காற்றே மெல்ல வீசு
ஏய் காற்றே...
நீயும்
கார்ப்பரேட் காரர்களிடம்
கை குலுக்கிக் கொண்டாயோ?
கதிகலங்க வைத்துவிட்டாய்...!
சற்றே மெல்ல வீசி
சென்றிருக்க கூடாதா கஜா(யானை)
எப்பொழுதும் அப்படித்தானே
மெல்ல அசைந்து நடப்பாய்...!
சில்லென்ற தென்றல்
கீழ் குடிசை மீது
காதல் அரும்பியதற்கா?!
காற்றாகிய நீயும் எதிரியாய் மாறி
அசுர காற்றாய் வீசி கூரைகளை
கூண்டோடு அகற்றி விட்டாயே!
தூணாக இருந்ததையா
தென்னம் பிள்ளைகள்
கருப்பையை அகற்றியது போல
வேரோடு சாய்த்துவிட்டாயே!
பூமி தாய் தேகம் அதற்கா ஏங்கியது
போதும்
கைப்பிடி அரிசி காண்பதே அரிதென
காட்சி பொருளாய் பார்க்கும் காலத்திற்கு
இயற்கையே நீயும் தள்ளாதே
-- பிரவீணா தங்கராஜ் .
நீயும்
கார்ப்பரேட் காரர்களிடம்
கை குலுக்கிக் கொண்டாயோ?
கதிகலங்க வைத்துவிட்டாய்...!
சற்றே மெல்ல வீசி
சென்றிருக்க கூடாதா கஜா(யானை)
எப்பொழுதும் அப்படித்தானே
மெல்ல அசைந்து நடப்பாய்...!
சில்லென்ற தென்றல்
கீழ் குடிசை மீது
காதல் அரும்பியதற்கா?!
காற்றாகிய நீயும் எதிரியாய் மாறி
அசுர காற்றாய் வீசி கூரைகளை
கூண்டோடு அகற்றி விட்டாயே!
தூணாக இருந்ததையா
தென்னம் பிள்ளைகள்
கருப்பையை அகற்றியது போல
வேரோடு சாய்த்துவிட்டாயே!
பூமி தாய் தேகம் அதற்கா ஏங்கியது
போதும்
கைப்பிடி அரிசி காண்பதே அரிதென
காட்சி பொருளாய் பார்க்கும் காலத்திற்கு
இயற்கையே நீயும் தள்ளாதே
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment