நிமிர்ந்து பார்த்திடு மகனே!



 















உன் தாயின் வயிற்றில்
அமர்த்தலாக அமர்ந்தப் போதே
நான் நெஞ்சில் யுன்னை
சுமக்கத் தயாரானேன்
செவிலியுன்னை துணிச் சுற்றித் தர
பெற்றுக் கொண்டேன் மகனே
குழந்தையான உன்னைமட்டுமல்ல
எந்தன் யுலகத்தையும்
எச்சியொழுக புரியாமொழியில்
நீ பேசிட நானோ
ஜென்களின் தலைவன் பேச்சிக்கு
கட்டுப்பட்டவன் போல கிடந்தேன்
தளிர் நடையில் மொட்டு கையில்
என் சிகையினை பிடித்திழுத்து
நீ செய்யும் குறும்புகளில்
நான் கோமாளியாய் நனைந்தேன்
உன் ஏக்கப்பார்வை போகும் திசையெல்லாம்
என் மனக்குறிப்பில் எழுதி
உனக்கே அறியாது
ஆச்சரியமூட்டும் பரிசாகத் தர
வியப்பில் விழிகள் விரிய குதூகலிப்பாய்
தேரில் சிங்கத்தின் மேல்
பவனி வரும் அம்மனை காண
தோளில் உனையேற்றியே ரதமாவேன்
அக்கணம் குழம்புவது என்முறை
தேரில் வருவது இறையா ?! அல்லது
தோளில் அமர்ந்திருக்கும் நீ இறையா ?!
காய்ச்சலென கட்டிலில்
இமை மூடி உறங்குவது நீ
சோம்பியிருப்பது நான் .
பள்ளிச் சென்று பாடம்படித்து
கேள்விகள் பல எழுப்புவாய்...!
மெத்த படித்த நானோ
எதற்கும் பதில் தெரியாதது போல
பாவலா செய்திட
முல்லை சிரிப்பில்
அப்பாவிற்கு ஒன்றும் தெரியாதென
ஜம்பமாய் விடை சொல்வாய்
எல்லாம் தெரிந்த பரம்பொருளாய்..!
நன்றாக தானே தொடர்ந்தது
மீசை அரும்பமிடுக்காய் மாறி
விலகிட முயன்றாய் ...
உன் நண்பன் போல
பழகிட முனைந்தும்
தள்ளியே வைத்தாய் ...
தள்ளியும் போனாய் ...
நிதர்சன பிரிவு
ஏற்க மறுக்குது என் நெஞ்சம்
என் ஐம்பதை உன் இருபது
ஒரு வில்லனை போலவே பார்க்கின்றது
நீ ஹீரோவாக இருப்பதால் யென்னவோ?!
இப்பொழுதெல்லாம் சொல்ல இயலாத
காழ்ப்புணர்ச்சி என்மீதே
என்னை கேட்காது முடிவெடுக்கும்
எந்நிகழ்வும் எனக்கு வலியை தருகிறது
இதுவரை வாழ்ந்த என்வாழ்வில்
எனக்கானது வழ்ந்தேனா ?
யோசித்து யோசித்து சருகானேன்
இம்மியளவு கூட நீயில்லையெனில் 
வாழ்வு பிரகாசிப்பதில்லை  
நாளிதழை படிப்பதும்
நாற்காலியில் அமர்ந்து ஓய்வு எடுப்பதும்
நாட்கள் நகர்ந்தாலும்
நடித்துக் கொண்டுயிருக்கிறேன்
சருக்கான என் வாழ்வு உதிர்வதற்குள்
உன் தளிர் வாழ்க்கையில்
என்னை நிமிர்ந்து பார்த்திடு மகனே !
உன்னை நோக்கியே
அடிப்பணிந்து கிடக்கிறது என் வாழ்கை .
                        -- பிரவீணா தங்கராஜ் .
 
 
 
 

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1