அகமா முகமா?
அகமா முகமா? குழந்தைகள் வந்ததும் அவர்களை கவரும் விதமாக ஆங்காங்க கார்டூன் பொம்மை உடையணிந்து மனிதர்கள் அவ்விழாவிற்கு காத்திருந்தனர். குழந்தைகள் தினத்தை குதுகலமாக அவர்களுக்கு பிடித்த வகையில் அந்த அப்பார்ட்மெண்ட்டில் நடைப்பெற்றது. மொத்த அப்பார்ட்மெண்ட் குழந்தைகளும் கலந்து பரிசை வெல்ல பல போட்டிகள் நடைப்பெற்றது. குழந்தைகளுக்கு போட்டி மட்டுமா பிடிக்கும். அவர்கள் கார்டூன் உலகத்தின் மக்களையும் வரவைக்கவே அந்த அசோஷியேட் ஆட்கள் முடிவெடுக்க இதோ கார்டூன் உலகத்தின் ஆடையை மனிதர்கள் அணிந்து நடமாடி பார்க்கும் குழந்தைக்கு எல்லாம் கையை அசைக்க, குழந்தைகளோ ஆர்வமாக கை குலுக்குவதும், போட்டோ எடுப்பதுவுமாக இருந்தனர். உள்ளுக்கு அத்தனை புழுக்கம் ஏற்படும் அந்த ஆடை அணிந்தால், முகம் வேர்த்து வேர்வை தண்ணீர் சொட்டும் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை தனியாக சென்று அசுவசப்பட்டு கொள்வார்கள். சற்று நேரம் ஆளில்லை என்றால் கூட வரவேற்பில் இருக்கும் பணம் கொடுத்த ஆட்கள் "என்னப்பா வாங்கற காசுக்கு நிற்க வேண்டாமா" என்பார். ...