எந்தன் தமிழ் நாட்டில் ...

தோட்டாக்கள் தழுவிய தேகம்குருதி வழிந்த மேனியென்று
இறக்கும் தருவாய் நொடிகளிலும்
கடக்கின்றேன் எதிரி நாட்டிலிருந்து
எந்தன் தாய் மண்ணில் மடி சாய்ந்து
உயிர் நீத்திட
இமைகள் கூட கண்ணிற்கு பாரமாக
மாறிக்கொண்டு இரு(ற)க்கும்
தருவாயில் சிறகு முளைக்க
இறைவனிடம் யாசிக்கிறேன்
பறந்தாவது பசி தூக்கமின்றி
பாதகமின்றி உயிரை நாட்டிற்கு
பரிசாக்கியது போல
உடலையும் பரிசாக தர முயல்கிறேன்
எந்தன் கண்ணும் , இதயமும்
யாருக்கேனும் பயன் பெற வேண்டுமென்று
எந்தன் நண்பர் கூட்டம் கண்டு கொண்டால்
நறுக்கு தெறித்த திருக்குறள்வரி போல
செப்பிடுவேன் தானம் செய்திடுங்கள்
எந்தன் கண் இதயத்தையென்று
மீண்டும் பிறப்பேன் மறுஉருவத்தில்
எல்லையில்லா வளத்திலும் வளங்களும்
தன்னில் கொண்ட தமிழ் நாட்டில் ...

              -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1