அலுவலகத்திலிருந்து கிளம்பும்போதே ஆயிரம் கலக்கம் மனதில் . இன்று , என்ன வம்பு செய்திருப்பானோ .?! நேற்றே , தங்கை கூறிவிட்டாள் . இனி , பொறுத்து போக மாட்டேன் . நானே கன்னத்தில் அறைந்து விடுவேனென . இதோ ! வீடு வந்துவிட்டது . தங்கை அருகே அவன் , முகம் முழுதும் மிட்டாய் சுவடோடு , டாம் அண்ட் ஜெர்ரி நிகழ்ச்சியை கண்டு கொண்டு , நித்தம் நுறு குறும்பு செய்யும் என் மகன் . அவனை முத்தமிட்டதால் ... பால் பற்களில் கடி வாங்கி , கன்னத்தை பிடித்தபடி , கல்லுரி பறவை என் தங்கை . எப்பொழுதும் போல் நமுட்டு சிரிப்புடன் நான் . -- பிரவீணா தங்கராஜ் .