💟(௮) 8 வீதியில் எல்லாம் ருத்திரா சமுத்ராவை அழைத்து வரும் செய்தி அறிந்து முரசுகள் ஒலித்தன. மேகவித்தகன் மஞ்சரி இருவரும் ஒரே புரவில் வர மக்கள் சிலர் அதனை விழி விரிய கண்டனர். வேந்தர்கள், மந்திரியர்கள் என்றே சால சிறந்தவர்கள் இமைக்க மறந்து பார்த்து இருக்க, ருத்திரா மிடுக்குடன் இறங்கி வந்து நின்றாள். ''தலை வணங்குகின்றேன்... வேந்தே... இன்னாட்டின் இளவரசி உயிர் அரணாக பாதுகாத்து கொண்டு வந்தாயிற்று... இனி இவளை தேடி அம்மூடன் வந்தால் திரும்ப அவன் யாக்கையில் ஆன்மா தங்காது'' என்றே செப்பிட மஞ்சரிக்கோ ருத்திராவுக்கு யார் இப்படி செய்தது என்றே அறிந்தும் மறைக்கின்றாள் என்றே விசித்திரமாக காண ருத்திரா மஞ்சரியை காணாமல் ''வேந்தே.. மற்றும் ஒரு செய்தி.. அங்கே ஒரு இக்காட்டி...