ஸ்டாபெர்ரி பெண்ணே- 16
🍓16 காலையில் எழுந்ததும் ஆராதனாவுக்கு மனமே கனத்தது. ஏன் என்று தெரியவில்லை... வெற்றி எப்பவும் போல தன்னை மிடுக்காக தனது நிலையை மறைத்து கொண்டான். ஆராதனவால் தான் முடியவில்லை. வெற்றியோ ஆராதானாவுக்கு மேலே கனத்து இருந்தான். அவனுக்கு எது நடந்தாலும் கஷ்டம் என்ற நிலை.. தன்னை ஆராதனா விட்டு சென்றாலும் வலி அவளை உதய் மறுத்து உண்மை சொன்னாலும் வலி என்றே இருந்தான்.ஆனால் எப்பொழுதும் போல இயல்பாக இருக்க முனைந்தான். உதய் எண்ணுக்கு அழுத்தி தொடர்பு கொண்டாள். புது எண் என்றதும் உதய் எடுத்து பேசிட அவனின் குரலில் ஆராதனா அப்படியே பேச மறந்தாள். பேச மறந்தால் என்றதைவிட அவளுக்குஅவனோடு பேச பிடிக்கவில்லை என்பதே உண்மை. வெற்றியை பார்க்க அவளின் பார்வை உணர்ந்தவன் போனை வாங்கி ...