Posts

சிறுகதை-4 இல்லாளின் பந்தம் 144

Image
                                                                                                                     இல்லாளின் பந்தம் 144 அம்மாடி லட்சுமி பேப்பர் எங்க?'' என்றே ரகுவரனின் குரலுக்கு கையில் மணக்க மணக்க தேநீர் எடுத்து கொண்டு பேப்பர் நீட்டினாள்.       தேநீர் சுவைத்த ரகுனந்தன் ''என்ன எப்பவும் விட சுவை வித்தியாசமா இருக்கு''       ''அது ஒண்ணுமில்லைங்க ஊரே கொரானா கிடக்கு அதான் சுக்கு கிராம்பு பட்டை அரைத்து டீதூளில் கலந்து டீ போட்டு கொண்டு வந்தேன்''        ''...

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

Image
தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥             தீவிகை அவள் வரையனல் அவன்-1 தீவிகை அவள் வரையனல் அவன்-2 தீவிகை அவள் வரையனல் அவன்-3 தீவிகை அவள் வரையனல் அவன்-4 தீவிகை அவள் வரையனல் அவன்-5 தீவிகை அவள் வரையனல் அவன் -6 தீவிகை அவள் வரையனல் அவன் -7 தீவிகை அவள் வரையனல் அவன் -8 தீவிகை அவள் வரையனல் அவன் -9 தீவிகை அவள் வரையனல் அவன்-10 தீவிகை அவள் வரையனல் அவன்-11 தீவிகை அவள் வரையனல் அவன்-12 தீவிகை அவள் வரையனல் அவன்-13  தீவிகை அவள் வரையனல் அவன்-14     தீவிகை அவள் வரையனல் அவன்-15  தீவிகை அவள் வரையனல் அவன்-16   தீவிகை அவள் வரையனல் அவன்-17   தீவிகை அவள் வரையனல் அவன்-18   தீவிகை அவள் வரையனல் அவன் -19 தீவிகை அவள் வரையனல் அவன்-20 தீவிகை அவள் வரையனல் அவன்-21 தீவிகை அவள் வரையனல் அவன்-22   தீவிகை அவள் வரையனல் அவன்-23 தீவிகை அவள் வரையனல் அவன்-24   தீவிகை அவள் வரையனல் அவன்-25 தீவிகை அவள் வரையனல் அவன்-26   தீவிகை அவள் வரையனல் அவன்-27 தீவிகை அவள் வரையனல் அவன்-28 தீவிகை அவள் வரையனல் அவன்-29 தீவிகை அவள் வரையனல் அவன்-30(com...

ஸ்டாபெர்ரி பெண்ணே

Image
               ஸ்டாபெர்ரி பெண்ணே -1      ஸ்டாபெர்ரி பெண்ணே-2     ஸ்டாபெர்ரி பெண்ணே-3   ஸ்டாபெர்ரி பெண்ணே-4    ஸ்டாபெர்ரி பெண்ணே-5   ஸ்டாபெர்ரி பெண்ணே-6    ஸ்டாபெர்ரி பெண்ணே-7   ஸ்டாபெர்ரி பெண்ணே-8    ஸ்டாபெர்ரி பெண்ணே-9   ஸ்டாபெர்ரி பெண்ணே-10 ஸ்டாபெர்ரி பெண்ணே -11 ஸ்டாபெர்ரி பெண்ணே-12 ஸ்டாபடர்ரி பெண்ணே-13 ஸ்டாபடர்ரி பெண்ணே-14 ஸ்டாபெர்ரி பெண்ணே-15 ஸ்டாபெர்ரி பெண்ணே-16 ஸ்டாபெர்ரி பெண்ணே-17 ஸ்டாபெர்ரி பெண்ணே-18 ஸ்டாபெர்ரி பெண்ணே-19 ஸ்டாபெர்ரி பெண்ணே-20 ஸ்டாபெர்ரி பெண்ணே -21 ஸ்டாபெர்ரி பெண்ணே-22 ஸ்டாபெர்ரி பெண்ணே-23 ஸ்டாபெர்ரி பெண்ணே-24 ஸ்டாபெர்ரி பெண்ணே.-25 ஸ்டாபெர்ரி பெண்ணே- 26 (முடிவடைந்தது)    வாசிக்கும் அன்பு உள்ளங்கள் உங்கள் கருத்தை அங்கே வழங்கலாம் அல்லது இந்த சைட் விமர்சன பகுதில் உங்கள் கருத்தை கூறலாம். முகநூலில் என்னுடைய சைட் பேஜ் லிங்க் ரிவ்யு பதிவிடலாம். உங்கள் விருப்பம் உங்கள் சௌகர்யம் மட்டுமே.  

