சிரமமில்லாமல் சில கொலைகள்-7

🩸-7

     மெர்லின் தனது உடைகளை பெட்டியில் எடுத்து வைத்து யோசனையில் முழ்கினாள்.  

    "என்னாச்சு...?" என்று தபித்தாள் கேட்டு முடிக்கவும் திரும்பியவள், "நீங்களும் என்னோடவே வரலாமே. எதுக்கு தனியா போகணும். அதுவும் இல்லாம அங்க யாரையும் தெரியாது." என்று மெர்லின் கூறினாள்.
  
கிறிஸ்டோபர் ஒரு அட்ரஸை நீட்டி, இது ஜாஸ்மின்... லாஸ்ட் இயர் இங்க வந்தப்ப, பழக்கம். நமக்கு இண்டியாவில் யாரையும் தெரியாது. அதனால ஜாஸ்மினுக்கு ஊரைச்சுற்றி பார்க்க போறதா சொல்லியிருக்கேன். உண்மையும் அது தான் என்றாலும். இங்க நடக்கற விசித்திர நடவடிக்கையில் நீ அங்க போறது தான் நல்லது. இங்க இருக்கற அலுவலக பணியை பார்த்து முடித்து தான் நாங்க வரணும். அதுவரை தனியா மேனேஜ் பண்ணிக்கோ." என்று கூறவும் அந்த அட்ரஸை எடுத்து படிக்க துவங்கினாள். 

   ஜாஸ்மின் போனமுறை வந்தப்ப நல்ல பழக்கம். சர்சிற்கு வந்தப் பொழுது கர்த்தரின் புகழ் பேசி பரப்ப வந்தவள். 

    மெர்லினை விட சற்று பெரியவள். அதனாலோ என்னவோ காதல் திருமணம் இத்யாதிகளில் வெறுப்பு தான். அதனாலே கர்த்தரை பற்றி புகழ் பாடி அவரின் பெருமையை பரப்புபவள். 

    மெர்லினுக்கு தலையே சுற்றியது. இங்கிருந்து தனியாக செல்ல வேண்டுமா? என்பது மலைப்பாக தோன்றினாலும் உள்ளுணர்வு தானாக மறுக்காமல் செல்ல ஒப்பித்துக்கொண்டது.

    யோசனையோடு ஏர்போர்ட் வரவும் தன்னோடு தாய் தந்தை வழியனுப்ப, என்னவோ ஒரு பாரம் கூடுவதாக உணர்ந்தாள். 

     அதனை தாயிடம் மறைத்து விமானத்தில் ஏறிவிடவும், கிறிஸ்டோபர் மற்றும் தபித்தாள் இருவரும் அவர்கள் வீட்டுக்கு சென்றார்கள். 

   அங்கே ஆரோல் மதுவை தன்னுள் நிரப்பி கொண்டு கண்கள் செந்தனலாக மாறி யோசிக்க, மெர்லினை மிரட்டி பிடித்து அடித்தால் ஒரு வேளை விடை கிடைக்குமோ  என்ற யோசனையில் கழிந்தான். 

   நெடுநேரம் தாய் தந்தையரை காணாது போக எழுந்து பார்த்தான்.

    சுற்றிலும் மாலை வந்து இருளின் உருவத்தில் பயமுறுத்த, ஆரோல் முகம் அலம்பி, ஒருவித பயமும் சேர்ந்தே துரத்த, தாய் தந்தையரின் பெயரை அலறலாக ஒலித்து அழைத்தான். 

எங்கும் நிசப்தம் அவ்விரவை கிழிக்க, பீச் பக்கம் வந்து கத்தத் துவங்கினான். 

     மேகங்கள் எல்லாம் கருப்பு புகையாக மாறி அச்சுறுத்தி நிற்க, ஆரோல் ஹோலி வாட்டரை கையில் பதிபக்தையாக ஏந்தி "மாம்.... டாட்...." என்றே கத்த, அதே அமைதியே பதிலாக வந்தது. 

     பீச் கரையோரம் ஆனந்தமான காற்று தன் உடலை உரசி சென்றாலும், ஏனோ ஆரோலுக்கு வெட்பக் காற்று தேகத்தை எரிப்பதாக மாயத்தை தோற்றுவித்தது. 

     அந்த ஆள்அரவமற்ற பீச் வீட்டில் கிழக்கு பகுதியில், தாய் தந்தையர்கள் தலை மட்டும் மண்ணில் புதைத்து இருந்தது.
  
   அவ்விருவரை சுற்றி மற்றொரு  தலை மட்டும் அவ்விடத்தை சுற்றி வந்து பேச, ஆரோலுக்கு அது சர்வேஷ்வரன் அண்ணன் என்ற ரீதியில் புரியத் துவங்கியது. 

     முன் ஜென்மத்தின் நிகழ்வுகள் மெல்லிய நிழலாக காட்சி வந்து அமைந்தது. அதில் சர்வேஷ்வரன் தன் தம்பிக்கு அதாவது ஆடலரசனான ஆரோலிற்கு இனிப்பு வழங்கி கட்டி அணைத்து அன்பை பகிர்வதாக மாயத்தில தோற்றுவிக்கவும் ஆரோல் இம்முறை பயம் தெளிந்தவனாக, "அண்ணா என்ன காரியம் செய்துவிட்டீர். இப்படி தங்கள் தாய் தந்தையரை கூட அவமதிப்பாக நடத்தியது மனம் கடினமாக வலிக்கிறது. என்ன இருந்தாலும் தாய் தந்தையர். எனக்கு மட்டுமா? உங்களுக்குமே தானே. புரிந்து நடந்திருக்க கூடாதா?." என்று சீறிப்பாய, அதை செவிமடுக்கும் நிலையில் தான் இளவழகன் இல்லையே. 

      ஆற்பறிக்கும் கடலோசையில் தன் சிரமில்லா உடலோடு மெல்ல அடியெடுத்து அவ்வுருவம் ஆரோலை நெருங்கி வந்தது.

     "உடலற்றவனிடம் என்ன பேச்சு ஆடலரசா? உடலற்றவனிடம் இதயமும் இல்லை என்பதை அறியவில்லையா. உன் தமையனாக அவர்களுக்கு மைந்தனாக கடந்த ஜென்மத்திலே கணக்கு தீர்த்து இருந்தால் இந்த ஜென்மத்தில் யவனரதியை விட்டு விலகி நிம்மதியாக வாழவிட்டு வழிவிட்டு கடந்து இருப்பீர்கள். ஆனால் இன்னமும் யவனரதியை நிம்மதியாக வாழவிடாது செய்தால் அவளை ஒருதலையாக உயிராக காதலிக்கும் எனக்கு அன்றே கணக்கு தீர்க்க விடாது செய்து விட்டீரே. அதன் பலன் ஜென்மங்களில் பாவமும் துரத்துக்கிறது. 

    வளம் பொருந்திய நாட்டில் இருந்து கடல் தேசம் பிறப்பெடுத்து இருக்கின்றீரே அது எதனால் அறியலாகுமா? 

   கண்ணை கவரும் மாளிகையில் கர்வமாக இது நியூயார்க் சிட்டி என்ற நவநாகரிக பிறப்பின் பணக்கார வர்க்கத்தின் மத்தியில் வளமாக வாழ்வதாக எண்ணமோ? 

    முட்டாளே... தங்கள் யவனபூமியில் பிறப்பெடுத்தால் என்னால் உயிர் துறப்பது உறுதி என்ற நிலையில் முந்தைய ஜென்மத்தில் அறிந்து இறக்கும் நொடி அயல் தேசத்தில் பிறப்பெடுத்து நற்வாழ்வு வாழ சுயநலமாக தாங்கள் வம்சத்தினர் செய்த வேண்டுதலே அது. 

      இளவழகன் ஒருமுறை ஏமாற்றலாம் ஒவ்வோரு முறையும் ஏமாற்றலாகுமோ? தங்கள் வேண்டுதல் செவிமடுத்த அதே இறைவன். எனது மெய்மையான வேண்டுதலுக்கும் செவிமடுத்துவிட்டாரடா. கடல் கடந்து என்ன நீ அன்னிய கிரகத்தில் சென்றாலும் யவனரதி ஆபத்தென்றால் நான் அந்நொடி காத்திட எத்தேசமும் எந்நாடும் எந்த கண்டமும் அடுத்த நொடி இருப்பேன்.  

    இங்கு நான் மைந்தனாகவோ, தமையனாகவோ ஆன்மாவாக வரவில்லை. யவனரதியிடம் காதலை தெரிவிக்காத காதலனாக மட்டுமே என் ஆன்மா இயங்குகிறது. அதன் பொருட்டு அவளுக்காக மட்டுமே இன்னமும் என் ஆன்மா இங்கே அண்டத்தில் உலவுகிறது, அவளுக்கு மறைமுகமாக உதவுகிறது." என்று கூறி சூறாவளி போன்ற மண் புழுதியை உருவாக்கி வண்டல் மண்ணை வாரியிறைத்து கருமேகங்களோடு அக்கருமையுருவமும் சென்று இணைந்தது.

     ஆரோல் திரும்பி பார்க்க அங்கே மேரி, ஜார்ஜ் இருவரும் உடலனைத்தும் மண்ணில் புதைந்து இருக்க தலை மட்டும் விண்ணில் திக்குதெரியா திசையில் விழிகள் காண்பதாக உயிரற்ற உடலாக இருந்தது. 

