Posts

bye bye 2018 welcome 2019

Image
இன்னுமொரு வாரமே என்னை விட்டுப் பிரிய போகின்றாய்...! நான் கலங்குவதாக யில்லை உன்னை சந்தித்தப் போது எத்தகைய ஆர்வம் கலந்து எதிர்பார்ப்போடு சந்தித்தேனோ... அதே ஆர்வத்தோடு வழியனுப்ப போகின்றேன் நான் தான் நானே தான் நீ எனக்கு கொடுத்த இன்பத் துன்பத்தையும்  அன்பும் அழுகையும் ஏமாற்றத்தையும் ஏக்கத்தையும் வித்தியாச அனுபவங்களையும் ஏற்றுக் கொண்டு நிறைவான காதலோடு உன் பிரிவுக்கு தலை வணங்கியே பிரியா விடை தருகின்றேன் உன்னைப் போலவே எண்ணில் கலக்க வரவிருக்கும் இவ்வாண்டை அதே ஆர்வத்தோடு சந்திக்க தயாராகின்றேன்.            -- பிரவீணா தங்கராஜ்.

வரிகள் வடிக்கும் காதலி- காதல் பிதற்றல் 44

நிலவு பார்த்து கவிதை பேசும் கவிஞன் அல்ல உன் நினைவு எண்ணி வரிகள் வடிக்கும் காதலி நான்                     - பிரவீணா தங்கராஜ்.

காதல் பிதற்றால்-44

பிரபஞ்சத்தின் அத்தனை சந்தோஷமும் என்னிடம் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை என்னிடம் இல்லை அது எல்லாமே வெறுமை என்றே உரைப்பேன் நான் ஒன்றும் மேதை அல்ல உன் ஒற்றை சொல்லிலும் உன் ஓரப்பார்வையிலும் உன் மென்னகையிலும் உள்ளது எந்தன் பிரபஞ்சத்திற்கு ஈடான சந்தோஷம்...               - பிரவீணா தங்கராஜ்.

என் இறப்பு எவ்வளவோ - காதல் பிதற்றல் 43

உன் ஒற்றை மவுனம் உன் பார்வை திருப்பம் உன் புன்னகை துடைத்த முகம் இவையெல்லாம் இல்லாத உன்னை காண்கையில் என் இறப்பு எவ்வளவோ மேல்.                                - பிரவீணா தங்கராஜ்.

எந்தன் உயிர் தோழியே...!

எனக்கொரு நண்பி இருந்தாள்  எந்நாளும் துணையாய் இருந்தாள் எச்சி பண்டம் என்பதெல்லாம் எங்களுக்குள் இல்லை எனலாம். மதங்கள் விழுங்கிய தோழமையே... மலர் போலவே பூஜித்தாள் தன்னலமில்லா ... துரோகமில்லா... நேர்மையானவள் தவறு செய்தால் சுட்டிக்காட்டவும் திறமையிருந்தால் தட்டிகொடுக்கவும் தவறாத தங்கநிலவுவள் எந்தன் மகிழ்வை விரும்புபவள் எந்தன் நலனை நாடுபவள் நாட்கள் எங்களை பிரித்தாளும் நினைவில் என்றும் நீங்காதவள்...                      --பிரவீணா தங்கராஜ் .

பூட்டி வைத்த காதலது

Image
என் இதயம் சென்று திரும்பும் உன் மூச்சுக் காற்று அறிந்தும் கூறவில்லையா உன்னிடம் ?! என் கண்கள் பார்த்துத்  திசையை மாற்றிக் கொள்ளும் உன் ஈர்ப்பு கண்கள் உணர்த்தவில்லையா ?! உன் இதயத்திடம் கண்களிலிருந்து இதயத்திற்கு என் காதலை கடத்திச் செல்லும் இரத்தச் செல்களை பாதியிலே வழிமறித்து புறக்கணிப்பது யார் ? உன் மூளையா ? நித்தமும் என் தேடலை உணர்ந்தே உன் பாதையை மாற்றிடாது வந்திடும் உன் கொலுசொலி பாதம் உன் தடத்தை பின்பற்றும் என் வன்பாதம் செல்லுதே... பஞ்சபூத நிலமவன் கதைக்கவில்லையா ?! யார் தான் சொல்வது ? எந்தன் இரும்பு இதயத்திலும் பூட்டி வைத்த காதலது மென் பூவுடையாளானா உன்னை கண்டு சரணடைத்ததை....!                                  -பிரவீணா தங்கராஜ் .