சிரமமில்லாமல் சில கொலைகள்

Image
சிரமமில்லாமல் சில கொலைகள்         முன் ஜென்ம தேடலில் தொலைத்த காதலை இந்த ஜென்மத்தில் உயிர் கொடுக்க முயலுக்கின்றது ஒரு ஆன்மா. கூடவே தன் காதலை தண்டித்த காரணத்தால் பழி வெறியை சேர்த்தே கருவருக்கிறது அவ்வுருவம்.ஜென்மம் தாண்டி காதல் சேருமா? காதலிக்கும் அப்பேதையே  அறியாத காதல்? காண்போம் சில கொலைகளில் சிரமமில்லாமல்.. கதைகளோடு.     சிரமமில்லாமல் சில கொலைகள் -1     சிரமமில்லாமல் சில கொலைகள்-2    சிரமமில்லாமல் சில கொலைகள்-3     சிரமமில்லாமல் சில கொலைகள்-4     சிரமமில்லாமல் சில கொலைகள்-5   சிரமமில்லாமல் சில கொலைகள்-6   சிரமமில்லாமல் சில கொலைகள்-7   சிரமமில்லாமல் சில கொலைகள்-8    சிரமமில்லாமல் சில கொலைகள்-9   சிரமமில்லாமல் சில கொலைகள்-10   சிரமமில்லாமல் சில கொலைகள்-11 சிரமமில்லாமல் சில கொலைகள்-12 சிரமமில்லாமல் சில கொலைகள்-13 சிரமமில்லாமல் சில கொலைகள்-14   சிரமமில்லாமல் சில கொலைகள்-15     சிரமமில்லாமல் சில கொலைகள்-16     சிரமமில்லாமல் சில கொலைகள்-17 ...

மதிப்பிற்குரிய பெண்மை...

நிமிர்ந்த நடை வேண்டாம்குனிந்தே செல் நேர்பார்வை பார்க்காதே இமையை தாழ்த்து உதடு இழுத்து புன்னகைக்காதே வாய்க்கு பூட்டிடு சுட்டுவிரல் நீட்டி நியாயம் பேசாதே சுடுதண்ணீர் கொதிக்கும் அடுதலறை கவனி இடை தெரியும் உடை சேலையென்றாலும் இழுத்து போர்வையாய் போர்த்திக் கொள் தந்தை தனயன் அடுத்து தாலி கட்டியவனின் பாதசுவடின் அச்சில் கால் பதி இப்படி இப்படி சென்று நீ வாழ்ந்தாலும் இன்னல் என்று வரும் சமயம் உலகம் உன்னை தூற்ற தான் செய்யும் மதிப்பிற்குரிய பெண்மை மண்டியிட்டு அடங்கும் வரை...                       - பிரவீணா தங்கராஜ்.

காதலென்றால்...

Image
விழிகளில் தொலைத்து இதயத்தில் அடைத்து நேச முகம் மலர்ந்து இருவருக்கும் ஒற்றை ரசனை பகிர்ந்து நெடு நேர பிதற்றல் பேச்சில் ஒன்றுமில்லை என்றாலும் சுவாரஸ்யத்துக்கு பச்சனையின்றி கணநேர சந்திப்புக்கு கால் கடுக்க காத்திருந்து காதல் என்றே பெயரிட நேரமில்லை எனக்கு மணத்தில் இணைந்து இறுகிய முகத்தோடு உனக்கும் எனக்கும் ரசனைகள் வேறுப்பட்டு பிடித்த பிடிக்காத எல்லாம் ஏற்று கொஞ்சம் கொஞ்சம் கெஞ்சல் கொஞ்சலோடு பஞ்சணையில் முகம் சிவந்து வருடங்கள் பல கடந்து வாழம் சமயம் சிறு சிறு சண்டை முகதூக்கம்  நீண்ட நேர ஊடலுக்கு பின் ஒரு வித கை அழைப்பில்நீ அழைக்க உன் நெஞ்சில் அடைக்கலமாகும் என் மனம் இதற்கு பெயரும் காதலென்றால்.... மறுப்பாயா?                                                                         - வீணா ...

