என் மரணத்திற்குப் பிறகு...

என் மரணத்திற்குப் பிறகு ...என்ன நிகழும்
கண்மூடியே யோசித்தேன்
மண்மூடி புதைப்பனரோ ? எரிப்பனாரோ ?
நான் உணர போவதில்லை
ஏதோவொரு அமைதி எண்ணில் நுழைந்தது
அதுதான் மயான அமைதியோ ?
ஏதோவொன்று இலகுவாக உணர்த்தியது 
நானெனும் உடல் , என் குடும்பம் , என்யுடமை
என் உறவு என்பதெல்லாம்
அழிந்தே போனது நிலையற்று
சிறகு முளைத்த மனிதனாக ஆத்மா
பரந்த உலகை பார்த்துக் கொண்டது
எங்கும் கொலை, கொள்ளை, திருட்டு
மனிதநேயமற்ற செயல், ஜாதியென
பிரித்தே இறைந்துகிடந்தனர் 
பார்க்க திறனின்றி நான் ஆத்மாவாக
இ(ற)ருந்து விடுகின்றேன்
எங்கோ இழுத்து செல்கின்றன காற்று
அதனிடம் கேள்வி கேட்காது பயணித்தேன்
அங்கும் இருதரப்பு உலகம் சொர்க்கம் நரகமென்று
பாவபுண்ணிய கணக்கினை கணக்கிட்டு
இங்கு யார் கணக்குபதிவாளர் வேலைப் பார்ப்பதோ ?
என்ற கேள்வி தான் எழுந்தது - அதை விட
அடுத்த பிறவியுண்டா இல்லையாயென்ற
ஆவலையும் தான்
'ட்ரிங் ட்ரிங்' யென்ற அலாரயோசை
செவிமடல் தாக்க கண் விழித்தேன்
கனவு... எல்லாம் கனவு...
இறுதிவரை தெரியாமலே போனது
அடுத்த பிறவி உண்டா !? இல்லையா ?!
                                -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...