விவசாயி மைந்தனே !

கையில் அலைப்பேசி கொடுத்து கொடுத்தே கவளம் சோற்றுக்கும் கையேந்து நிலையானது சேயே நீ அடியெடுத்து வைக்க தாயே உன்னை பற்றியபடி களமிறங்க நாற்றுகள் நீயெடுத்து சேற்றில் நட நெல்மணிகள் சொர்ணமாய் வளர்ந்திடுமே அயல்தேசம் கையேந்தும் உன்னிடம் அதுவரை பொறுத்திரு விவசாயி மைந்தனே !                           -- பிரவீணா தங்கராஜ் .

தேவதையாகவே...

Image
மந்திரக் கோலை கைகளில் ஏந்திவரவில்லை மண்ணில் தவழ தவழ வெண்ணிறக் கவுனை அணியவில்லை தலையில் ஒளிரும் கிரீடம் சூடிடவில்லை தக தகவென மின்னலாய் ஒளியும் சூழவில்லை மாயாஜால வித்தைகள் செய்திடவில்லை மந்திரச்  சொற்கள் உச்சரித்து கதைக்கவில்லை இருந்தும் என் கண்களுக்கு தேவதையாகவே...! ஆம் ... இறுகி பிடித்த உள்ளாடையை நாகரிகமென அணியாது கறிகளை கவ்வி ரத்தம் சொட்ட சொட்டவிருக்கும் நாயின் வாயை போல உதட்டு சாயம் பூசவில்லை ஒப்பனை என்ற பெயரில் முகத்திற்கு சுண்ணாம்பு அடிக்கவில்லை மென் புன்னகையோடு தேவதையாகவே... இன்றும் இருக்க தான் செய்கின்றனர்.                   - பிரவீணா தங்கராஜ் .

காற்றே மெல்ல வீசு

ஏய் காற்றே... நீயும் கார்ப்பரேட் காரர்களிடம் கை குலுக்கிக் கொண்டாயோ? கதிகலங்க வைத்துவிட்டாய்...! சற்றே மெல்ல வீசி சென்றிருக்க கூடாதா கஜா(யானை) எப்பொழுதும் அப்படித்தானே மெல்ல அசைந்து நடப்பாய்...! சில்லென்ற தென்றல் கீழ் குடிசை மீது காதல் அரும்பியதற்கா?! காற்றாகிய நீயும் எதிரியாய் மாறி அசுர காற்றாய் வீசி கூரைகளை கூண்டோடு அகற்றி விட்டாயே! தூணாக இருந்ததையா தென்னம் பிள்ளைகள் கருப்பையை அகற்றியது போல வேரோடு சாய்த்துவிட்டாயே! பூமி தாய் தேகம் அதற்கா ஏங்கியது போதும் கைப்பிடி அரிசி காண்பதே அரிதென காட்சி பொருளாய் பார்க்கும் காலத்திற்கு இயற்கையே நீயும் தள்ளாதே                             -- பிரவீணா தங்கராஜ் .

