எழுதுகோல் பேசுகின்றேன்
உன் எண்ணத்தை எல்லாம்
மையாக ஊற்றி கொட்டிவிடு
அது
உந்தன் பட்டாம்பூச்சி கனவாக இருக்கட்டும்
உந்தன் பாவாடை தாவானி பருவமாகட்டும்
உள்ளுக்குள் ஒளித்த ஒரு தலை காதலாகட்டும்
நல்கிய நல்லறமாக இருக்கட்டும்
வலி தந்த தாய்மையாகட்டும்
செவி தாக்கிய வன்சொற்களாகட்டும்
இப்படி இப்படியே பல
என்னவாகவோ இருக்கட்டும்
கொட்டிவிடு என்னிடம்
கண்ணீரை மையாக தாளில் நிறைத்து
உன் மனதை இலகுவாக்குகிறேன்
நான் தான் எழுதுகோல் பேசுகின்றேன்.
மையாக ஊற்றி கொட்டிவிடு
அது
உந்தன் பட்டாம்பூச்சி கனவாக இருக்கட்டும்
உந்தன் பாவாடை தாவானி பருவமாகட்டும்
உள்ளுக்குள் ஒளித்த ஒரு தலை காதலாகட்டும்
நல்கிய நல்லறமாக இருக்கட்டும்
வலி தந்த தாய்மையாகட்டும்
செவி தாக்கிய வன்சொற்களாகட்டும்
இப்படி இப்படியே பல
என்னவாகவோ இருக்கட்டும்
கொட்டிவிடு என்னிடம்
கண்ணீரை மையாக தாளில் நிறைத்து
உன் மனதை இலகுவாக்குகிறேன்
நான் தான் எழுதுகோல் பேசுகின்றேன்.
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment