நாற்றுகள்

வளைந்த முதுகு
வாழ்வு தருகிறது
நாற்றுகள்
       ***
பாட்டியிடம் பூமிப்பெண்
பச்சைபட்டாடை கேட்டாளோ
வயலில் நாற்றுகள்
       ***
இளநாற்றை குனிந்துவைத்து
விவசாயத்தை உயர்த்துகிறாள்
முதிர்ந்த பாட்டி
        ***
நாற்றை மண்ணில் நட்டு
இதயத்தில் கவிதை
தூவுகிறாள்
       ***
தேங்கிய வயல்நீரில்
மூதாட்டிக்கு தெரிந்தன
மக்கள் பசி
                  - பிரவீணா தங்கராஜ் .
             
       

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...