தீவிகை அவள் வரையனல் அவன்-25

🪔🔥-25

     மருந்தின் வீரியத்தில் மயக்கத்திற்கு சென்ற சம்யுக்தாவை அந்தப் பெண் யாருமறியாது அந்த அறைக்கு சம்யுவை இழுத்து சென்று படுக்க வைத்தாள். 

      ட்ரிப்ஸ் போட்டு விட்டு வியேர்வையை துடைத்து முடித்தாள். 

     மீண்டும் போனை எடுத்து நடந்தவையை அந்த டாக்டரிடம் கூறி முடித்தாள். 

      மறுப்பக்கம் "என் மகள் இந்தியா வரும்வரை அந்த பெண்ணை இதே போல மயக்கத்துல வைச்சியிரு. அதுவரை இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம். உன் பங்குக்கு நான் பேசிய பணம் உன் அக்கவுண்டுக்கு வந்திடும் சரியா " என்று ஆசைக் கூட்டியே வைத்தார். 

     பணம் என்றால் பிணமும் வாயை பிளக்க, அங்கே காவல் புரிந்தாள் அனுரேகா. 

     "ஏ... அனுரேகா.. அங்கயே என்ன பண்ணற. லன்ச் டைம் வா சாப்பிடலாம்." என்றதும்  சம்யுக்தாவை பார்த்து மருந்து தான் வேலை செய்தாயிற்றே. அடுத்த முறை மயக்கமருந்து செலுத்தும் பொழுது பார்க்கலாமென்று சென்றாள். 

     திவேஷ் ஆரவிற்கு பயந்து அடுத்த நாளே லண்டன் ஓடினான். 

      அங்கு சென்ற பிறகு நிலவரத்தை அறிய தந்தையிடம் சம்யுக்தாவை பற்றி கேட்க, அவள் ஆரவிடம் வந்து நேரவில்லை என்றும் சுவாமிநாதனை பார்க்க வரவில்லை. சுவாமிநாதனுக்கு வேறு உடல்நிலை மோசமாகி இருந்தும் வரவில்லை. தினசரி தேடுவதாக தகவல். 

   ஆரவின் தற்போதைய புகைப்படம் தந்தை அனுப்பியதை கண்டால், நிஜமாகவே சம்யுக்தா வராது இருப்பது புரிந்தது. சம்யுக்தா எங்கே போயிருப்பாள். வண்டியில் இருந்து விழுந்தவள் உயிர் போயிருந்தா கூட இங்கே அநாதை பிணம் என்றோ, ஆக்சிடேண்டோ என்று செய்திகள் பக்கம் பக்கமாக வந்திருக்க வேண்டுமே அப்படி எதுவும் வரவில்லை. 

    சம்யுக்தாவுக்கு என்ன ஆனது என்ற பயம் திவேஷுக்கும் இருந்தது. அது ஆரவிற்கு என்றாவது தான் தன் கடைசியாக சம்யுவை இப்படி கடத்த செய்த வேலையால் என்றறிருந்து விட்டால்... நினைக்கவே பயந்த்தான்.

     சந்துரு ஆரவ் சேர்ந்து ஏதேனும் அநாதை இல்லம் கோவில் சேவை முகாம் என்று தேடி அலைந்தார்கள். 

     எங்கும் சம்யுக்தா பற்றி தகவல் அவர்களுக்கு சாதகமாக அமைந்தததாக இல்லை.  ஆரவ் வாழ்வு தேடுதலில் கழிய துவங்கியது. 

    வைஷ்ணவியை கவனித்தாலும் மாமியாரை அம்மாவாக, வந்த சில காலத்திலே எண்ணி நடந்து கொண்ட சம்யுவை சுபாங்கினி நினைக்காத நாளில்லை. 

     ஒரு மாதக் காலமாக இப்படி வெறுமை ஆட்டிப்படைக்க ஆரவ் வாழ்க்கை சூனியமாக சென்றது. 

