நான் மழலையாகி மகிழ்கிறேன்
நான் மழலையாகி
மாறிதான் போகின்றேன்
உப்பு மூட்டையாய்
மழலை யாசைகள்
பனிக்கூழ் கண்டதுமே
துள்ளிடு மிதயம்
பாகாய் உருகி வழிந்தே
ருசித்திடுவேன்
மழைச்சாரல் வந்ததுமே
பரவசமாய் களித்திடுவேன்
மண்வாசம் நுகர்ந்திட்டே
நனைத்திடுமே யாக்கையுமனமும்
தாளில் கப்பல் செய்தே
பயணித்திடும் மழலைனான்
எலிப்பூனை நகைச்சுவையை
இந்நாளும் ரசித்திடும் குழவினான்
மகவுக்கு முழுமிட்டாய்
தின்றால் பூச்சுவருமென்று
பாதிமிட்டாய் பங்குச்செய்து
கொள்ளும் கள்ளபிள்ளைனான்
தவறு செய்து
விழிபிதுங்கி நிற்பதாகட்டும்
திக்கி திணறி மெய்பேசி
ஒப்புக் கொள்வதாகட்டும்
பிடிவாதம் செய்து போலி சினத்தால்
முகத்தை திருப்பிக்கொள்வதாகட்டும்
எந்தன் மழலைக் குணம்
அப்படியே தான் என்னுளுள்ளது
உயிர்ப்புடன் வைத்தே
நான் மழலையாகி மகிழ்கிறேன்.
-- பிரவீணா தங்கராஜ் .
மாறிதான் போகின்றேன்
உப்பு மூட்டையாய்
மழலை யாசைகள்
பனிக்கூழ் கண்டதுமே
துள்ளிடு மிதயம்
பாகாய் உருகி வழிந்தே
ருசித்திடுவேன்
மழைச்சாரல் வந்ததுமே
பரவசமாய் களித்திடுவேன்
மண்வாசம் நுகர்ந்திட்டே
நனைத்திடுமே யாக்கையுமனமும்
தாளில் கப்பல் செய்தே
பயணித்திடும் மழலைனான்
எலிப்பூனை நகைச்சுவையை
இந்நாளும் ரசித்திடும் குழவினான்
மகவுக்கு முழுமிட்டாய்
தின்றால் பூச்சுவருமென்று
பாதிமிட்டாய் பங்குச்செய்து
கொள்ளும் கள்ளபிள்ளைனான்
தவறு செய்து
விழிபிதுங்கி நிற்பதாகட்டும்
திக்கி திணறி மெய்பேசி
ஒப்புக் கொள்வதாகட்டும்
பிடிவாதம் செய்து போலி சினத்தால்
முகத்தை திருப்பிக்கொள்வதாகட்டும்
எந்தன் மழலைக் குணம்
அப்படியே தான் என்னுளுள்ளது
உயிர்ப்புடன் வைத்தே
நான் மழலையாகி மகிழ்கிறேன்.
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment