சிரமமில்லாமல் சில கொலைகள்-8

🩸-8 

ஆரோல் பயணம் செய்து வந்து கோவா வந்து நிற்க, அங்கே மெர்லின் வந்த சுவடு தான் இல்லை. 

எங்கே போனால் என்பது குழப்பத்தை தர, எரிச்சலில் தேடுதல் அடைந்தான். 

மாறா படத்தில் வருவது போல ஒவ்வொரு இடமாக அவளை பற்றி கேட்க யாருமே அறிந்தபாடுயில்லை. அங்கயிருந்த ஜாஸ்மினை கேட்டால் சொல்லியிருப்பார்களோ என்னவோ. மெர்லின் தவிர்த்து வேறு யோசிக்காதவனாக இருந்தான். 

மெர்லினோ ஜாஸ்மினோடு சென்னைக்கு வந்து இறங்கியிருந்தாள். அவளுக்கு சென்னை வந்ததும் வியேர்த்து வழிந்தது. கைகள் நடுக்கத்தில் உதற மயங்கி சரிந்தாள். 

ஜாஸ்மின் உடனடியாக மருத்துவமனை அழைத்து வந்து சேர்த்திருந்தாள். 

மருத்துவர் சிகிச்சை செய்து பார்த்து,

"நத்திங் சீரியஸ். பிறந்ததிலருந்து நியூயார்க்ல இருந்து இங்க வந்ததில் நம்ம தட்பவெட்ப நிலை ஒத்துக்கலை. சரியாகிடும்... இந்த லோஷன் டேபிளேட் எடுத்துக்க சொல்லுங்க. எல்லாம் தானா சரியாகிடும். அடிக்கடி ஜூஸ், இளநீர் எடுத்துக்கோங்க. கண் விழித்ததும் கூட்டிட்டு போங்க" என்று நகர்ந்து விட ஜாஸ்மின் சற்று நேரம் இருக்க, மெல்ல மெர்லின் இமை திறந்தவள் பாரம் கூடிய நிலையில் சோர்ந்து இருந்தாள். 

கேப் புக் செய்து பின்னர் ஜாஸ்மினும் மெர்லினும் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கினார்கள். 

அங்கிருந்து பால்கனியில் கதவு திறந்து பார்க்க ஈசிஆரில் ஒரு கடற்கரை பின் பகுதி இருந்தது. அங்கே கடலலை தங்கள் அலையை அனுப்பி தன்னிடம் வா என்று ஓயாது அழைப்பது போல இருந்தது மெர்லினுக்கு. 

அழகான வியூவ் என்றதை தாண்டி அவள் மனதில் இரசிக்க ஒன்றுமே இல்லை. என்னவோ ஒரு வெறுமை உள்ளடக்கி இருந்ததாக உணர்ந்தாள். 

ஒரு வேளை தாய் தந்தையோடு வந்திருந்தால் தான் மகிழ்ச்சியாக இருந்து இருப்போமோ என்ற எண்ணலைகள் தான் தோன்றியது. 

சர்வேஷ்வரன் இரண்டு தினமாக என்னவோ போல் அமர்ந்து இருந்தான். 

சாந்தனு வந்து தோள் தட்டி, "என்னடா அமைதியா இருக்க, பிரேஸ்லேட், கொலை... செத்துட்டான்... கருப்புருவம்.... அபரஞ்சி.... தலையில்லா உடல்... இப்படி கதை சொல்வ என்ன இரண்டு நாளா சுவிட்ச் ஆப் ஆனா போனாட்டம் இருக்க? அவ வரலையா?" என்றான்.

"இரண்டு நாளா கருப்பு உருவம் கண்ணுக்கு தெரியலை. அந்த அபரஞ்சியும் என்னை கூப்பிடலை. என்ன ஆச்சு என்றே தெரியலை." என்றான் சர்வேஷ். 

"பஸ் பிடிச்சு இல்லை பிளைட் பிடிச்சு அந்த கருப்பு உருவத்தோட ஒரு மீட்டிங் அப்பாயின்மெண்ட் போட்டு பார்த்து பேசி விசாரிச்சுட்டு வர்றியா. இல்லை யவனரதி இருந்த ஜென்மத்துக்கு ராக்கேட்ல போயி இளவழகனிடம் கேட்டுட்டு வா..." என்று கூறவும் கடுப்போடு சர்வேஷ் கையிலிருந்த, சாவியை தூக்கி சாந்தனு மீது வீசினான். 