மழைக்கு ஒதுங்கிய வானம்

Image
சிறுதூறலில் என்னை குழந்தையாக்கி பெருசாரலில் நாசியை வருடும் மண்வாசம் கிளறியே... ஒரு கோப்பை தேனீரில் கசந்ததோ சுகந்ததோ மனதின் மூளையில் தேங்கிய நிகழ்வை முன்னிறுத்தி நாழிகளை நகர்ந்திடாது மயிலிறகாய் வருடுகின்றாய்... சோனையில் கப்பல் விட அடம்பிடிக்கும் குழந்தையாய் துள்ளுகின்றது என் மனம் ஆசாரம் அளித்திடுமே... கவிஞனுக்கு கவிகளாய்...காதலுக்கு தோழனாய்... வான் மழையே... வா மழையே...! சிறு தூறலோ... பெரும் திவலையோ... பச்சை நெற்பயிரில் பட்டு தெறிக்க வைரத்தை மூடிய தங்க பஸ்பமாக நெல்மணி கண்ணு(திரு)ம் வளர்ந்திடவே! உழவனின் நேசத்தின் வரவேற்பின் மழைக்கு ஒதுங்கிய வானம் வழிவிட மண்ணிற்கு அழுத்த முத்தமிட்டே சுவடுபதி ஆலியே... !                    -- பிரவீணா தங்கராஜ் .

எங்கள் அன்பு ஐய்யாமை...

                                         எங்கள் அன்பு ஐய்யாமை ,                          எப்பொழுதும் மாத்திரை பெட்டியை எடுத்துக் காலை மாலை இரவு என பிரித்து ஒரு தண்ணீர் பாட்டிலை அருகே வைத்துக் கொண்டும்  ஒரு துணியை எடுத்து தண்ணிர் பாட்டில் மாத்திரை பெட்டி கட்டில் என அதை கொண்டு துடைத்து சுத்தமாக வைத்தபடி இருக்கும் இடம் மட்டுமல்ல தன்னையும் முகமலர்ச்சியோடு இருப்பது அவர்களின் வழக்கம் . கூடவே ஒரு கைபேசி வேறு . இதுவே எங்கள் ஐய்யாமை .               ஐய்யாமை அப்பாவின் அம்மா . எங்களுக்கு பாட்டி . அப்பாவின் அம்மாவை ஐய்யாமை என்றும் அப்பாவின் அப்பாவை ஐய்யப்பா என்றும் அழைப்பது வழக்கம் .              எல்லோருக்கும் த...

புது விடியலைப் படைத்திடு

எழுதுக்கோல் பற்றியிருக்கும் விரல்களுக்கு கூட எழுதும் விதி இதுயென அறிந்திட வாய்ப்பில்லை எண்ணங்களின் வண்ணங்கள் மட்டுமே ஏற்றயிறக்கங்களை உண்டென உணர்ந்திடு  வறுமையை மாற்ற உழைப்பை விதைத்திடு இருமைக் கொண்டு நடந்திடும் நிகழ்வுகள் இன்பத் துன்பத்தை இனிதே செப்பிடும்  கண்ணீரை கணமும் நிறுத்திப் பிறருக்கும் புன்னகை நாளும் பரிசாய் பூரித்திடு பகைமை யெனும் பண்பை ஒழித்து தகமை நாடும் உள்ளத்தில் ஒளிர்விடு எனக்கு மட்டுமே இப்படியா என்று எக்களிக்கும் நிகழ்வுகளை மதியால் மாற்றிடு எண்ணியெண்ணி சிரத்தையாய் செப்பிடும் கனவுகளை வர்ணங்களைக் கலந்தே விதிக்கு மாற்றி வாழ்வுக்குப் புது சாயம் மெருகேற்றிடு புது விடியலைப்  படைத்திடு                            -- பிரவீணா தங்கராஜ் .

காதல் பிதற்றல் -42

முரண்பாட்டான கள்வன் நீ உன் இதயத்தை எனக்குள் பத்திரப்படுத்தி செல்கின்றாயே...!            -- பிரவீணா தங்கராஜ் . 

சற்றே விலகிக் கொள் - காதல் பிதற்றல் 41

இறுகப் பற்றிய நம் அணைப்பால் காற்றுக்கு மூச்சு அடைகின்றது சற்றே விலகிக் கொள் காற்று சுவாசித்துக்  கொள்ளட்டுமே...                  -- பிரவீணா தங்கராஜ் .  

மீச்சிறு அருவி

மீச்சிறு அருவியாய் பொழிகின்றது உன் கண்கள் எனக்கு தான் வெள்ளமென என் இதயத்தை தத்தளிக்க செய்து உயிர் கசியும் வேதனை அளிக்கின்றது                  -- பிரவீணா தங்கராஜ் .