    ஆரோல் தன் பெற்றோர் என்று அதிர்ந்து அருகே செல்ல முற்பட்ட, எங்கிருந்தோ சில ஆட்கள் வந்து குழுமினர். 
   
     "சார் இது தடைப்பட்ட பகுதியா அறிவிக்கப்போறோம். இங்க ஒரு சூறாவளி கரைக் கடப்பதா வானிலை ஆய்வு மையம் சொல்லி இருக்காங்க." என்று கூற ஆரோல் பார்த்த திசையை கண்டு, 
   
    "ஓ மை காட். புயல் வந்துட்டு போயிடுச்சா" என்று ஆங்கிலத்தில் கூறி, தன் போனை எடுத்து யாரிடமோ "சார் புயல் கரைகடந்துவிட்டது இருவர் பலி" என்ற தகவலை சொல்ல பதிலுக்கு என்ன வந்ததோ அதை கேட்கும் நிலையில் ஆரோல் மனம் இல்லை. 

    அவனை பொருத்தவரை தன் குடும்பம் அழித்த அந்த கருப்புபுகை மெர்லினுக்கு உதவுது. ஆக மெர்லினால் தான் மற்றவை நடந்து இருக்கு. ஆகையால் மெர்லினை அழித்திட வேண்டும் என்ற வேட்கை எழ, அவளை தேடி அவள் வீட்டிற்கு புறப்பட்டான் ஆரோல். 

       இருதினம் கடந்திட கோவாவில் ஜாஸ்மினோடு கோல்டு கேபி அருந்திய படி மக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் மெர்லின். 
  
     "நேரா இங்க வந்துட்டேன். அப்பா அம்மாவுக்கு போன் பண்ணினேன். நேத்து பேசியது இரண்டு நாளில் வர்றேனு சொன்னாங்க பட் வரலை. என்னவோ ஒரு மாதிரி இருக்கு ஜாஸ்மின்." என்று மெர்லின் பேச, 

    "லுக் மெர்லின். இது என்ன டெக்னாலஜி இல்லாத உலகமா? ஸ்கைப்ல வாட்ஸப் வீடியோ கால் போட்டு பாரு" என்று கூறவும் மெர்லின் வாடஸப் வீடியோ கால் செய்யவும், கிறிஸ்டோபர் மற்றும் தபித்தாள் இருவரும் நல்ல முகமலர்வோடு அமர்ந்து அவளை விசாரித்து முடித்தனர். கூடவே ப்ரவுனி வேறு குலைத்து முடித்து தன்னிருப்பை உணர்த்தியது. 

     பெற்றவர்களை கண்டபிறகு அரை மணி நேரம் அளாவியதும் தெளிவு பிறந்து மெர்லின் முகம் பூவாக மலர துவங்கியது. 

     அவர்கள் வருவதற்கு நாளாக கூடும் என்பதை மட்டும் அறிந்தவள், அதற்கு பின் சந்தோஷமாக ஜாஸ்மினிடம் உரையாட, அங்கோ நியூயார்க் நகரில் தபித்தாள் மற்றும் கிறிஸ்டோர் உருவில் இருந்து இளவழகன் ஆன்மா வெளியேறி நின்றது. 

         தன் தாய் தந்தையிடம் உரையாற்றிவிட்டோம் என்றே நிம்மதியில் மெர்லின் இருக்க ஆனால் உண்மையோ அவளின் பெற்றோர் இருவரும் நேற்று ஆரோலால் தாக்கப்பட்டு இருவருமே மருத்துவமனையில் இருக்கின்றனர். தபித்தாள் சுயநினைவு கடந்தும், கிறிஸ்டோபர் உயிருக்கு போராடியபடி ஐசியூ-விலும் இருந்தார்கள். 

   ஒரு பக்கம் அந்த இளவழகனின் கரிய உருவம் நியூயார்க் நகரில் யவனரதியின் போர்வையில் அவர்களுக்கு துணையாகவும் இருந்தது. 

       ஆரோல் மெர்லின் எங்கு சென்றால் என்று அறியாது அங்கும் இங்கும் வெறிபிடித்து கிடந்தான். தாய் தந்தை இறுதி காரியம் முடித்து, சோக கீதம் வாசிக்கும் மனிதர்கள் மத்தியில் அவனிடம் பேசிய அனைவரின் குரலுக்கும் எங்கோ கேட்கும் சங்கு போன்றே பாவித்து முடித்தான். 

            அவன் எண்ணமெல்லாம் மெர்லின் எங்கே என்ற ஒரே சிந்தனையில் கிடந்தது. 

               தனக்கு தெரிந்த விமானநிலயத்தில் பணி புரியும் ஆட்களை தேடி பிடித்து இதோ மெர்லின் கோவா சென்றதை அறிந்து கொண்டான். 

          நாளை செல்ல மற்றவைகளை எடுத்து வைத்து கொண்டு இருந்தான். 

                 தன்னை தேடி கொல்வதற்காக ஒருவன் வருகின்றானா? அல்லது தன்னை சுற்றி இருக்கும் மர்மங்களை , அனுமானுஷ்யத்தை என்னவென அறிய வைக்கும் முயற்சியா என்றே அறியாத மெர்லின் ஜாஸ்மினுடன் கிரில் சிக்கனை முழுங்கி கொண்டு இருந்தாள். 

       சாந்தனு சர்வேஷ் இரு தினம் முன் சொன்ன கூற்றிலே சிந்தித்து இருந்தான். 

     ''அவங்க இரேண்டு பெரும் கூட இப்ப இல்லை டா. அபரஞ்சிக்கு இனி யாருமே தொல்லை தர மாட்டாங்க. எங்க காதல் இந்த ஜென்மத்தில் நிச்சயமா வெற்றி தான். அவள் என்னை தேடி வருவா தானே? எதுக்கோ அந்த போலி சாமியார் இருந்த இடத்தில வெளியே இருந்தரே உண்மையான சாமியார் அவரை தேடி போயி பார்ப்போமா?'' என்றே கேட்டுவிட்டான். 

         அவனுக்கு நண்பன் செல்லும் இந்த மர்மமான விஷயத்திற்கு துணை புரியலாமா? வேண்டாமா என்றே பெருத்த யோசனைகளை தேக்கி சர்வேஷை வைத்த கண் வாங்காமல் பார்த்தான். 

             சர்வேஷ் தனது ஆருயிர் காதலியை நீண்ட நாட்களில் கழித்து பார்க்கும் வேகத்தோடு இருப்பது அப்பட்டமாக தெரிந்தது. அவனுக்கு அந்த சந்தேகம் தோன்றிட, ''உனக்கு அந்த பொண்ணு எப்படி இருப்பா என்று தெரியுமா. இல்லை அவளை இதுக்கு முன்ன இந்த மாதிரி கனவு மாய அனுமானுஷ்ய விஷயத்தில் பார்த்து இருக்கியா?" என்று கேட்டதும் 

    "இல்லை டா. ஏதோ அவள் குரல் மட்டும் கேட்கும். உருவம் சரியா தெரியாது. மேபீ நேர்ல வந்தா கண்டு பிடிச்சிடுவேன்." என்று சந்தோஷமாக ஆடிக்கொண்டே சொல்லவும் சாந்தனு கையில் கொண்டு வந்த பாலை கொட்டி விட்டான். 

     "ஏன்டா... நீ இந்த உலகத்திலே இல்லை பார்த்தாலே தெரியுது. அதுக்கு இப்படியா இன்னமும் கண்ணுக்கு முன்ன வராத யவனரதியை எண்ணிட்டு இருந்த இடத்திலேயே டான்ஸ் ஆடி இப்படியா  பாலை கொட்டுவாங்க." என்று சலித்தவாறு பாலை துடைத்து முடித்தான். 

      ஆரோல் விமானத்தின் ஜன்னல் இருக்கையில் அமர்ந்து வெளியே தெரியும் வெண்மேகத்தை பார்த்து குரோதத்துடன் அமர்ந்திருக்க, அந்த வெண்மேகம் கருவுருவமாக மாறி, "கடல் தேசம் தாண்டினால் உமக்கு மரணம் என்ற பின்னும் அபரஞ்சியை தேடு ஓடுகின்றாயே... உன் மரணவாசலை நீயாக திறந்து வைக்கின்றாயா ஆடலரசா?" என்றது இளவழகனின் கருவுருவம். 

      "காதல் மனம் அண்ணா..  ஆன்மாவான நீயே உன் காதலை தேடியலையும் போது. நானுமே அபரஞ்சியை விரும்பியவன். மனிதப்பிறவியில் அவளை தேடி செல்வதில் தவறென்ன?" என்று பேசிட, இவர்களின் மாய வார்த்தை பேச்சுக்களை அறியாது விமான பணிப்பென் உணவை வழங்கி சென்றாள். 

    'அவளை அடைய வேண்டும் என்ற வேட்கையில் நீ பிறப்பெடுத்த பொழுது. அவளை காக்கவே நான் மனிதப்பிறவி எடுக்க மாட்டேனா?' என்ற இளவழகன் கருவுருவ ஆன்மா மனதில் எண்ணியபடி அவ்விடம் விட்டு அகன்றது.  

      ஆரோலோ, என்னை விரும்பினால் அவள் கரம் பற்றி திரும்புவேன். இல்லையேல் அவள் மரணத்தை என் கையில் பரிசளித்து திரும்புவேன்' என்றதும் அவன் உள்ளம். 

-🩸🩸🩸🩸🩸
        
-பிரவீணா தங்கராஜ் 



Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு