எந்த நொடியில் என்னிதயம்

அவள் புள்ளி வைத்து
போட்ட கம்பிக் கோலத்தில்
என்னிதயமும் அடைப்பட்டதா ?
அவள் வீட்டுப் பூவை
பறித்தப் போது
என்னிதயமும் பறிபோனதா ?
அவள் மயிலிறகு தொலைத்து
தேடிய போது
என்னிதயமும் தொலைந்ததா ?
அவள் எழுதுகோலை
பல்லிடுக்கில் கடித்தப் போதே
என்னிதயமும் கடிபட்டதோ ?
அவள் காந்தப் பார்வைக்கு
கூடுதல் ஒளிவீச மைதீட்டிய போது
என்னிதயமும் ஒளிவீசியதோ ?
எப்படி இழந்தேன் என்னிதயத்தை
யாரேனும் காதலில்
முனைவர் பட்டம் பெற்றிருப்பின்
எந்த நொடியில் என்னிதயம்
களவாடப்பட்டதென சொல்லுங்கள்
அதை அவளுக்கு சொல்லவேண்டும்
அவளொரு கள்வனின் காதலியென்று
ஆம் நான் கள்வனே
அவள் இதயத்தை திருடியதால்...
         -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1