தீவிகை அவள்🪔 வரையனல் அவன்🔥 -7

தீவிகை அவள்🪔 வரையனல் அவன்🔥-7


        சுபாங்கினிக்கு ஆரவ் செய்கை எதுவும் பிடிக்கவில்லை. எப்படியெல்லாம் நடத்தி அவனை கஷ்டப்படுத்தினாள். ஆனால் இன்று அவளையே தாலி கட்டி அழைத்து வந்து விட்டானே... பற்றாததற்கு தான் ஒரு வார்த்தை சொன்னதற்காக அவன் கழுத்தில் இருந்த செயினை கழட்டி அவளுக்கு அணிவித்து விட்டானே. எல்லாம் இந்த ஜனனியால் தான். 

     ஆரவ் மனதில் சம்யுக்தா இன்னமும் இருப்பாளோ என்ற சிந்தனையை எழும்ப சுபாங்கினியோ இறைவனை நாடி பூஜை அறைக்கு சென்று அமர்ந்தார்.

     ஆரவ் பின்னோடு வந்த சம்யுக்தா அடுத்து என்ன நடக்குமோ என்று விழி பிதுங்கி நின்றாள்.

     ஆரவ் திரும்பியதும் அவள் மீது மோத போக, "இப்ப எதுக்கு என் பின்னாடியே வந்து நிற்கற, தள்ளு..." எரிந்து விழுந்தான்.

     சம்யுக்தா தள்ளி நின்று நடுங்க செய்தாள். 

    ஏசியறையில் உடல் முழுக்க ஈரத்தில் அவள் நடுங்க, ஆரவோ 'நீங்க வாங்கி தந்த சேலை' என்றது நினைவு வர, மெல்ல மெல்ல அவளை கண்டான். 

     காட்டன் பட்டு தங்க மயில் பார்டர் நினைவு வர அவளை பாதம் முதல் உச்சிக்கு தன் கண்களால் அளவிட்டான். 

      அதே நிறம் அதே டிசைன் என்றவன் கண்கள் பிரகாசிக்க அவளை ஏறிட, அந்த உடையோ ஈரத்தில் அவள் உடலோடு ஓட்டி இருக்க, அங்கங்கள் அவளை சிலை போன்று செதுக்கி நிற்க வைத்திட, ஆரவோ அவளை பார்வையில் இரசித்து அருகே வர, மார்பில் அவன் அணிவித்த பொன்தாலி சிறிது நேரத்திற்கு முன் நடந்தவையும் நினைவு வர சினமானான்.

     "எதுக்கு இப்படி மழையில் நனைந்த கோழியா வந்து இருக்க?" என்றான். 
   
     "அது... அப்பா போலிஸை கூட்டிட்டு வந்ததும் அத்தை என்னை எழுப்ப முயற்சி செய்து இருப்பாங்க போல. நான் தூக்க மாத்திரை கலந்த பாலை குடித்ததால் எழுந்திருக்கலை. அத்தை அந்த ரூம்ல இருந்த பாத்ரும் டேப் வாட்டரை பக்கெட்டில் பிடித்து என் மேல ஊற்றிட்டாங்க. அதான்...  விழிக்க முடிந்தது. அத்தை எழுப்ப தான் அப்படி செய்து இருப்பாங்க." என்று கை நடுங்க கூறவும் ஆரவிற்கு தன் அன்னை அவளை விழிக்க செய்திருக்க மாட்டார்கள். வேண்டுமென்றே செய்து இருக்கலாம் என்ற எண்ணினான்.

     கதவு தட்டும் ஓசை கேட்க, ஆரவ் திறந்தான். 

      "சம்யு... என்னமா நீ... முதல்ல வீட்டு விளக்கை ஏற்று வா..." என்று சந்துரு அழைக்க, அவளோ ஆரவை பார்த்தபடி சந்துரு கூட போனாள். 

     வைஷ்ணவி தீப்பெட்டியை நீட்ட, பெற்று கொண்டவள் பூஜை அறைக்கு சென்று விளக்கு திரியை பிழிந்து ஏற்ற போக, இமை திறந்த சுபாங்கினி விளக்கேற்ற முயன்ற சம்யுக்தாவை தட்டி விட்டாள் சுபாங்கினி. 

