எந்தன்னாடு செல்வதெங்கே...

செல்வதெங்கே... எந்தன்னாடு செல்வதெங்கே...
சொல்லி செல்லுங்கள் மனிதக் கூடுகளே...
மனிதக் கூடுகளே...
நெஞ்சிலாயிரம் கேள்வியுண்டு
நேரடி கேள்விகள் பல உண்டு
கேட்டிடவா... வரியில் கேட்டிடவா...
மக்கள் குரலும் அதிலுண்டு
சலித்து போன நியாயங்கள் தான் .
வந்தவரெல்லாம் அள்ளிச்செல்லவா
ஆட்சி நடக்குதிங்கே 
பணத்தை அள்ளிச்செல்லும்
ஆட்சி நடக்குதிங்கே    ( செல்வதெங்கே ....)
மாற்றங்கள் நல்கிட மக்களும் ஏங்கிட
புது விடியலை தேடியே ஏங்குகின்றோம்
மாக்களாட்சியில் மக்கள் மட்டுமே கோமாளியாய்...
என்றும் மக்கள் மட்டுமே கோமாளியாய் ...
மறதிக்கு கூட நல்லது செய்ய ஒப்பில்லையா
மனம் ஒப்பவில்லையா ...  ( செல்வதெங்கே ...)
கடலில் மீனவர்கள் மாண்டாலென்ன
மண் வளங்கள் அழிந்தால் தான் யென்ன
மது அருந்தவும் வசதி படைத்து  கொடுத்திடவே
இடம் மட்டும் போதுமே ...உங்களுக்கு
இடம் மட்டும் போதுமே ...
ஒரு நீதியில்லை ஒரு நியாயமில்லை
மலையளவு பணம் மட்டும் புரட்டிடவே
வந்தீரோ
மாயங்கள் நடந்திட , மாற்றங்கள் நிகழ்ந்திட
காமராஜ ஆட்சி மீண்டும் கண்டிடவே மாட்டோமா
மீண்டும் கண்டிடவே மாட்டோமா...    ( செல்வதெங்கே ...)
                                                        --  பிரவீணா தங்கராஜ் . 

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...