🐘 வாரணம் நாங்கள் எங்கே செல்ல...?🐘

இதோ இங்கு தான் இருந்தன இவ்விடம் தான் என்பதும் யாம் அறிவேன் இன்று ஏனோ எங்களை விரட்டுகின்றார்கள் இது மனிதர்கள் இருக்குமிடம் என்றே ஓங்கி வளர்ந்த என் தாயின் கிளைகளை வெட்டி வீழ்த்தியே ஊனமாக்கினார்கள் பச்சைபட்டாடை என்றே திகழந்த உடைகளை வேரோடு அபகரித்து வன்முறை செய்தாயிற்று காணும் இடமெல்லாம் பூத்த முல்லைப்பூ காணாமல் போனது நாங்கள் பிளிறிற்று கூடி பருகிய ஆற்றோடை நீர்கள் கண்ணனுக்கு எட்டிய வரை காணவில்லை இதில் எங்களை அவர்கள் இருக்கும் இடத்தில் வந்து அச்சுறுத்துகின்றோம் என்ற பெயர் வேறு இதோ வாரணம் எல்லாம் ஒன்று திரட்டி கூண்டுக்குள் ஏற்றி விட்டார்கள் அவர்களை போலவே கை ஏந்தி யாசகம் கேட்டிடும் இழிவு நிலைக்கு தள்ளி... காடு இடுகாடு ஆனதேனோ?!                   --பிரவீணா தங்கராஜ். வாரணம்-யானை இடுகாடு-சுடுகாடு

நியூட்டன் விதி போல

நியூட்டன் விதி போல இதற்கும் கூட விதிமுறைகள் உள்ளதென நீ சொல்லியே அறிந்தவள் நான் முதல் தோசை சரிவர வேகாது என்றே ஒதுக்கி தள்ளியதே முதல் விதி சற்றே கருகியது வார்த்தவருக்கே என்பது இரண்டாவது விதியாக கூடயிருக்கலாம் மொறு மொறு வென்று காற்றில் பறப்பதே தோசை யென்றே பெயரிட்ட உனக்கு குட்டிமகள் செம்பு நீரில் முக்கியெடுத்த உப்பு சப்பில்லாத தோசை மட்டும் எந்த வித விதிமுறைக்கு சேர்த்தியோ...?!                                       -பிரவீணா தங்கராஜ்.

பிதற்றல் மொழி நீ

விழி மோதி... உயிராகி... எனை நாடி... வா அழகே... நேச கவி... நீ பாடி... எனை தேடி... வா உயிரே... கண நேர... விழி மோதி... இதயமிட... மாறியதே... தீப்பார்வை பார்க்கின்றாய் தேகமது சில்லிடுகின்றது சிதறிடும் வார்த்தை வீசுகின்றாய் மழையின் சாரலாய் தூவுகிறது                  -- பிரவீணா தங்கராஜ் .

திருடி விட்டாய் என்னை

திருடுகின்றாய் என்பதாலே உன்னை எளிதில் நுழைய விடுவதில்லை மனதில் நீயோ கனவில் புகுந்து கள்வனின் வேலையை சரியாக எண்ணில் சரித்துவிடுகின்றாய் இமை திறக்க ஓடிவிட்டு என்னை புலம்ப வைப்பது நியாயமா...?!              -பிரவீணா தங்கராஜ். 

நெஞ்சம் பொறுப்பதில்லையே...

மாடவீதியில் மதில்கள் பளபளக்க மண்குடிசையில் உணவின்றி ஏழையுறங்க அயலவர் ஆண்ட ஆட்சிப் போக அரசியல்வாதிகளின் இன்னலாட்சி காண எல்லாவளம் நாட்டில் பெற்ற நிலைமாறி எல்லையில்லா கொடும்நோய் நிலைவந்து வழியறியும் பலகையில் சுவரொட்டிபூச வழிப்பாதையில் குப்பைவண்டி குப்பை வீச பெண்மைப்போற்றும் கண்ணகி நாட்டில் பெண்மைவிற்கும் விலை மாதுவாக புண்ணிய செயல் புரியும் மருத்துவத்துறையில் புதுமை களவு தான் செயல் உறுப்பு திருட்டும் இரும்பாக இருக்க வேண்டும் இளைஞன் துரும்பாக மாறுகிறான் போதை உண்டு இறைவனிடம் புகார் அளிக்க இதயம் நாடுது இயற்கை வடிவில் இறைவன் தரும் துன்பம் கண்டு இதயம் நொறுங்குது. நெஞ்சம் பொறுப்பதில்லையே இன்னும் பல செயல்களை விழிகள் காண்பதால்...                                -பிரவீணா தங்கராஜ்.  

வழிச்சொல்

Image
இமைமூடியும் விழிகள் நீரை நிறுத்துவதில்லை-நீ இல்லையென்ற வெறுமையை மனம் ஏற்பதில்லை உன் வாசமில்லா  சுவாசம் கொல்லுதிங்கே உன் காதலெனும் கடலில் கலந்தவள் உன் குறும்பெனும் தேனில் ஊறியவள் உன் அருகாமையில் அன்பை கண்டவள் நீயில்லா வெற்றிடத்தில் வெறுக்கிறேன் நீயெங்கே நீயெங்கே என பிதற்றுகின்றேன் வானவில்லில் வண்ணங்கள் சேர்க்க  வாழ்க்கையெனும் கடலில் மூழ்க வழிச்சொல்.                                           - பிரவீணா தங்கராஜ்.

