்த அர்த்தத்துல கொடுக்கற மரியாதை." என்று ஆப்பிளை அறிந்தவளால் தற்போது உண்ண பிடிக்காமல்எட்டி வைக்க,

    "அந்த பொண்ணை வேலையிலிருந்து நிறுத்து"

    "நாளைக்கு நீங்களே வெற்றிலை பாக்கு வைத்து கூப்பிட்டலும் ஆரு அனுப்ப மாட்டான்." என்றதும் தன் நாக்கை கடித்து கொண்டாள். உதடு துடிக்க அதனை அழுத்த பற்களால் அழுத்த கடித்தாள்.

     வெளிப்படையாக அவன் பெயரை உச்சரித்த விட்டதால் அதற்கு தண்டனை போலும்.

     சுவாமிநாதன் அங்கும் இங்கும் உலாவி, "நாளைக்கு அந்த கல்யாணத்துக்கு போக போறியா சம்யு" என்று கேட்டதும்.

     "இல்லை... போகலை... அவ ஒரு ஸ்டாப் அவ்ளோ தான். அவளுக்காக போக மாட்டேன்" என்று தனதறைக்கு புகுந்தாள்.

     அவனை காண போக மாட்டாயா? என்று உள் மனம் கேட்க, இல்லை என்று தலையசைத்தாள்.

    அவன் இன்னொருத்திக்கு சொந்தமாவதற்கு முன் கடைசியாக பார்க்க செல்ல மாட்டாயா என்று கேட்கவும் அதற்கும் இல்லையென்று பதில் அசைத்தாள்.

     மூன்று வருடம் மறந்து மறுத்து போனது தற்போது அனலாக மாற்ற தலையனையில் புதைந்தாள்.

      நீ தான் அழுவாய் சம்யு அவன் அழ மாட்டான். அவன் பிடிவாதம் நீ அறியாததா. ஒன்றை எண்ணி முடிவு எடுத்தபின் விலகுவதை கையாள மாட்டான். ஏன் அப்படி யோசிக்கவும் மாட்டான். நாளை ஜனனி கழுத்தில் தாலி கட்டி சலனமேயில்லாமல் நிற்பான் என்றது அவளுள்ளம்.

    சுவாமிநாதன் பாலை எடுத்து வந்து மகளிடம் நீட்ட அவளோ வேகமாக கண்ணீரை துடைத்து வாங்கி பருகினாள்.

   சற்று நேரத்திலே உறங்க செய்தாள்.

   சுவாமிநாதன் கொடுத்த பாலில் தூக்க மாத்திரை உதவியால்...

    சுவாமி நாதன் தான் குறுக்கும் நெடுக்கும் நடையோ நடை நடந்தார்.

     நாளை மகள் செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். இதே போல காலையிலும் அவள் அருந்தும் பாலில் தூக்க மாத்திரை கொடுத்திட வேண்டியது தான் என்று சென்றார். 

      அடுத்த நாள் ஆரவ் பட்டு வேஷ்டியில் கம்பீரமாக நின்றான். தனது கைக்கடிகாரத்தை கட்டி முடித்து, தாய் சுபாங்கினி கொடுத்த செயினை அணிந்தான்.
  
    "என்ன எதுக்கு வைச்ச கண்ண எடுக்காம பார்க்குற?" என்றான் சந்துரு பார்ப்பதை உணர்ந்து,

    "நான் வைஷ்ணவி கொடுத்த கைகாப்பு கொடுக்க வந்தேன். நான் எங்க பார்த்தேன். காப்பு உனக்கு பொருந்துமா என்று அதை தானே பார்த்துட்டு இருந்தேன்" என்று பதிலை தந்துவிட்டு பயபுள்ள சுத்தி கண்ணை வைத்து வேவு பார்க்குது சந்துரு வாயை திறக்காதே. அமைதியா வேலையை பாரு டா என்று தனக்கு தானே சொல்லி கொண்டான்.

    கையை மடித்து கட்டிக் கொண்டு சந்துருவை உறுத்து விழிக்க அவனோ, "மச்சான் முறைக்கு இந்த காப்பு பிடி" என்று கையில் அணிவித்து ஓடினான்.

     மச்சான் முறைக்கு நான் தான் டா காப்பு பிரசண்ட் பண்ணுவேன்" என்ற சந்துரு முன்பு கல்லூரியில் புங்கை மரத்தடியில் சொன்னது நினைவு வர ஒரு இகழ்ந்த முறுவல் உதிர்த்து தலையை வாரினான்.

      அலைபாய்ந்த கேசம் அவனுக்கு அடங்காமல் அலைபாய மீசையை முறுக்கியபடி வெளியேறினான்.

     பெண் வீட்டார் வந்தவண்ணம் இருந்தனர். அவன் எதிர்பார்த்தது ஜனனியின் முதலாளியை. அவள் வந்து ஜனனி கழுத்தில் தான் தாலி அணிவிக்க சம்யுக்தா கண்ணால் பார்க்க வேண்டும் என்று எண்ணினான். உன்னை விடுத்து ஒருவளிடம் நான் இணைய போகின்றேன் என்பதை ஜம்பமாக அவளிடம் காட்டவே. 

       சந்துரு வீட்டு ஆட்கள் வர நினைவுகளை புறம் தள்ளி  வரவேற்றான்.

   தன் போனை தேட அறையில் விட்டு விட்டதை அறிந்து செல்ல போக ஜனனி குனிந்த தலையோடு மணமகள் அறைக்கு செல்ல அவளை கண்டு முறுவளித்தான். ஜனனியும் அதே புன்னகையை வீசி அறைக்குள் சென்றாள்.

     தன்னை மணமகன் கோலத்தில் புகைப்படம் எடுத்து வாட்ஸப் டிபி பிக்சராக வைத்தான்.

    இம்முறையும் கள்ளிச்செடியை கண்டவன் அது ஆன்லைன் இருப்பதாக காட்ட, மூன்று வருடம் ஆன்லைனில் வராத அந்த எண் சிறிது நாட்களாக வருவதை எண்ணி சந்தோஷப்படவும் முடியவில்லை.

    "ஆரவ் கிளம்பு. அத்தை கோவிலுக்கு கூப்பிட்டாங்க டா." என்றதும்

     "இப்ப எதுக்கு கோவிலுக்கு?"

     "அடேய் தட்டு எடுத்துட்டு சாமி சந்நிதியில வைத்து மாப்பிள்ளையை மேளத்தாளத்துல அழைச்சிட்டு வரணும். எனக்கு பண்ணினப்ப நீ எங்க போன?" என்று கூப்பிட தான் அக்கணம் மறந்து போனதை எண்ணி சந்துரு கூட நடையிட்டான்.

      இரண்டாவது தெருவில் இருந்த விநாயகர் கோவிலுக்கு சென்று தட்டை சந்நிதியில் வைத்து வணங்க, ஒவ்வொருத்தரும் பக்தியோடு வேண்டி முடித்து நின்றனர்.

     ஆரவ் மட்டும் யாருக்கோ கல்யாணம் என்ற ரீதியில் கையை கட்டி வேடிக்கை பார்க்க ஐயரோ ஆரவை வித்தியாசமாக நோட்டமிட, சுபாங்கினி தான், "ஆரவ் தொட்டு கும்பிட்டு இந்த பணத்தை தட்டில போடு" என்றதும் பணத்தை மட்டும் போட்டுவிட்டு திரும்பிக் கொண்டான்.

      மும்முறை சுற்றி வந்து தட்டை சுமந்த பெண்கள் அதனை எடுக்க சுபாங்கினி நெற்றியில் விபூதி கீற்றை சின்னதாக பூசி விட, அப்படியே நின்றான்.

    சந்துரு தான் "டேய் போகலாம்." என்றதும் நடந்தான்.
  
     மணமகளின் வீட்டில் ஆரத்தி சுற்றி வரவேற்க, அவர்களுக்கு ஆளுக்கு ஒரு பரிசை வழங்கினான்.

     கடைசியாக ஆரத்தி சுற்றி பெண் கையில் வைத்து இருந்த மையை கன்னத்தில் வைத்து எடுக்க அவனுக்கு திருஷ்டி பொட்டாக அமைந்தது.

