Posts

எழுதுகோல் பேசுகின்றேன்

Image
உன் எண்ணத்தை எல்லாம் மையாக ஊற்றி கொட்டிவிடு அது உந்தன் பட்டாம்பூச்சி கனவாக இருக்கட்டும் உந்தன் பாவாடை தாவானி பருவமாகட்டும் உள்ளுக்குள் ஒளித்த ஒரு தலை காதலாகட்டும் நல்கிய நல்லறமாக இருக்கட்டும் வலி தந்த தாய்மையாகட்டும் செவி தாக்கிய வன்சொற்களாகட்டும் இப்படி இப்படியே பல என்னவாகவோ இருக்கட்டும் கொட்டிவிடு என்னிடம் கண்ணீரை மையாக தாளில் நிறைத்து உன் மனதை இலகுவாக்குகிறேன் நான் தான் எழுதுகோல் பேசுகின்றேன்.                  -- பிரவீணா தங்கராஜ் .

விழிவாளால் - காதல் பிதற்றல் 32

விழியாலே உயிரை வதைக்க செய்ய முடியும் என்பதை உன் விழிவாளால்  தான் அறிந்தேன் .           -- பிரவீணா தங்கராஜ் .

குடும்பம்

 உறவுகள் தொலைக்கின்ற நேரத்தில் உன்னத குடும்பமென காட்டுங்கள் பஞ்சாய் பறந்திடும் கவலைகள் நெஞ்சை இனித்திடும் குடும்பங்கள் தங்கை  தமயன் உறவுகள் வேண்டும் தனக்கென துணையாய் நின்றிட வேண்டும் ஒன்று பெற்று உருகிடும் அன்பில் ஒற்றுமை சற்றே குறைந்திடும் உலகில் பல்க பெற்றே வாழ்த்திடுங்கள் பகிர்ந்தே மனதை விதைத்திடுங்கள் அன்பை விதைத்து மகிழ்ச்சி பெறுக கண்ணை போலவே நற்குடும்பம் சிறக்க...!                        -- பிரவீணா தங்கராஜ்

@ நான் விரும்பும் என் முகம் @

முகமூடி அணிந்து    பேசிடும் பழக்கமில்லை அகம் நாடும் உள்ளுணர்வு    சொல் கேட்டுடும் வழக்கதினால் புன்னகையே எந்தன்    விருப்பமான அணிகலன் தன்னம்பிக்கை தைரியமும்     எந்தன் சொத்து இன்னலை இனிதே      கையாள்வேன் இசைக்கு மட்டுமே      தலை அசைப்பேன் பொய் பேசி பிரச்சனையை      முடக்குவதை விட மெய் பேசி பிரச்சனையை        எதிர் கொள்வேன் எல்லாம் நன்மைக்கே     என்பதை ஏற்பேன் நற்கவியில் வாசித்து     என்னை லயித்திடுவேன் கடலளவு கவிதையில்   ஒரு சொட்டு கிணற்று நீர் நான் ஆம் ...    எழுத்து உலகில் ஒரு      துளி மையாக படைத்திடவே நான் விரும்பும் என் முகம்.             -- பிரவீணா தங்கராஜ் .

பன்றி ஹைக்கூ

Image
பன்றி – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

பட்டம் பற்றி ஹைக்கூ

பட்டம் – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

ஆசை துறந்தவனுக்கு...

Image
ஆசை துறந்தவனுக்கு மடியில் கிடைத்தன  மழலை வரம்            -- பிரவீணா தங்கராஜ் .           

நாற்றுகள்

Image
வளைந்த முதுகு வாழ்வு தருகிறது நாற்றுகள்        *** பாட்டியிடம் பூமிப்பெண் பச்சைபட்டாடை கேட்டாளோ வயலில் நாற்றுகள்        *** இளநாற்றை குனிந்துவைத்து விவசாயத்தை உயர்த்துகிறாள் முதிர்ந்த பாட்டி         *** நாற்றை மண்ணில் நட்டு இதயத்தில் கவிதை தூவுகிறாள்        *** தேங்கிய வயல்நீரில் மூதாட்டிக்கு தெரிந்தன மக்கள் பசி                   - பிரவீணா தங்கராஜ் .                      

