முதல் முதலாய் ஒரு மெல்லிய-14 &15

💘 14 அன்று ஞாயிறு கோவிலுக்கு செல்ல திட்டமிட்டனர். பவித்ரா , தன்யா , சுவாதி மூவரும் தாவணி அணிந்தனர். இதுவரை அஸ்வின் பவித்ராவை சுடிதாரில் தளர பின்னிய ஒற்றை ஜடையில் பார்த்து இருந்தான். இன்று பாவாடை தாவணியில் இரட்டை ஜடையில் பார்க்க மேலும் அழகாக தெரிந்தாள். ஆகாஷிற்கும் அதே என்ன ஓட்டம் தான். அஸ்வினை போல நேரிடையாக தன் காதலை சொல்ல நினைத்தான். இன்று சுவாதி தனியாக இருக்க நேரிட்டால் கூறிட வேண்டியது தான் என்று நினைத்தான். தனுவை விஸ்வநாதன் , '' என் மகளா இது ? அழகா தேவதை போல இருக்கா , என்ன வாய் தான் கொஞ்சம் நீளம் '' எனக் கூற தன்யா செல்லமாய் முறைத்தாள். முன்பு போலவே அர்ச்சனை வாங்கிப் படியேறினர். சாமி பெயரில் அர்ச்சனை செய்ய... பிராத்தனை போதும் அஸ்வின் கண்கள் பவித்ராவையே நோக்கின. ராதை கவனித்து தீபம் காட்டியதை மகனுக்கு சுட்டி கட்டிட அசடு வழிந்தான் , ஆலயம் வலம் வந்து அமர்ந்து முதல் ஆளாக செருப்பை மாட்டி ராதை கையை சிறு குழந்தை போல கெட்டியாக பிடித்துக் கொண்டாள். அஸ்வினுக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கி பவித...