     "என்னடி பண்ணற... வெளிய போ. இது உன் வீடு இல்லை." என்று தள்ளி விட, எண்ணெய் முழுதும் சேலையில் கொட்டி பயந்தவளாக நடுங்கினாள். 

     தன் அன்னை குரல் என்றதும் ஆரவ் ஓடி வந்தவன் சம்யுக்தாவை பார்க்க, தண்ணீரிலும் எண்ணெயிலும் ஆடை முழுவதும் பரவியிருக்க, 
  
     "அத்தை... என்ன பண்ணறீங்க. அவ இந்த வீட்டு மருமக. சம்யு நீ விளக்கெற்று மா" என்று சந்துரு சப்போர்டாக பேச, மருமகனை எதிர்த்து பேச பிடிக்காது இடத்தை விட்டு அகன்றாள். 

     ஆரவ் எதுவும் சொல்லாமல் இருக்க, சம்யுக்தா விளக்கேற்றி முடித்தாள்.
    
      கைகள் இரண்டும் சேர்த்து வைத்து, 'என்னையும் ஆரவையும் ஒரு முறை பிரித்தது போதும். இப்ப என்னை மனைவியாக்கி நான் எண்ணி பார்க்காத நடக்கவே நடக்காது என்று எண்ணியிருக்க அதிசயமாய் நடந்த இத்திருமணம் இதில் எப்படியாவது மீண்டும் தன் நிலையை விளக்கி பழமையை சரி செய்ய வேண்டும்.' என்று வணங்கினாள்.

     "டேய்... குங்குமம் எடுத்து வகிட்டில் வை" என்றதும் ஆரவ் அப்படியே வைத்து விட்டு அவளை காணாது அறைக்கு சென்றான். 

     "அத்தை உன் மேல கோபமா இருக்காங்க மா. கொஞ்சம் பொறுத்திரு... அவனும் கோபமா தான் இருக்கான். நடந்தது அப்படி இல்லையா... அவன் ஜெயிலுக்கு போனது... நீ மிஸ்பிகேவ் பண்ணினான் புகார் கொடுத்தது எல்லாம் மறக்க முடியாது தானே." என்றதும் சம்யுக்தா,

     "நான் ஆரவை அப்படி புகார் கொடுத்திருப்பேனா அண்ணா... நீங்க நம்பறிங்களா?" என்று கேள்வி எழுப்ப, 

      "மூன்று வருடம் முன்ன நீ தான் சம்யு கையெழுத்து போட்டு தெளிவா கொடுத்த... சரி விடு போய் அங்க ரெஸ்ட் எடு மா" என்று அனுப்ப சம்யுக்தா அறைக்கு வந்து நின்றாள். 

     ஆரவ் நிமிர்ந்து பார்த்து விட்டு திரும்பி கொண்டான். 

     அதுவே உள்ளே வருவதற்கு சம்மதமாக எடுத்து கொண்டு சம்யுக்தா வந்தாள். 

     ஆரவ் சற்று நேரம் இருக்க மூச்சடைத்தது போன்ற உணர்வு கொடுக்க எழுந்து ஒரு கவரை எடுத்தான். அதில் புது சேலை இருக்க, கவரோடு சம்யுக்தா முன் நீட்டினான்.

      "தேங்க்ஸ் ஆரு..." என்ற அடுத்த நொடி அவன் கை அவள் கழுத்தை நெறித்து,

      "தண்ணீரும் எண்ணெய்யும் ஓட்டாது. பட் இது காட்டான் சேலை அதனால இரண்டையும் இழுக்கும் மாற்றிக்கோ. இதை தருவது உன் மேல இருந்த காதலால் இல்லை. எங்க அம்மா உன் மேல தண்ணீரை கொட்டி எண்ணெயை சிந்திட்டாங்க அதற்காக தான். ஜஸ்ட் மனிதாபிமானம்.

     உன் கழுத்துல தாலி கட்டியது கூட உன் அப்பா என்னை அங்க அவமானப்படுத்த எண்ணியதால மட்டும் தான். மற்றபடி உன்னை திருமணம் செய்ய நான் முட்டாள் இல்லை. 