     அன்று அனுரேகா உறங்கும் சம்யுவின் உடல்நிலையை பரிசோதிக்க செய்து முடித்து அதிர்ந்தாள். 

     இந்த ஒரு மாதக்காலத்தில் எல்லாம் சரியாக இருந்தது. 
பல்ஸ் செக் செய்யும் பொழுது சம்யு கர்ப்பமாக இருக்க வாய்ப்புண்டு என்று அறிந்தாள். 

     எதற்கும் தெளிவுப்படுத்தி கொண்டு டாக்டரிம் கூறவேண்டும் என்று இரத்த வகையினில் கருவுற்று இருக்கின்றாளாயென ஆராய செய்தாள். 

    சில உடல்வாகிற்கு யூரினில் கர்ப்பம் தெரியாது. ஆனால் இரத்தத்தில் கண்டறிந்திடலாம். 

     அதனால் லேபிற்கு கரு இருப்பதாக அறிய அனுப்பி வைத்தாள்.(யாரும் இது உண்மையா பொய்யா ஆராய வேண்டாம். எனக்கு பிரகனன்சி கார்டுல வரலை. பட் டேஸ் 45 மேல போனதால் டாக்டரிடம் கேட்டேன். ப்ளட் டெஸ்ட் எடுத்தா க்ளியரா தெரியும்னு சொல்லி பிளட் சாம்பிள் தான் கேட்டாங்க. அப்போ பாஸிடிவா கர்ப்பம்னு சொன்னாங்க. அதை வைத்து இதை எழுதறேன்.)

     ரிசல்ட் வரும் வரை சம்யுவை அருகே இருந்தாள். 

    அந்த போன் மூலம் அவள் சந்தேகித்த விஷயம் உண்மையென்று நிருபிக்கப்பட்டது. 

    அனுரேகா எண்ணங்கள் கலைய வைத்தது.  

     இதுநாள் வரை கர்ப்பம் அடையாத அவள் நிலை, சம்யு கர்ப்பம் என்றதும் தான் பாவம் செய்கின்றோமோ. என்ன இருந்தாலும் அறியாத ஒரு உயிர் இழந்து, அறிந்த டாக்டர் மகளின் உயிரை காப்பற்ற பயணாகட்டும் என்று இருந்தவள். தற்போது ஒரு உயிரை பிழைக்க இரண்டு உயிர் இழக்க வேண்டுமா? என்ற பெரிய கேள்வி குழப்பத்தை தந்தது. 

     இதுவரை டாக்டர் சுதிப் கொடுத்த பணங்கள் பேங்கில் இருப்பதை எல்லாம் எடுத்து விட்டாள். 

     இருவாரம் அனைத்தும் எடுத்தபின் அதனை பொருளாக மாற்றி விட்டு, டாக்டர் சுதிப்பிற்கு போன் செய்து அந்த பெண் கருவுற்று இருப்பதாக சொன்னாள். 

     சுதிப் அனைத்தையும் கேட்டு முடித்து, "இப்ப என்ன அனுரேகா... குழந்தையா ஆகலையே... உருவம் கொடுப்பதற்கு முன் நாம இதயமாற்று சிகிச்சை பண்ணிடலாம்." என்றதும் அனுரேகா எச்சிலை விழுங்கி, 

     "சார் என்ன இருந்தாலும் ஒரு உயிருக்கு இருவுயிர் போகணுமா...?" என்றதும், 

     "இங்க பாரு... இப்ப உனக்கு இரண்டு உயிர் போகுதுன்னா... விலையும் இரண்டு மடங்கா வாங்கிக்கோ..." என்று இயல்பாய் பதிலுரைத்தான். 