📱💗நீயின்றி நானில்லை💗📱

Image
அதிகாலை விழித்தவுடன் அண்மையில் உனை கண்டிடவே ஆசையெனக்கு ... அலறியும் நீ யெனக்கு... இதயமே இடைவெளி யில்லை நமக்குள் - உனை ஈகைத்திடவும் மனமும் மில்லை உனை நீங்கினால் நொடிகள் நகராது ஊக்கமே உன்னிலிருக்கும் நகைப்பான குறுஞ்செய்தியே... எண்ணமோ உன்னை வட்டமிட்டாலும்  ஏணியாக பார்க்க வைக்காது தலை தாழ்த்தி வைக்கின்றாய் நியாயமா ? ஐயமேயில்லை நீயிருந்தால் உறக்கமில்லை ஒருமையில் இருப்பதாக எண்ணுகின்றனர் ஒன்றாக திரிவதை அறியாமல் ஓலமிட்டே உரைக்கின்றேன் ஒளடதமாக உன்னில் அடிமைக் கொண்டேன் காலங்கள் செல்வதும் புரியவில்லை சாலையில் நடப்பதும் தெரியவில்லை தாளங்களும் , ராகங்களும் உன்னில் லயித்தேன் செவ்வக சிறையிலே வாழ்கின்றேன் தொடு திரையிலே தேடுகின்றேன் உனக்கு தெரியா விந்தையேது வியக்கின்றேன் உன்னில் புதைந்தே வாழ்க்கை மறக்கின்றேன் நீயின்றி நானில்லை யென்றே மாற்றிவிட்டாய்  .                           -- பிரவீணா தங்கராஜ் . # இது காதலுக்கும் பொருந்தும் மற்றும் கைப்பேசிக்கும் பொருந்தும் ஒரே கவிதை 😜 .

💰💸 பணம் 💸💰

உன் மதிப்பை நீயுணர உன்னில் அவன் உள்ளானா ? பிறப்பு முதல் இறப்பு வரை அவனின்றி வாழும் நிலை நமக்கு காற்று , நீர் , உணவு இன்றி இருப்பது இயலாது என்பர் அறிவியல் கூற்று உண்மை தான் தற்போது அவனின்றி இருப்பதும் இயலாதயொன்று தான் அவனே உலகில் முதன்மை அவனிருக்க முதுமையும் இளமை தீமை நன்மை பாகுபாடு அறியா புன்னகை பூத்திடுவான் நல்லோர் , தீயோர் பார்க்காது தவழும் குழந்தையவன் அவனை சேமிக்க ஆயுள் போதாது ஆயுள் இருந்தாலும் ஆசை அடங்காது மெத்தை முழுதும் அவனிருந்தாலும் நித்திரை தர மாட்டான் நித்திரை இருக்கும் வீட்டில் நித்தமும் புழுங்க மாட்டான் மாயாஜால வித்தைக்காரன் மர்மங்கள் செய்திடுவான் சொந்தங்களை பிரித்துடுவான் முகமறியா மனிதனையும் சொந்தமாக்குவன் பாதாளம் வரை சென்றாலும் பாதகமாக அழைத்து செல்வான் அவனே பணமெனும் மாயாவி .                                 -- பிரவீணா தங்கராஜ்

💧கண்ணீர் 💧

இன்பத்தில் இன்சுவை யூட்டும் இனிப்பும் மில்லை... துன்பத்தில் பங்கெடுக்கும் கசப்பும் மில்லை... உன்னில் வழிந்திடும் சுவையோ உவர்ப்பு 'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி  உவர்ப்பு சுரக்கும் நீரில்லா வாழ்வுமதுவே பிறப்பிலும் வருவாய்... இறப்பிலும் வருவாய்... இடைப்பட்ட வாழ்விலும் பங்கு கொள்வாய்...! எண்ணிலடங்கா சோகமிருக்கும் தனிமையிலும் துணை ஆவாய்...! மகிழ்ச்சியென்ன வாட்டமென்ன வழிந்திடவே செய்வாய்...! அன்பெனும் ஆளுமைக்கு அடிபணிந்தே வந்திடுவாய்... ! எந்தனருவி கண்ணீரே...!                  -- பிரவீணா தங்கராஜ் .

எந்தன்னாடு செல்வதெங்கே...

செல்வதெங்கே... எந்தன்னாடு செல்வதெங்கே... சொல்லி செல்லுங்கள் மனிதக் கூடுகளே... மனிதக் கூடுகளே... நெஞ்சிலாயிரம் கேள்வியுண்டு நேரடி கேள்விகள் பல உண்டு கேட்டிடவா... வரியில் கேட்டிடவா... மக்கள் குரலும் அதிலுண்டு சலித்து போன நியாயங்கள் தான் . வந்தவரெல்லாம் அள்ளிச்செல்லவா ஆட்சி நடக்குதிங்கே  பணத்தை அள்ளிச்செல்லும் ஆட்சி நடக்குதிங்கே    ( செல்வதெங்கே ....) மாற்றங்கள் நல்கிட மக்களும் ஏங்கிட புது விடியலை தேடியே ஏங்குகின்றோம் மாக்களாட்சியில் மக்கள் மட்டுமே கோமாளியாய்... என்றும் மக்கள் மட்டுமே கோமாளியாய் ... மறதிக்கு கூட நல்லது செய்ய ஒப்பில்லையா மனம் ஒப்பவில்லையா ...  ( செல்வதெங்கே ...) கடலில் மீனவர்கள் மாண்டாலென்ன மண் வளங்கள் அழிந்தால் தான் யென்ன மது அருந்தவும் வசதி படைத்து  கொடுத்திடவே இடம் மட்டும் போதுமே ...உங்களுக்கு இடம் மட்டும் போதுமே ... ஒரு நீதியில்லை ஒரு நியாயமில்லை மலையளவு பணம் மட்டும் புரட்டிடவே வந்தீரோ மாயங்கள் நடந்திட , மாற்றங்கள் நிகழ்ந்திட காமராஜ ஆட்சி மீண்டும் கண்டிடவே மாட்டோமா மீண்டும் கண்டிடவே மாட்டோமா...    ( செல்வதெ...