      ஒருத்தி அவமானப்படுத்தியும் அவளோட காதல் அழகு என்று பிணாத்திட்டு இருக்க நான் பைத்தியம் இல்லை. 

    உன்னை பழிவாங்கணும் என்று நினைத்தது இல்லை. அதே சமயம் உன்னோட எல்லாம் மறந்து வாழ்வேனும் நினைக்காதே. 

      அதுக்காக உன்னை நிம்மதியா விட்டுட்டுவேன்னு எண்ணிடாதே. வார்த்தையால் கொல்லவும் முடியும் செய்கையால் உன்னை துன்புறுத்தவும் முடியும்." என்று கூறியவன்

    "கடைசியா இன்னொன்று சொல்லறேன். என்னை 'ஆரு'யென்று கூப்பிடாதே... அப்படி கூப்பிடும் அருகதையை நீ எப்பவோ இழந்துட்ட, என்று விட மூச்சு விட தடுமாறி திணறியவள் கண்கள் சொறுக, சந்துரு ஓடி வந்து, 

      ''இடியட் என்னடா பண்ணற. விடு அவளை... ஆரவ்... விடு." என்று கத்தவும் விடுவித்தவன் சுவற்றில் கையை குத்தி முடித்தான். 

     சம்யுக்தா மூச்சு விட்டு கண்ணில் நீர் சுரக்க, இருமினாள்.

     "என்னடா இது. சாப்பிட கூப்பிடலாம்ன்னு வந்தா... இப்படி பண்ணிட்டு இருக்க. ஆரவ் அவ உன் யுக்தா டா." என்று உணர்த்த, 

    "எனக்கே நினைவுப்படுத்தறியா? கல்வெட்டு மாதிரி மனசுல செதுக்கி இருக்கேன். அவள் பண்ணிய வலியை... மறக்க முடியும்ன்னு நினைக்கிற? இல்லை மறந்துட்டேன்னு நினைத்து விட்டிங்களா? ஆரவ் டா... ஒவ்வொன்றையும் நினைவு துகளில்  தேங்கி வைத்து இருக்கேன்." என்று அகன்றான். 

    சந்துரு தான் பயந்தவனாக, "நீ முதல்ல சாப்பிடு மா. அவனிடம் தன்மையை பேசி பார்க்கறேன். 

      சம்யு... அவன் உன்னால ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கான் மா. அதான் இப்படி..." 

     "சத்தியமா.. நான் என்ன பண்ணேன்னு தெரியலை அண்ணா. அன்னிக்கு மயக்கத்தோடு வீட்டுக்கு வந்தேன். அதோட என்ன ஆரவ் பார்க்க வரலை. அவர் தான் என்னை இழிவா... நடத்தி அசிங்கப்படுத்தி இருந்ததா அப்பா... அப்பா ஏதோ நடுவில பண்ணியிருக்கார். ஆனா என் ஆரு பேசினான். அவன் குரலில்... நான் கேட்டேன்... அவனை விட்டு போக சொல்லி..." என்று அழுதிட,

     "யாருக்கு சப்போர்ட் செய்ய தெரியலை மா. அவன் ஏதாவது கத்தி காயப்படுத்தினா பொருத்துக்கோ. அவ்வளவு தான் சொல்ல முடியுமா. நீ செய்தது அவனை ரொம்ப பாதித்து இருக்கு." என்று சந்துரு நூடுல்ஸை நீட்ட,

     "கல்யாண வீட்ல அவனும் நீயும் ஊட்டி விட்டு சாப்பிட்டு இருக்கணும். என்ன பண்ண இங்க வந்திட்டிங்க பிடி எனக்கு  இது தான் பண்ண தெரியும்." என்று கொடுக்க, வாங்கி கொண்டாள். 

   சந்துரு தன் நண்பனை தேடி மாடிக்கு போக உச்சி வெயிலில் நின்று இருந்தான். 

     "அடேய்... கல்யாண கோலத்தில் இப்படி நிலாவை தான் இரசிப்பாங்க. சூரியனை இல்லை. என்ன அதுக்கூட யாரு சூட இருக்கீங்க என்று காம்படேஷனா...? மச்சி சூரியனை விட நீ தான் டா சூட இருக்க, பாரு அது மேகத்தோட ஒளிந்துகிடுச்சு." என்று சொல்லவும் ஆரவ் திரும்பினான். 

