வினாவிற்கு விடை...

ஒரு ஊரில்
அழகியொருத்தி இருந்தாளே
ஓர் நாளில் நடைப்பாதை
கடந்தே சென்றாளே
விழியெங்கும் கண்டது
பசுமையில்லா பூமியே
விழிமூடி உறங்குகையில்
கடவுள் வந்தாராம்
வரமொன்றும் வேண்டாமே
வினாவிற்கு விடைதா என்றாளாம்
வளி கூட அசுத்தத்துடன்
பூமியினை ஏன் படைத்தாய்...!
பொங்கும் அருவியும்
எங்கும் செழுமையும்
நான் படைத்தேன்
பொல்லாத மனிதன்
பாழாக்கி போனான்
என் செய்வேன் தோழியே....
மீண்டும் பசுமைதழைத்திட
என் செய்ய வேண்டும் இறைவா ..!
மண்ணில் ஏர் உழுதிடும்  மைந்தனை
மணம் புரிவேனென சபதமிடு
என் மங்கையே... 
பதிலளித்து மறைந்தார் இறைவனே
விழித்ததும் தந்தையிடம் கூறினாள்
விவசாயம் படித்த
மாப்பிள்ளை பாருங்கள் போதுமென்று .
                       -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1