ஸ்டாபெர்ரி பெண்ணே-26(முடிவு)
🍓 26 உதய் தான் போனில் கேட்டு கொண்டு இருந்தான். வெற்றி ஆராதனா தாய்மை செய்தியை உறுதி செய்ததையும் சொன்னான். உதய் மனம் நிஜமாகவே மகிழ்ச்சி உற்றது. உண்மையான அன்புக்கு தீங்கு செய்ய தோணாது.. நல்லதை தான் அவர்களுக்கு வழங்க தோன்றும்..அதே தான் உதய் செய்தான். என்ன தான் அவள் தாய்மை அடைய மாட்டாள் என்று அறிந்து விலகியது தனது காதலில் சறுக்கல் வந்தன. அதனால் தான் வெற்றி உண்மையான அன்பு காதல் எல்லாம் ஆராதனாவுக்கு எத்தகைய நிலை என்றாலும் கூடவே நின்றான். இதோ இப்பவும்... வாழ்வில் சிலர் இவருக்காக இவர்கள் என்று கடவுள் எழுதி இருப்பதும் ஒரு வித காரணத்திற்காக தான். அதே போல வாழ்வில் எந்த காரணமும் நமக்கு கஷ்டம் கொடுத்தாலும் இறுதியில் நன்மைக்கு தான் முடியும் என்றே எண்ணினான். கடவுள் எழுதும் கத...