     "என்ன பேச வைக்கிறியா. அவளுக்கு சப்போர்டா? உன் தங்கை பாசத்தை எல்லாம் எப்பவோ தூக்கி போட்டா. அவளுக்கு பாசம் வைக்கிறது வேஸ்ட்" என்றான்.

    "அவளுக்கு தெரியாம எல்லாம் நடந்து இருந்தா என்ன பண்ணியிருப்ப? சுவாமிநாதன் இடையில ஏதோ பிளே பண்ணி இருந்தா?" 

     "என் கண்ணை பார்த்து என் மனதில் நினைப்பதை கேட்ச் பண்ணிடுவா. அப்படியிருக்க என்னை பார்த்து பேசியிருக்க வேண்டியது தானே... இல்லை டா... என்னை சமாதானம் செய்ய பார்க்காதே. அவளை எப்பையோ மறந்தாச்சு. இப்ப இருக்கறவ சுவாமிநாதன் பொண்ணு. எனக்கும் அவருக்கும் இருக்கற பகையில் சம்யுக்தா பலிகாடுதான்." என்று தனதறைக்கு சென்றான். 

    'இவன் என்ன ஆட்டை அறுக்கற கசாப்பு கடைக்காரனா பேசறான்.  தானா சேர்ந்தாங்க... தானாவே புரிஞ்சுப்பாங்க. கடவுளே...' என்று வைஷ்ணவியை தேடி போக அவளோ அன்னை அருகே அமர்ந்து ஆறுதல் மொழிந்தாள். 

   தன்னறையில் கதவை திறக்க, நூடுல்ஸை வாயில் உறிஞ்சியபடி சேலையை பீல்ட்ஸ் வைக்கும் யுக்தாவை கண்டான். 

     "என்ன பண்ணிட்டு இருக்க?" என்றான் சினத்தோடு.

    "அண்...ணா நூடுல்ஸ் தந்தாங்க சாப்பிட்டுட்டே சேலை கட்டறேன். நீங்க கொடுத்தது தான்" என்று கட்டவும், தலையிலடித்து பால்கனி சென்றான்.

      பாதி காலி செய்ய எட்டி பார்க்க, அவனோ ஊஞ்சலில் கண் மூடி இருந்தான்.

      "உங்களும் பசித்தா எடுத்துக்கோங்க. நாம ஷேர் பண்ணிடலாம்" என்று அவன் முன் நீட்ட, 

     "ஸ்டாப்பிட்...." என்று கத்தினான்.

      "என்னடி நான் பேசியதை எனக்கே நினைவுல நிறுத்தறியா? இங்க பாரு தாலி கட்டியது உங்க அப்பா செய்த வில்லங்கத்தினால்... இல்லை இந்த ரூம்ல வேறயொருத்தியோட இன்று நான் இப்படி இருந்து இருக்க மாட்டேன். உன்னை பார்த்தா எரிச்சலாகுது" என்று கத்தி அந்த மீதி நூடுல்ஸை தட்டி விட்டான். அந்த தட்டு உருண்டு சப்தமிட்டு ஓசையெழுப்பி அடங்கியது.

    ஆரவ் கோபம் பார்த்து அச்சத்தில் பின் நகர்ந்தாள். 

     ஆரவின் கனிவான பார்வையை தான் மீண்டும் எப்படி பெறப் போகின்றோமோ என்று புரியாது விழித்தவள். கட்டிலின் ஒரத்தில் சுருண்டு படுத்தாள்.

       இமைக்குள் ஆரவ் சந்தித்த முதல் நாள் வந்து நின்றது. 

     அந்த இனிதான நிகழ்வுகளை எண்ணங்களால் பின் நோக்கி பார்க்க சென்றாள்.

    இமை மூடிய விழிகள் நீரை சிந்த, உதடோ முறுவலை ஏந்தி சுகந்தமான காலத்திற்கு இட்டு சென்றது. 

-வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

-பிரவீணா தங்கராஜ்.

  படித்து கருத்து அளிக்கும் அனைவருக்கும் நன்றிகள் மகிழ்ச்சி... 
       

Comments

Post a Comment

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு