இறவாதக் காலம்
நினைவு சங்கிலியை
மெல்ல மெல்ல அவிழ்த்து
இறந்தக் காலத்தை
நினைவு காலத்தில் முனைப்பாய் கொண்டு வந்து கவிழ்த்தேன்
தட்டாம் பூச்சியை தாவிப் பிடித்ததும்
ஆற்று நீரில் அமிழ்ந்து அள்ளி குளித்ததும்
மணற்பரப்பில் கோட்டை கட்டி
மணலை குழப்பியும்
இரட்டை சடையில் வண்ணரிப்பனை முடித்திட தெரியாது விழித்து நின்றதும்
வரப்பு நீரில் கொலுசுகள் இசைக்க
துள்ளி ஓடியதையும்
மயிலிறகை புத்தகத்தில் பொத்தி வைத்து
எழுதுக்கோளின் மரத்தூளை உணவளித்து காத்திருந்தேன்
குட்டி போடவும்
பூப் போட்ட பாவாடையில் மிட்டாயை கடித்து
தோழிக்கு பகிர்ந்து உண்ட மணித்துளிகள்
தந்தையின் கையிருப்பில்
பார்த்த பேய் படங்கள்
அரைப் பெடல் அடித்து சைக்கிளோட்டி
கீழே விழுந்த சிராய்ப்புகள்
வெள்ளி கிழமை தோறும் ஒளிப்பரப்பாகவும் புதுப் பாடல்பனை
பழத்தை பற்களில் சிக்கி
முகத்தில் அப்பியும்
எவ்வித நெருடல்களையும்
மனதில் பதிய வைக்காது
சுற்றி திரிந்ததை பத்திரமாக
மெல்ல மெல்ல
இதயத்தில் கட்டிப் பதித்துக் கொண்டேன்
நிகழ்கின்ற சங்கிலி தொடர் அனுபவங்கள்
அதனுள் பாதிக்காத வண்ணம்
இறந்த காலத்தை
இறவாத காலமாக வைத்திருக்க...
-- பிரவீணா தங்கராஜ் .
Comments
Post a Comment