தாஹி சமோசா - தாஹி பூரி
தேவையான பொருட்கள்:
உப்பிய சின்ன பூரி - 6 அல்லது சமோசா 3 தேவையான அளவு
தயிர் - 2 கப்
சர்க்கரை - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பச்சை வெங்காயம்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 2
சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தழை
செய்முறை:
தயிரை உப்பு, சர்க்கரை சேர்த்து தண்ணீர் விடாமல் கடைந்து வைக்கவும்.
குட்டி சமோசா அல்லது உப்பிய சின்ன பூரி - 6 உதிர்த்து, மீதி எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
தஹி பூரி செய்யும் முறை:
ஏற்கனவே செய்து வைத்துள்ள பூரிகளில் உப்பியவற்றை எடுத்து, நடுவில் துளையிட்டு, உள்ளே தேக்கரண்டி இனிப்பு சட்னி விடவும்.
உருளைக்கிழங்கு கலவையை உள்ளே நிரப்பி, கடைந்த தயிரை உள்ளே ஊற்றி, வறுத்த சீரகத்தூள், மிளகாய் தூள் தூவி, பச்சை வெங்காயம் ஓமபொடி மல்லி தழை சேர்த்து உடனே சாப்பிட வேண்டும்.
தஹி சமோசா செய்யும் முறை:
ஏற்கனவே செய்து வைத்துள்ள சமோசா 3 எடுத்து, அதன் மேலே தேக்கரண்டி இனிப்பு சட்னி விடவும்.
கடைந்த தயிரை உள்ளே ஊற்றி, வறுத்த சீரகத்தூள், மிளகாய் தூள் தூவி, பச்சை வெங்காயம் ஓமபொடி மல்லி தழை சேர்த்து உடனே சாப்பிட வேண்டும்.
Super
ReplyDelete