     சுபாங்கினி வைஷ்ணவி சந்துரு என்று சுற்றி இருக்க, தட்டை மேடையில் வைத்து ஆரவ் மணமகனாக அமர்ந்தான். ஐயர் ஓதும் மந்திரங்களை வெகு சிரத்தையோடு சொன்னான்.

     அக்கணம் பெண் வீட்டில் ஜனனியின் தாய் தந்தையர் பதட்டமாக இருந்தனர். ஒருவருக்கு ஒருவர் பயத்தில் நடுங்க, எது வந்தாலும் தங்களே பதில் கூற வேண்டுமே என்று தயங்கி தயங்கி வந்தார்கள்.

    அதே கணம் சம்யுக்தா தனது வெள்ளை நிற காரில் இருந்து காட்டன் பட்டணிந்து தங்க பதுமையாக வந்திறங்கினாள்.

     தூரத்திலே ஆரவினை கண்டவளால் அவனை இரசிக்க தான் முடிந்தது.

     தன் மனதை காட்டி கொள்ளாமல் நடந்து வந்தவளை ஆரவ் கண்கள் அவளை பார்த்துவிட்டு மணப்பெண்ணின் வாயிலை நோக்கினான்.

    அங்கு மணப்பெண்ணின் தாய் தந்தையர் விழிப்பதை கண்டவனுக்கு ஏதோ சரியில்லையோ என்று புரிந்தாலும் எழுந்து கேட்க இயலாத நிலை. 

     ஆனால் சுபாங்கினி காதில் வைஷ்ணவி என்னவோ கூற சுபாங்கினி அவசரமாக ஜனனியின் தாயாரிடம் வந்து ஜனனி எங்கே என்று கேட்க, அவர்களோ...

    "இவ்வளவு நேரம் இருந்தா சம்மந்தி. இப்ப தான் காணோம்" என்று பதறவும் சுபாங்கினி சம்யுக்தாவை பார்க்கவும் சரியாக இருந்தது.

   சுபாங்கினி வேகமாக வந்து, எங்கடி என் மருமகள்? ஜனனி எங்க ஒளித்து வைத்து இருக்க சொல்லு... உன் சகவாசமே வேண்டாமென்று ஒதுங்கி போனாளும் எதுக்கு டி ஏழரை மாதிரி என் மகனை விடாம துரத்தும்?" என்று சினத்தில் கத்தவும் ஆரவ் மேடையில் இருந்து எழுந்து வந்தான்.

    "என்ன மா பிரச்சனை பண்ணற? அவ ஜனனியோட எம்டி அதனால திருமணத்துக்கு வந்து இருக்கா. தடை செய்ய வந்திருக்க மாட்டா" என்று கூறவும் சம்யுக்தாவிற்கு கண்ணிர் துளிகள் கன்னத்தில் உருண்டது.

     "நல்லா இருக்கு டா... என்னடா ஜனனியை காணோமே என்று சொன்னப்ப கூட இவ மேல சின்ன சந்தேகம் தான் வந்தது. ஆனா இவ தான் ஜனனியோட முதலாளி என்றதும் நல்லா தெரிந்திடுச்சு. இவ தான் ஜனனியை கடத்தி வைத்து இருக்கணும். இல்லை இவ வேண்டமென்றே அவளை வைத்து உன்னை பழி வாங்க வந்திருக்கணும்" என்றதும் ஆரவ் சம்யுக்தாவிடம் திரும்பி,

     "அம்மா சொல்லறது உண்மையா சம்யுக்தா" என்று கேள்வி எழுப்ப, ஆரவ் குரலில் தன் பெயர் விழவே கண்ணீரோடு இல்லை என்று தலையாட்டினாள்.

    "அம்மா மண்டபம் முழுக்க தேடி பாருங்க இருப்பா" என்றான்.

    "இல்லை தம்பி... இருபது நிமிடமா தேடறோம். அவளை காணோம். இதுல அவ போன் சுவிட்சாப் பண்ணி இருக்கா." என்று ஜனனி தாயார் பதிலுரைக்க,

      "எங்களை மன்னிச்சுடுங்க தம்பி முகூர்த்த நேரத்துல இப்படி அசம்பாவிதம் நடந்ததுக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன்" என்று ஜனனி தந்தை கூறவும், சம்யுக்தாவை திரும்பி பார்க்க, அவளோ அவன் பார்வையின் பொருள் புரிய ஜனனி பரிசு கொடுக்க தான் வந்தேன். எனக்கு அவள் எங்கென்று தெரியாது. எனக்கு இதுல சம்மந்தம் இல்லை ஆரு" என்றாள்.