    "சார் அதுயில்லை... குழந்தையை அழிப்பது பாவமில்லையா...?" என்று பேசவும், "இங்க பாரு மடத்தனமா பாவ புண்ணிய கணக்கை இதில் பார்க்காதே. உனக்கோ உன் கணவருக்கோ இப்படி ஒரு பிரச்சனை வந்து இதுமாதிரி யாருக்கும் தெரியாம இதயம் மாற்றிட ஒரு ஆள் கிடைத்தா அப்பவும் இதே மாதிரி நியாயம் தர்மம், பாவம் புண்ணியம் பார்ப்பியா.... அடுத்த நாளே இதயம் மாற்ற நாள் குறிக்க சொல்லுவ. அது தான் மனிதமனம். இங்க மனிதாபிமானத்தைவிட மனிதமனம் தான் ஜெயிக்கும். அதனால இப்படி புலம்பாமல் அந்த பெண்ணை பத்திரமா பார்த்துக்கோ... நேரத்துக்கு மருந்து செலுத்தி உன் கண்ட்ரோலில் வை." என்று அணைத்தான் சுதிப்.

      அனுரேகாவிற்கு இதற்கு மேல் என்ன செய்வதென்று புரியாது மருந்தை ட்ரிப்ஸில் ஏற்றி முடித்தாள். 

    இம்முறை கைகள் நடுங்கியது. 

          அடுத்த இருதினத்தில் ஆரவ் இவ்வுலகத்தில் இருக்க பிடிக்காமல் பாலில் மருந்தை கலந்து குடிக்க எண்ணினான். 

      அதே ஏரியாவில் தூக்க மாத்திரை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தான். 

    என்றும் சாப்பிட சொன்னால் மறுக்கும் மகன் அன்று வந்ததும், "அம்மா... சூடா பால் வேண்டும்" என்று குளிக்க சென்றதும் சுபாங்கினி சந்தோஷமாக பாலை சுடுப்படுத்தினாள். 

     அந்த நேரம் ஒரு போன் வரவும் எடுத்து பேசிவிட்டு, சுபாங்கினி ஆரவ்  அறைக்கு வந்து பாலை கொடுத்து கையை கட்டி நின்றாள். 

     "வையுங்க மா..." என்று கூற சுபாங்கினியோ, "நீ கண்ணெதிரில் குடித்ததும் எடுத்துட்டு போறேன் பா" என்று கூறி ஆரவை கண்டார். 

   அவனோ "இல்லைமா.... நீங்க போங்க" என்று கூறவும் சுபாங்கினி கிளம்பி வெளியேறினாள். 

    தன் பையில் இருந்தவையை எடுத்து பாலில் மொத்தமாக கலந்தான். 

    மீண்டும் கதவு திறக்கும் சப்தம் கேட்டதும், அவசரகதியாக பாட்டிலை மறைத்து வைத்தான். 

     "என்னப்பா... கலந்துட்டியா...." என்று கைகட்டி கேட்க, 

     "என்னதும்மா.... இதோ ஒரு நிமிஷம்." என்று பருக போக, நான் குடிச்சிட்டியானு கேட்கலை. கலந்துட்டியானு கேட்டேன். அதான்பா  நீ பெரியார் தெருவுல இருக்கற மருந்து கடையில் வாங்கனியாமே... தூக்கமாத்திரை அதை கலந்துட்டியானு கேட்டேன். அந்த மருந்துகடை முரளிக்கு என்னை நல்லாவே தெரியும் நீ என் பையன் என்பதும் தெரியும். உன் தோற்றமும் வாங்கிய பொருளும் சரியில்லைனு உனக்கு கொடுத்துட்டு எனக்கு இப்ப போன் பண்ணி தகவல் கொடுத்துட்டான்." என்றதும் தலை கவிழ்ந்தான். 

     "உங்கப்பா நம்மை விட்டு போனப்பவே நானும் சாப்பிட தான் நினைத்தேன் டா. அப்போ நீ வந்து நான் இருக்கேன்மா என்பது மாதிரி நிற்ப அப்பவே வாழ்க்கை ஒருத்தர் இல்லைனா அதோட முடிவதில்லைனு புரிஞ்சுது. உன்னை வைஷ்ணவியை வாழ வைக்க படிக்க வைக்க என்று என்னை மாற்ற முயன்றேன்." என்று பேச, 

     "எனக்கு சம்யுக்தா தவிர வேறயாருமில்லைமா..." என்று உடைந்து அழவும். 

