விடைகள் இல்லா வினாக்கள்

சின்ன சின்ன குடில்கள் எங்கே ?
ஸ்வரமாய் இசைக்கும் கீச்சுக்குரல் எங்கே ?
நெல்மணியை அலகில் கொத்தி
சிறகையடிக்கும் தூக்கனாங் குருவி எங்கே ?
அது சரி நெற்கதிர் தான் எங்கே ?
சாணம் கரைத்து தெளித்த வீடு எங்கே ?
நீரைக் கலக்காத பசும்பால் எங்கே ?
மந்தை மந்தையாய் புற்கள் மேயும்
மாட்டு கூட்டம் தான் எங்கே ?
அது சரி நீர் தான் எங்கே ?
சிலுசிலுவென வீசும் தென்றல் எங்கே ?
நெடுஞ்சாலையில் நிழல்தந்த மரங்கள் எங்கே ?
மரத்தின் வேரை பிடியாக பிடித்த மண் எங்கே ?
மண்ணின் தோழன் மண்புழு எங்கே ?
அது சரி நிலம் தான் எங்கே ?
விடைகள் இல்லா வினாக்கள் மட்டுமே
நீரைப் பறித்தாய்... நிலத்தைப் பறித்தாய்...
வாழும் நிலத்தின் வளத்தைப் பறித்தாய்...
போராட்டம் அது மட்டும் வாழ்வில் எதற்கு ?
நாளை சரித்திரம் சொல்வதென்ன ?
தமிழ் எங்கே ? தமிழ் மொழி எங்கே ?
தரணியில் திமிர் பிடித்த தமிழன் எங்கே ?
கவிகள் மட்டும் பல தந்து சென்றான ?
அது சரி மனித நேயம் எங்கே ? தமிழ் நாடு எங்கே ?
என்று கேட்டு புலம்பவா ?
விடைகள் இல்லா வினாக்கள் மட்டுமே .
                       -- பிரவீணா தங்கராஜ் .

Comments

Popular post

ஸ்டாபெர்ரி பெண்ணே

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

ஸ்டாபெர்ரி🍓 பெண்ணே👩 -1

பிரம்மனின் கிறுக்கல்கள்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1