"என்ன பார்த்தா பைத்தியமா இருக்கா? பாதி படம் பார்த்துட்டு இருக்கறப்ப கரண்ட் கட் ஆனா எப்படி இருக்கோம். அது மாதிரி இருக்கேன். தினசரி அபரஞ்சி, இளவழகனோட கருப்புஉருவம், கொலை என்று கண் முன் காட்சியா பார்த்தேன். இந்த இரண்டு நாள் ஒரு நிகழ்வையும் என் உணர்வுகள் சந்திக்கலை." என்றான் 

"டேய்... பின்ன என்னடா பண்ற... எந்தவித இளவழகன் வரலைனா நல்லது தானே. நீ நார்மல் லைப்புக்கு வந்து ஜாலியா இருக்க வேண்டியது தானே. முடிஞ்சா ஒரு பெண்ணை திருமணம் செய் டா. எனக்கு தெரிஞ்சு. வெர்ஜியனா இருக்கறவரை தான் பேய்யுங்க நம்மை சுத்துமாம்." என்று சிரிக்காமல் சீரியஸாக சாந்தனு சொல்லவும் சர்வேஷ் அவனை விலக்கி விட்டு அந்த பிரேஸ்லேட்டை எடுத்து தடவினான். 

"நீயும் கண்ணுக்கு தெரியாம போயிட்டா நான் மறந்துடுவேனா...?" என்று புலம்பினான். 

சாந்தனுவோ ஏகக்கடுப்போடு இவன் திருந்த மாட்டான் என்றே நடையிட்டான். 

கருவுருவமோ மெர்லின் பெற்றோர் அருகே இருந்தது. மெல்ல கிறிஸ்டோபருக்கு குணமாகி கண் விழிக்க, நிம்மதி அடைந்து மெர்லின் உருவத்தில் இருந்து அவ்விடத்தை விட்டு மாயமானது. 

கிறிஸ்டோபரோ கண் விழித்தபின் மகளாக அவ்வுருவம், 'தங்கள் துணையாள் எழுந்ததும் தங்களுக்கு விடை கிடைக்கும் மன்னா. தங்கள் இளவரசிக்கு ஒரு இன்னலையும் நான் அணுக விடமாட்டேன்.' என்று கூறி விடைப்பெற்றிட, கிறிஸ்டோபர் பயப்படவில்லை. குழம்பவில்லை. மகள் உருவத்தில் வந்த கருவுருவம் யாரெனவும் யோசிக்கவில்லை. 'உங்கள் புதல்வியோடு நாளை இயல்பாக கதைகக்கவும்' என்றதால் வேறு எதையும் எண்ணவில்லை. தங்கள் வாழ்வில் என்னவோ ஒரு துணை தங்களுக்கு உள்ளதென நம்பினார். நேராக கோமாவில் இருக்கும் தபித்தாளை பார்த்தார். 

இரு தினம் உடற்சோர்வாக அறையிலே இருந்திடவும், இன்று மெர்லின் காலையிலே எழுந்து சுற்றி பார்க்க தயாராணாள். 

"ஜாஸ்மின் நாம இன்னிக்கு எங்க போகலாம். சொன்னீங்கன்னா... குகூளில் ஒரு இன்ட்ரோ பார்த்து வைச்சிப்பேன்." என்று மெர்லின் கூறவும். 

"ஓ சாரி டியர். எனக்கு இன்னிக்கு ஒரு சர்ச் மீட்டிங் இருக்கு. இங்க வந்தது அதுக்கு தான். நான் அங்க போவேன். உனக்கு கேப் புக் பண்ணிட்டேன். 'ஈஸ்வர் டிரவால் அண்ட் டூர்ஸ்' ஆளுங்க கையிடா கூட வந்து கம்பெனி தருவாங்க. டோண்ட் ஓர்ரி." என்றதும் மெர்லின் "ஓ... நீங்க வரலையா... இட்ஸ் ஓகே... கேரியான்." என்று புன்னகைத்தாள். 

மெர்லின் கேப்பிற்கு காத்திருக்கும் சமயம் தன் தந்தைக்கு போனில் அழைக்க, அவரோ தபித்தாள் நிலைமையை கூறாமல் பேசி சமாளித்து வைத்தார். மெர்லினுக்கும் அந்த கேப் ஆள் வந்து நின்றான்.

