சப்பாத்தி எக் கிரேவி

சப்பாத்தி எக் கிரேவி. சைவம் விரும்பும் ஆட்கள் பன்னீர், காளான், சேர்க்கலாம். காய்கறிகள் மற்றும் மசாலா சுவையுடன் குழந்தைகள் விரும்பும் வகை. சப்பாத்தி செய்து நீளவாக்கில் கத்தரித்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, இஞ்சி, வெங்காயம் வதக்கவும். தக்காளி, கேரட், குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கிளறவும். நீளவாக்கில் துண்டாக்கிய வைத்த சப்பாத்தியை சேர்த்து நன்கு கலந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும். முட்டை சேர்க்க விரும்புவோர் சேர்த்து கொள்ளவும். சிலருக்கு பாஸ்தா மேகி பிடிக்கும் குழந்தைக்கு சப்பாத்தியை இவ்வாறு செய்து கொடுத்தால் அதிகம் சாப்பிட விரும்புவார்கள்.