     கண்களை இறுக மூடித் திறந்தவன் போன் அழைப்பு அம்மண்டபத்தினை ஓசையெழுப்பியது.

    நம்பர் என்றதும் எடுத்து காதில் வைக்க, அதில் சுவாமிநாதன் "என்னடா மணக்கோலத்தில் மணப்பெண் இல்லாமல் தவிச்சு போறியா... ஊரே காறி துப்பி உனக்கு என்ன குறை என்று பேசணும் டா. அதான் ஜனனியை கைக்குள் போட்டுக்கிட்டேன். அவமானப்படு... ஜென்மத்துக்கும் இது போதும் டா..." என்று சிரிக்க, ஆரவ் பொறுமையாக எதிரில் இருந்தவளை பார்த்து,

     "தப்பு பண்ணிட்டிங்க. ஜனனியை உங்க கைக்கு போட்டது சூப்பர் பிளான். பட் உங்க பெண்ணை இங்க என்னை சீண்டி பார்க்க அனுப்பி இருக்க கூடாது. இப்ப பாருங்க அவ கழுத்துல தாலி கட்டி உங்களுக்கு பிபி ஏற்ற போறேன்." என்று போனை அணைத்தவன் சம்யுக்தா கரத்தை பற்றி இழுத்து வந்து மணமேடையில் அமர வைத்தான்.

     உங்க அப்பாவும் நீயும் செய்த தண்டனைக்கு நீ என் மனைவியா அடிமைபடுவதை தவிர வேற வழியில்லை. உன் திருமணத்தை கண்ணால பார்க்கற கொடுப்பினை கூட உங்க அப்பாவுக்கு கொடுக்க போறது இல்லை. ஐயரே தாலி கொடுங்க" என்று நீட்ட அவரோ என்னவோ குளறுபடி என்று எண்ணி தயங்க ஆரவோ தயங்கமின்றி சம்யுக்தா கழுத்தில் தாலி கட்டினான்.

     "ஆரவ் என்ன பண்ற?" என்று சுபாங்கினி அதிர்ச்சியாக, வைஷ்ணவிக்கு யார் இந்த பெண் அண்ணா விரும்பியவளா? என்று சந்துருவை பார்க்க, சந்துருவோ நிம்மதியாக சந்தோஷம் கொண்டு சிரிப்பதை கண்டாள் 

     சுவாமிநாதன் தன் மகள் அறையில் சென்று பார்க்க, அங்கே தலையணையால் அடுக்கி வைத்து சம்யுக்தா உறங்குவதை போல வைத்து சென்றதை எண்ணி தலையிலடித்து ஆரவிற்கு மீண்டும் அழைக்க அங்கே போனை எடுத்தவன்,

     "என்ன சுவாமிநாதன் மிஸ்ஸஸ் சம்யுக்தா ஆரவோட பேசறீங்களா? என்று கேட்க நடுங்கி போனார்.

    அவரோ ஆரவ் அவளை விட்டுடு அவளை எதுவும் செய்யாதே. அவளுக்கு எதுவும் தெரியாது." என்ற வார்த்தைகள் கேளாது கட் செய்து சம்யுக்தாவை அறைந்து நின்றான் ஆரவ்.

-வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

   - பிரவீணா தங்கராஜ்.

     
   

    

   

    
   
    

Comments

  1. Iyyo pavam samyuktha ava appa seithathuku avaluku adikirane.

    ReplyDelete
  2. செம்ம! ஆனால், ஜனனி ஏன் இப்படி செய்தாள்?

    ReplyDelete
  3. Pavam samyuktha... Aana avanga marriage aanathula chanthuru ku than happy.... Story super sis...

    ReplyDelete
  4. நினைத்தேன். சம்யூ தான் ஹிரோயின். சரி இந்த ஜனனி ஏன் இப்படி செய்தா?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நீ என் முதல் காதல் (On Going)

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

பிரம்மனின் கிறுக்கல்கள்