நீ எனக்கு நட்பா ?! காதலியா ?!

உயிர்வதை செய்யும் பெண்னே... தோள் மீது சாய்கையிலே தோழியானாய்... கைக் கோர்த்து நடக்கையிலே காதலியானாய்... கண்களில் கவிபாடும் காதலியே... கதைப் பேசி கதைத்திடும் தோழியே... மூளைக்கு தெரிகிறது நீ தோழியென இதயத்திற்கு புரிகிறது காதலியென நீ தோழியா... காதலியா... பெண்னே மண்டியிட்டு கேட்கின்றேன் மறவாது சொல்லடி தோழமையில் காதல் கூடாது காதலில் தோழமை உண்டு உணர்ந்தே சொல் நான் யாரென .               -- பிரவீணா தங்கராஜ் .

வினாவிற்கு விடை...

ஒரு ஊரில் அழகியொருத்தி இருந்தாளே ஓர் நாளில் நடைப்பாதை கடந்தே சென்றாளே விழியெங்கும் கண்டது பசுமையில்லா பூமியே விழிமூடி உறங்குகையில் கடவுள் வந்தாராம் வரமொன்றும் வேண்டாமே வினாவிற்கு விடைதா என்றாளாம் வளி கூட அசுத்தத்துடன் பூமியினை ஏன் படைத்தாய்...! பொங்கும் அருவியும் எங்கும் செழுமையும் நான் படைத்தேன் பொல்லாத மனிதன் பாழாக்கி போனான் என் செய்வேன் தோழியே.... மீண்டும் பசுமைதழைத்திட என் செய்ய வேண்டும் இறைவா ..! மண்ணில் ஏர் உழுதிடும்  மைந்தனை மணம் புரிவேனென சபதமிடு என் மங்கையே...  பதிலளித்து மறைந்தார் இறைவனே விழித்ததும் தந்தையிடம் கூறினாள் விவசாயம் படித்த மாப்பிள்ளை பாருங்கள் போதுமென்று .                        -- பிரவீணா தங்கராஜ் .

என் மரணத்திற்குப் பிறகு...

என் மரணத்திற்குப் பிறகு ...என்ன நிகழும் கண்மூடியே யோசித்தேன் மண்மூடி புதைப்பனரோ ? எரிப்பனாரோ ? நான் உணர போவதில்லை ஏதோவொரு அமைதி எண்ணில் நுழைந்தது அதுதான் மயான அமைதியோ ? ஏதோவொன்று இலகுவாக உணர்த்தியது  நானெனும் உடல் , என் குடும்பம் , என்யுடமை என் உறவு என்பதெல்லாம் அழிந்தே போனது நிலையற்று சிறகு முளைத்த மனிதனாக ஆத்மா பரந்த உலகை பார்த்துக் கொண்டது எங்கும் கொலை, கொள்ளை, திருட்டு மனிதநேயமற்ற செயல், ஜாதியென பிரித்தே இறைந்துகிடந்தனர்  பார்க்க திறனின்றி நான் ஆத்மாவாக இ(ற)ருந்து விடுகின்றேன் எங்கோ இழுத்து செல்கின்றன காற்று அதனிடம் கேள்வி கேட்காது பயணித்தேன் அங்கும் இருதரப்பு உலகம் சொர்க்கம் நரகமென்று பாவபுண்ணிய கணக்கினை கணக்கிட்டு இங்கு யார் கணக்குபதிவாளர் வேலைப் பார்ப்பதோ ? என்ற கேள்வி தான் எழுந்தது - அதை விட அடுத்த பிறவியுண்டா இல்லையாயென்ற ஆவலையும் தான் 'ட்ரிங் ட்ரிங்' யென்ற அலாரயோசை செவிமடல் தாக்க கண் விழித்தேன் கனவு... எல்லாம் கனவு... இறுதிவரை தெரியாமலே போனது அடுத்த பிறவி உண்டா !? இல்லையா ?!           ...