அக்கோடைமழை ...

யாவரும் எதிர்பார்த்த அக்கோடைமழை
யதார்த்தமாக பொழிந்துக் கொண்டுயிருக்கின்றன
துளியாய் துளித்துளியாய் ...
முதலில் கடுகளவு சிந்திய அத்துளி
எஞ்சிய மரத்தின் இலையிலிருந்த
வாகன தூசுகளையும் மாசுகளையும்
சற்று பெருந்தூரலால் கழுவி சுத்தம் செய்தன
பின்னர் கருப்பு தார்சாலை முழுதும்
அச்சரால் பரவியே போயின
மழையின் பெருந்தூரலால்
ஆங்காங்கே மாடியில் எடுக்கப்படாத துணிகள்
முழுதும் நனைந்தன
நீருக்கு தவித்த மக்கள்
அக்கோடை மழையை கண்டு
சிலர் முகம் சுளிக்க
கப்பல் விட காகிதம் தேடின
சில குழந்தைகளும் குழந்தை மனமும்
கவிதை பாடின சில கவிஞன் உள்ளம்
காக்கை கூட மரத்தில் அமர்ந்தவாறு
தொப்பலாய் நனைந்து
தன் கண்களை உருட்டி உருட்டி
மழையை விழி விரிய கண்டுயிருந்தன
அந்த தெருவோரமிருந்த குடிசையில்
படுத்துறங்க இடமின்றி
எங்கே எங்கே மழைநீர் ஒழுகுமோ
அங்கங்கே
தட்டு முட்டு பாத்திரங்கள் தேடியபடி வைத்தே 
அம்மழையை அப்பொழுதும் வேண்டி ரசித்தபடி
இன்னும் இருக்கின்றன டிஜிட்டல் இந்தியா .
                                          -- பிரவீணா தங்கராஜ் .
 

Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு