நீயின்றி வாழ்வேது

நிச்சயித்த நாள்முதல்
என்னைப் பார்க்க
துடித்தவன் நீ - இன்று
கண் பார்த்துப்
பேச மறுக்கிறாய் .....
அலைபேசியில் நித்தம்
என் குரல் கேட்க
துடித்தவன் நீ - இன்று
மவுனம் மட்டுமே
பேசி செல்கின்றாய் .....
நித்தம் நூறு முத்தம்
கேட்டவன் நீ - இன்று
ஆயிரம் கொடுத்தும்
வாங்க மறுக்கிறாய் .....
ஊசியொன்று விரலில் பட
துடித்தவன் நீ - இன்று
கண்கள் குளமானாலும்
காணாது செல்கின்றாய் .....
' செல்லம் ' 'பாப்பா '
' டார்லிங் ' 'டியர் ' என
அழைத்தது நீ - இன்று
பெயரிட்டு கூட
அழைக்க மறந்தாய் .....
காலை வணக்கத்தை
ஐந்து மணிக்கே கூறி
இரவு வணக்கத்தை
இரண்டிற்கு கூட கூறாது
தொலைபேசி குறுந்செய்தியை
நிரப்பினவன் நீ - இன்று
சாப்பிட்டாயா என்றும்
கேட்கவும் யோசிக்கின்றாய் .....
ஊடலில் தொடரும் காதலில்
ஊடல் தணிந்து வெட்கம் படர
செய்தவனும் நீ - நீ இன்றி
உலகம் இல்லை என்று எப்பொழுது
உரைப்பவனும் நீ ...நீ...நீ...

                       -- பிரவீணா தங்கராஜ் .


Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1