    "அப்போ கணவன் மனைவி அவங்க குழந்தை இது மட்டும் தான் சொந்தமா....? அம்மா தங்கை.... தங்கை உறவு இதெல்லாம் யாருமேயில்லயென்ற வட்டமா ஆரவ்." என்றதும்

      "அம்மா.... அப்படியில்லை மா... என் சம்யு... அவயில்லாம எதிலும் வாழ்க்கை ஒட்டமாட்டேங்குது மா. ஒவ்வொரு நொடியும் எப்படி கடக்கின்றேன் தெரியுமா...?" என்று பாலை அருந்த முயற்சிக்க, அதை தடுத்து தான் அருந்த சென்றாள் சுபாங்கினி. 

     "அம்மா... எதுக்கு இப்படி செய்யறீங்க... நான் யாருக்காக வாழணும். எனக்கு எல்லாமே யுக்தாவா இருக்கணும்னு ஆசைப்பட்டேன். சந்தர்ப்ப சூழ்நிலை என்னை கைதியா பார்த்து சிரிச்சப்ப கூட, அவளை நேர்ல சந்திச்சுட்டா எங்க காதல் பிரச்சனை வராது. இது எல்லாமே சுவாமிநாதன் மாமா(?🤔) செய்தவை புரிஞ்சிது மன்னிச்சும் விட்டேன். ஆனா அம்மா...

யுக்தாவுக்கு நான் செய்தவை எல்லாம் மன்னிக்க முடியாதது மா. அவளை அறைந்து அடித்தது மட்டும் தான் உங்களுக்கு தெரியும். அவளோட நான் இருந்த இல்லறத்துக்கு விலையா பணத்தை நீட்டினேன். அவளை அந்த திவேஷ் கூட வைத்து பேசிட்டேன் மா." என்று அழுதவனை அதிர்ந்து மெத்தையில் அமர்ந்தாள். 

     சிறிது நேரம் போக ஆரவ் அழுவதில் "ஏன் டா... ஏன் இப்படி.... உன்னை கண்ணியமா தானே வளர்த்தேன். யாரோடும் பேசாம அமைதியா இருந்தவன் தானே... அப்படியே கோபம் வந்தா, கோபம் கண்ணை மறைக்க கை ஓங்குவயென்று சந்துரு மாப்பிள்ளை சொல்லி கேட்டுயிருக்கேன். வார்த்தையை விடுவியா....? அதிர்ச்சியா இருக்கு ஆரவ்." என்று சுபாங்கினி இடிந்து போனார். 

    எப்பவும் என் பையன் இப்படி நடந்துக்க மாட்டான்னு என்ற கர்வம் பெற்றவர்களுக்கு உண்டு. அது என் மகன் காதலிக்க மாட்டான். மரியாதை இல்லா சொல்லை பேசமாட்டான். கெட்ட விதமாக நடக்கமாட்டானென்று இப்படி சொல்லிக்கொண்டு போகலாம். இது பெண் பிள்ளை பெற்ற பெற்றவருக்கும் இருக்கும் எண்ணங்கள் தான். என் மகளா குனிந்த தலை நிமிராது. காதலா... அதெல்லாம் பண்ண மாட்டா... பொதுயிடங்களில் நாகரீகமா நடந்துப்பாயென்று மலையளவு நம்பிக்கை என்றும் அனைத்து பெற்றவருக்கும் இருக்கும். ஆனால் எல்லா நேரத்திலும் அப்படி நம்பிக்கை மீறாது இருக்க முடியுமா. சில பிள்ளைகளுக்கு காதலென்பது நல்ல மனதை பார்த்து வர தான் செய்யும். அப்படியிருக்கும் பொழுது அது மனிதமனம் என்ற ரீதியில் தான் காண வேண்டும். 

