நீ என் முதல் காதல் -8
அத்தியாயம்-8 ஸ்ரீநிதி ம்ருத்யு இருவரும் ஈசிஆர் பக்கம் ஒர் ரெஸார்ட்டில் ஜவிக்காக காத்திருந்தனர். ம்ருத்யுவுக்கு இஷ்டமில்லாத சந்திப்பு. எந்த ஆடவனுக்கு தான் இனிக்கும். தான் விரும்பும் பெண், அவள் காதலனை தனக்கு அறிமுகப்படுத்த எரிச்சலில் தான் வந்தான். இதில் கூடுதலாக ம்ருத்யு எனக்கு ஒரு ஐடியா என்று ஸ்ரீநிதி கூறியதை கேட்டு செவுளில் அறையலாமா என்றிருந்தது. "எப்படி ஸ்ரீ இப்படியிருக்க? லூசாடி நீ? ரிதன்யா பிளஸ் டூ படிக்கிற குழந்தை. அவளை போய் என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லற. அதெப்படி அதெப்படி எனக்கு ஸ்ரீநிதியை விட ரிதன்யாவை பிடிச்சிருக்கு. எனக்கு அவளை கட்டிக்க ஆசை. இரண்டு வருஷம் வெயிட் பண்ணி அவளையே கல்யாணம் பண்ணிக்கறேன்னு யுகி மாமாவிடமும் ஷண்மதி அத்தையிடம் நானா கேட்கணும் இல்லை. இன்னொரு முறை இப்படி ஏதாவது மட்டமான ஐடியாவை தூக்கிட்டு வந்த, இருக்கற கடுப்புல பேசாம தாலியை எடுத்து இப்பவே உன் கழுத்துல கட்டிடுவேன். உன் லவ் சேரணும்னு யோசிக்கறதா இருந்தா யார் மனசையும் காயப்படுத்தாம ஒரு தீர்வை யோசி....