தமிழ் சற்று பேச வரும் ஆனால் புரிந்து நடக்க சற்று பேச என்பது எல்லாம் மெதுவாக பேச செய்தால் மட்டும் வரும் என்பதை மெர்லின் தெளிவாக கூறியே வேனில் அமர்ந்தாள். 

மெர்லினோடு ஒரு வடநாட்டு குடும்பமும் ஒரு இளம் காதல் ஜோடியும், இரு இளைஞர் பட்டாளமும் சேர்ந்து பக்கத்தில் இருக்கும் இடத்திற்கு சுற்றி பார்க்க வண்டியோடு புறப்பட்டனர். 

மெர்லின் தமிழ் புரிவது கொஞ்சம் என்றதில், அது அந்த ஆளுக்கு வசதியோ என்னவோ அன்றைய நாளின் பாதி நேரம் மெர்லினை சைட் அடித்து கூட வந்த மற்ற இரு இளைஞரோடு கிண்டலை கேலியை இறங்கினார்கள். அவள் அறியாது தான். 

மெர்லின் பெரும்பாலும் குழந்தையோடு வந்த குடும்பத்தோடு ஒன்றி பழக ஆரம்பித்தாள். ஆனாலும் மொழி புரியாவிட்டாலும் பார்வை செய்கை அறியாது போகுமா? அப்படியிருந்தும் மெர்லின் எதையும் பெரிதுபடுத்தவில்லை. ஏதோ... யாரையோ... இழந்த வலி நெஞ்சில் பரவ அமைதியாக போனாள். 

அருகே இருக்கும் சோழ மண்டல ஆர்டிஸ்ட் இடத்திற்கு அழைத்து செல்ல அங்கே ஆர்ட் கேலரி படங்கள் மியூசியம் போன்று சுற்றி பார்த்து நேரம் கடந்தது. மேலும் அங்கே மதியம் உணவு முடித்து அரைகே இருக்கும் கோவில் ஒன்றுக்கும் சுற்றி காட்டி வெளியே வர, நேரம் சரியாக இருந்தது. 

இதே ஊரில் இருப்பவர்களுக்கு என்றால் கோவில் சென்று வணங்கி பிரசாதம் என்று கடக்க சில மணி துளிகள் போதுமானதாக இருக்கலாம். ஆனால் வெளியூர் பயணிகளுக்கு ஒவ்வொரு சிலையும் என்ன கல் என்றதிலிருந்து, அந்த தூணின் சின்ன சின்ன கலைநயம் பொறிக்கப்பட்ட கலையையும் நுண்ணூனர்வோடு ஆராய்ந்து புகைப்படம் எடுத்து நேரம் கழித்து, அதன் தலப்புராணத்தை அறிந்து முழுவிவரம் அறிந்தே தெளிவு பெறுவார்கள். அதனை போல கடந்ததால் நேரம் மாலையாக, அங்கே கடல் பக்கம் சிறிது நேரம் விளையாடி திரும்பினார்கள். 

மெர்லின் ஈரத்தோடு உங்க டிராவல்ஸ் ஏஜெண்டிடம் நான் சில இடம் போக புக் பண்ணணும். எனக்கு நேரிடையா பேசணும் நானும் உங்க அலுவலகம் வர்றேன் என்று அந்த காரோட்டியோடு வந்தாள். 

ஈரமான ஆடை உடலோடு ஒட்டிய டாப் இருக்க என்ன தான் ஸ்கார்ப் கொண்டு கழுத்தை வளைத்து போர்த்தினாலும், சிலரின் கண்கள் துகிலுரிக்கும் பார்வையை தானே வீசுவார்கள். அப்படி தான் அந்த கையிடும் வீசினான். 

மெர்லின் ஈஸ்வர் டிராவல்ஸ் அண்ட் டூர் அலுவலகம் வரவும் அந்த கையிடு கூடவே புன்னகை மாறாது வந்தாள். 

"இவர் தான் இந்த டிராவல்ஸ் ஏஜன்ஸி வழிநடத்துபவர்" என்று அறிமுகமாகி அகல நினைத்தான்.

ஆனால் ஒரு அடியும் நகராது மெர்லின் அவன் காலரை பற்றி இழுத்து, இந்த கையிடு பார்வை சரியில்லை. பேச்சு சரியில்லை. ஆளே நல்லவன் இல்லை. இங்க பாருங்க." என்று அந்த கையிடு போனை சட்டை பேக்கெட்டில் இருந்து எடுத்து அதனை எதிரில் இருந்தவனுக்கு காட்டினாள். 