     நமக்கு அனுபவம் இருப்பதால் இப்படி நடக்கும் இது கெட்டதென்று தடுக்க முனைந்தாலும் அது அவர்களை பொருத்தவரை  கேள்வியறிவு. அதனால் அதை ஏற்க மனம்வராது. அனுபவ அறிவு தான் அங்கே வேண்டும். நல்லதாய் நடந்து போகவும் வாய்ப்புண்டு. தீயதாக மாறி வாழ்க்கை பாடத்தில் அதுவும் ஒரு அனுபவ்றிவாக அமையவும் நேரிடும். 

   இதற்காக நான் அப்பவே சொன்னேனென்று அலப்பறை தேவையற்றது. 

     இன்று சுபாங்கினி இடிந்து அமர்ந்தது ஆரவ் இப்படி ஒரு பெண்ணின் மனதை வதைப்பானா என்று தான்.  

    சற்று நேரம் பிடித்தது. ஏன் நீ கூட தான் சம்யு முதல் முறை பார்த்த அன்று பேசினாயென மனம் எடுத்துரைத்தது. கூடவே அது தான் மனிதனின் சுபாவம் இதில் தவறல்ல ஆரவிற்கு எடுத்து பதமாய் இறப்பு முடிவல்லயென்று சொல்லென மனம் வலியுறுத்தியது. 

     மெதுவாக தன்னை அசுவசுப்படுத்தி, ஆரவை தன்பக்கம் திருப்பி, "இங்க பாரு ஆரவ். இறந்துட்டா எல்லாம் முடியாது. நீ எடுத்த முடிவு இதோட முடியாது. திடுதிப்புனு நாளைக்கு உன்னை மன்னிச்சு சம்யுக்தா வந்தா, அவள் ஆருனு அழைக்க நீ வேண்டாமா. அவ வந்த பிறகு நீ இல்லையென்றால் அவ நிலைமை என்னாகும்னு யோசிச்சியா...?" என்றதும் 

      "அம்மா யுக்தா வருவாளா... என்னை தேடி வருவாளா மா.... அம்மா அவளுக்கு என் மேல கோபம் வராதாமா... அப்பறம் எப்படி என்னை விட்டு போனா தெரியலை மா. அவளால் நான் இல்லாமலும் இருக்க முடியாது. சாரி மா இப்படி பண்ணமாட்டேன்" என்று வருந்தினான். 

    "இது மட்டும் இல்லை ஆரவ். உன் தோற்றமும் மாற்று. இந்த தாடி எல்லாம் நல்லயில்லை." என்று எடுத்துரைக்க, "மா... சாக மாட்டேன். ஆனா என்னை மாற்ற என் யுக்தா வரணும். அப்போ இதெல்லாம் நேரம் எடுத்து பண்ணறேன். ப்ளிஸ்..." என கூறவும் சுபாங்கினி இது போதும். தோற்றம் மாப்பிள்ளை சநதுரு மூலமாக பேசிக்கொள்வோமென பாலை சிங்கில் ஊற்றி முடித்தாள்.

     ஆரவோ "யுக்தா என்னை தேடி வா. தாலி எல்லாம் கழட்டி வீசியெறிந்ததற்கு காலில் கூட விழறேன்" என்றவனின் புலம்பல் தான் யுக்தா காதில் விழவில்லை. 

- வரையனல் தனிய தீவிகை ஒளிரும்.

-பிரவீணா தங்கராஜ்.
முகநூலில் கருத்து அளிக்கும் அனைவருக்கும் நன்றி. அப்படியே இங்க கருத்து பதிவு பண்ணினா நல்லா இருக்கும்.😊

       

     
      

Comments

  1. Thank u sister ud seekrama pottathuku story super

    ReplyDelete
  2. Super ah irukku sis paavam sikrama aaru and yuktha pair ah sethu vachurunga....💐😍

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நீ என் முதல் காதல் (On Going)

பிரம்மனின் கிறுக்கல்கள்

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1