காலிப்பிளவர் மன்சூரியன்
🥦 தேவையான பொருட்கள்:
காலிபிளவர் – 1 (சிறு துண்டுகளாக வெட்டியவை)
மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மைதா – 2 மேஜைக்கரண்டி
கார்ன் ஃப்ளார் – 2 மேஜைக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
சாஸ் தயாரிக்க:
பூண்டு – 5 பல் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
வெங்காயம் – 1 (சதுரமாக நறுக்கியது)
குடைமிளகாய் – ½ (சதுரமாக நறுக்கியது)
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
சில்லி சாஸ் – 1 டீஸ்பூன்
டொமேட்டோ கெட்சப் – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – ½ டீஸ்பூன்
கொத்தமல்லி – அலங்கரிக்க
👨🍳 செய்முறை:
காலிபிளவரை கொதிக்கும் நீரில் மஞ்சள்தூள், உப்புடன் 2 நிமிடம் வேக வைத்து வடிகட்டி வைக்கவும்.
மைதா, கார்ன் ஃப்ளார், மிளகாய்த்தூள், சிறிது உப்பு சேர்த்து கலந்த மாவில் காலிபிளவரை போட்டு நன்கு பிசறி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, மாவு தடவிய காலிபிளவரை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பூண்டு, பச்சை மிளகாய் வதக்கவும்.
வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கி, சோயா சாஸ், சில்லி சாஸ், கெட்சப் சேர்த்து கிளறவும்.
மிளகு தூள், கொத்தமல்லி சேர்த்து இறுதியில் பொரித்த காலிபிளவரை சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்.
👌👌👌👍
ReplyDelete