இலைகளை உதிர்த்தி...

Image
இலைகளை உதிர்த்தி மரங்கள் சொல்கின்றது இனியெல்லாம் இங்கு வசிக்க இயலாதென்று கனிந்த பார்வையில் கவிதை படித்திட காலங்கள் எல்லாம் மாறுகின்றதென்று உணர்வில் லயித்திட்ட உயிர்கள் இரண்டு உன்னத அன்பில் சொல்வதொன்று மனிதா அன்பை நாடி மரங்களை நடு இலைகள் இல்லா கிளைகள் சுவைகள் இல்லா கனிகள் நிலவை அள்ளி பருக மட்டும் ஜோடி குருவி நாங்கள் உண்டு   -பிரவீணா தங்கராஜ்.

முதல் முதலாய் ஒரு மெல்லிய (how to paper book buy it ?)

Image
முதல் முதலாய் ஒரு மெல்லிய           முதல் முதலாய் ஒரு மெல்லிய-1   முதல் முதலாய் ஒரு மெல்லிய-2   முதல் முதலாய் ஒரு மெல்லிய -3  முதல் முதலாய் ஒரு மெல்லிய-4   முதல் முதலாய் ஒரு மெல்லிய-5 முதல் முதலாய் ஒரு மெல்லிய-6  முதல் முதலாய் ஒரு மெல்லிய-7  முதல் முதலாய் ஒரு மெல்லிய-8  முதல் முதலாய் ஒரு மெல்லிய-9  முதல் முதலாய் ஒரு மெல்லிய-10  முதல் முதலாய் ஒரு மெல்லிய-11 முதல் முதலாய் ஒரு மெல்லிய-12 முதல் முதலாய் ஒரு மெல்லிய-13 முதல் முதலாய் ஒரு மெல்லிய-14 & 15 முதல் முதலாய் ஒரு மெல்லிய-16 & 17 முதல் முதலாய் ஒரு மெல்லிய- 18 முதல் முதலாய் ஒரு மெல்லிய-19 முதல் முதலாய் ஒரு மெல்லிய-20 முதல் முதலாய் ஒரு மெல்லிய-21 முதல் முதலாய் ஒரு மெல்லிய-22 முதல் முதலாய் ஒரு மெல்லிய-23 முதல் முதலாய் ஒரு மெல்லிய-24 முதல் முதலாய் ஒரு மெல்லிய-25 முதல் முதலாய் ஒரு மெல்லிய-26 முதல் முதலாய் ஒரு மெல்லிய-27 முதல் முதலாய் ஒரு மெல்லிய-28 முதல் முதலாய் ஒரு மெல்லிய-29 முதல் முதலாய் ஒரு மெல்லிய-30 & 31

🌹 உலகமே உதயம் எதனில் 🌹

பட்ட மரத்தின் வேருக்கு பூக்கள் பூக்க செய்ய பயோதரம் விடும் கண்ணீர் திவலை யெதற்கு....?! தன் கூட்டின் மேல தான் இடா முட்டைக்கும்  தாயாய் அடைகாக்கும் காகம் எதனால்...?! முட்டி மோதி கொள்ளும் உறவுகள் பந்தமெனும் கூடும் விழாவில் ஒன்றுபட்டு புன்னகைப்பெதனால்...?! பிடியள்ளி உண்ணும் சாதம் பிள்ளை வந்து முன்னிற்க பாசமாய் உணவளிப்பதும் எதனால்...?! எங்கோ கேட்கும் திரிவூர்தி ஓசையது எங்கோ மூலையில் ஒரு மனம் வேண்டிடுவதும் எதனால்...?! எதனால்... எதனால்... உலகமே உதயம் எதனில் தேடிட... அன்பே நீ கரைந்திடு  தாய் தந்தைக்காய்...! பாசமே நிறைந்திடு சகோதரத்துவமாய்...! நேசமே விதைத்திடு உறவும் நட்புமாய்...! காதலே கலந்திடு காவியமாய்...! உலகமே உதயம் அன்பில் - அதை உணர்த்தியே சொல் உன்னில்.                               -- பிரவீணா தங்கராஜ். பயோதரம்--மேகம் திவலை-----மழைத்துளி திரிவூர்தி---ஆம்புலன்ஸ்