அந்த போனில் கடைசியாக எடுத்த புகைப்படமாக மெர்லின் நீரில் விளையாடி படம் சேகரித்து இருந்தான். அதுவும் அவளின் கழுத்துக்கு கீழ் பகுதியையும் பின் பகுதியும் முகம் சுளிக்கும் வகையில் புகைப்படமாக எடுத்து இருந்ததை கண்டு அவன் கோபமானான் சர்வேஷ்வரன். 

நாலரை விடுத்து கையிடை அடித்து விளாசி, அந்த புகைப்படம் அழித்து, மெமரிக் கார்டை உடைத்து போட்டான். 

"சாரி மிஸ்...?" என்று திணற, 

"மெர்லின்... மெர்லின் கிறிஸ்டோபர்." என்று மெர்லினா அறிமுகமானாள். 

சர்வேஷ்வரனோ, "சாரி மெர்லின். இவனை பனிஷ் பண்ணறேன். தப்பு தான் பட் இனி இப்படி நடக்காம பார்த்துக்கறேன். இந்த முறை மன்னிச்சுடுங்க. கத்தினா டிராவல்ஸ் ஏஜன்ஸி இத்தனை நாள் எடுத்த குட் நேம் இன்னிக்கே ஸ்பாயில் ஆகும். இங்க பாருங்க.... இதுல இவன் ஒரு மனிதன் மட்டும் உழைக்கலை. இங்க இவனை தவிர்த்து நல்ல மனிதர்களும் உழைக்கறாங்க. அவங்க நேமும் ஸ்பாயில் ஆகும்." என்று இதமாக எடுத்துரைத்து, தவறு செய்தவனை தனிப்பட்டு தண்டிப்பதாக கூறினான் சர்வேஷ் .

" யெஸ்.... அதுக்காக தான் அங்கயே அடிக்காம இங்க வந்து சொல்லி கம்பிளைன் பண்ணறேன்." என்றாள் மெர்லின். 

இன்றைய நாளை இவன் செய்கையால் நான் அதிருப்தி அடைந்தால் கூட வந்த மற்ற டூரிஸ்டுக்கும் இன்றைய நிலை வெறுத்து போயிருப்பாங்க. அதான் கண்டுக்காம விட்டு இப்ப புகார் கொடுத்தேன். பை தே வே.... நாளைக்கு இவன் வேண்டாம் வேற நல்ல ஆளை கையிடா அனுப்புங்க. அதை சொல்லவும் தான் நேரில் வந்தது." என்றதும்

"சூர் மேம். நாளைக்கு நல்ல கையிடா கூட அனுப்பறேன். தேங்க்ஸ் பார் வெல்கமிங்" என்று கூற மெர்லின் கையை நீட்டினாள். 

சர்வேஷ் கையை பற்றி குலுக்க, ஒரு மின்சார அதிர்வலையை சர்வேஷ் உணர்ந்தான். ஆனால் மெர்லின் அது போல எதையும் உணர்ந்தாளா என்பது அவளே அறிவாள். விடுப்பெற்று இருவரும் அவரவர் திக்கிற்கு செல்ல ஆரம்பித்தனர். 

அந்த இளவழகனின் கருவுருவமோ, பொறுமையாக நின்று வேடிக்கை பார்த்து முடித்தது. 

"முதல் சந்திப்பு.... முதல் தொடுகை...." என்று கூறி காற்றில் கரைந்து மெர்லினின் நிழலோடு வந்து சங்கமித்தது அவ்வுருவம். 

மெர்லின் தன் கையை தேய்த்து கொண்டே வந்தாள். அவளின் கையில் என்னவோ ஒட்டிக்கொண்டு செல்ல மறுப்பதாக மாயம் தோற்றுவிக்க, ஹாண்ட் வாஷ் செய்து அலம்பினாள். 

இங்கு சர்வேஷ்வரனோ, அந்த சின்ன அதிர்வில் உடலில் கிளர்ச்சி செய்து முடிக்க, அய்யோ.... எவ எவளோ என் கையை தீண்டறா... அபரஞ்சி... நீ எப்ப வருவ..." என்று அவனின் இனிய தனிமையோடு பேச ஆரம்பித்தான். 

-🩸🩸🩸🩸🩸

- பிரவீணா தங்கராஜ்.



Comments

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

நீ என் முதல் காதல் (On Going)

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

நாவல் site-இல் வாசகர்கள் பங்கு