தீவிகை அவள் வரையனல் அவன் -19

தீவிகை அவள் 🪔வரையனல் அவன்🔥-19

    இரண்டு தினம் ஒரு அறையில் விலகி செல்லும் ஞாயிறு- திங்கள் (சூரியன்-சந்திரன்)  போல எட்டி நின்றனர். 

      யுக்தா அறையில் இருக்கின்றாள் என்றாலே ஆரவ் அப்பக்கமே செல்லாது இருந்தான். 
    
    அவனுக்கு எதையும் மறக்கவோ மன்னிக்கவோ மனமில்லாது இயங்கினான்.  கூடுதலாக அலுவலகம் சென்று பணியை மேற்கொள்ள, அவனுக்கு கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆரவிற்கு மணப்பெண் மாயமானதை பகிரங்கமாக சிரித்து பேச, மனதால் நொடிந்து போனான். 

    ஒர் ஆண்மகனை அதுவும் மணமேடை வரை வந்து மணப்பெண் மாயமாகி திருமணம் நின்று இருந்தால் அவன் ஆண்மகனா என்ற கேள்வி தான் பெரிதாக எழும்பும். இவனுக்கு என்ன குறையோ அந்த பெண் அப்படி ஓடினாள். இந்த பேச்சு தான் விழும். அன்றே மண்டபத்தில் கிசுகிசுப்பாக எழுந்த குரல் இது தானோ? ஆரவ் இருந்த மனநிலைக்கு தான் மற்றவையை காதில் வாங்கவில்லை. அவனுக்கு சம்யுக்தா மயங்கியதில் பயந்து போனான். யுக்தாவை மணந்தாலும் கேலி பேச்சு என்னவோ குறையவே இல்லை. இதோ தான் கடந்து வந்த பிறகும் சலசலத்து கொண்டு இருக்கின்றதே. 

    கேசவிற்கே கொஞ்சம் கடினமாக இருந்தது. 

    வெளியே வந்தவன் முதலாளி ஆரவிற்காக, "லுக் நம்ம ஆரவ் சாருக்கு திடீரென மணப்பெண் மாறியது கொஞ்சம் அரசல் புரசலா பேசறீங்க. ஆனா சார் ss கம்பெனி எம்டியை திருமணம் செய்து இருக்கார். இது லவ் மேரேஜூம் கூட. விரைவா சார் ஒரு ரிசப்ஷன் வைப்பார். அப்போ ஊரே அதிசயப்படற மாதிரி விழா நடக்கும். இப்ப பொண்ணு மாறியதை பற்றி விவாதிக்காம வேலையை பாருங்க. இல்லை... வீட்டுக்கு இன்னிக்கே வேலைவிட்டு போறாதா மாறிடும் உங்களோட நிலைமை." என்று ஒரு தலைமை குரலில் அறிவித்து முடித்து அகன்றான். 

     கேசவ் ஜெயில் சந்தித்த மனிதன் தான் ஆரவ். 

    பஸ்ஸில் திருட்டு நடக்க, வேலைக்கு இன்டர்வியூ சென்றவனின் பாக்கெட்டில் திருடியவன் செயினை வைத்துவிட்டு தப்பிக்க, செயின் திருடனாக கேசவ் மாட்டி கொண்டான். எத்தனை முறை சொல்லியும் தண்டனை திருடன் என்ற விகிதத்தில் கொடுக்கப்பட்டு இருந்த பொழுது தன்னையும் மதித்து பேசியது ஆரவ் என்பதாலோ என்னவோ இருவருக்குள் சின்ன புரிதல் தெளிந்த நீரோடையாக இருக்கும். 

    ஆரவ் வெளிவந்த நாட்களுக்கு பின்னர் படித்து வேலைக்கு சென்று லோன் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாய் தான் முன்னேறினான். 

     தொழில் துவங்கி அமர்ந்த பின் கேசவ் சந்தித்ததும் அவனையும் கூடவே வைத்துக் கொண்டான். 
  
    அதன் விசுவாசம் வெடித்து விட்டது. 

   ஆரவ் ரிசப்ஷன் வைப்பானா என்று அறைக் கதவை திறக்க முற்பட, ஆரவ் கேசவை இயல்பாக பார்த்து புன்னகைத்து "தேங்க்ஸ் கேசவ்" என்று மட்டும் சொல்லி விட்டான். 

     சற்று நேரம் கழித்து கேசவ் தயங்கி ரிசப்ஷன் வைக்க டேட் பிக்ஸ் பண்ணவா சார்?" என்றான். 

       மற்றவருக்காக இல்லையென்றாலும் கேசவின் இந்த பேச்சுக்கு வைக்கலாம். அந்த சுவாமிநாதன் மகள் சேர்ந்து மணக்கோலத்தில் பார்க்க இயலாமல் தவிக்க வேண்டுமென்றே சரி என்றான்.

       நிலைமை சுமூகமாக கடப்பது போன்று இருந்தது. 

      வைஷ்ணவி சுபாங்கினி ஆரவ் விரும்பிய பெண் என்றதிலும் இயல்பாகவே இருக்கும் நற்குணத்தாலும் எல்லாம் மறந்து நகை உடை என்று விழாவை போல ரிசப்ஷன் நாளை கொண்டாட எண்ணினர். 

   சந்துரு தான் ஆரவிற்காக தேடி பிடித்து ஆடை விருப்பத்தை சொன்னான். ஆரவ் எதிலும் தலையிடவில்லை. 

     வீட்டிற்கு சென்றால் யுக்தாவை கண்டாளே மனம் முரண்படுகிறது. 

  மனமும் மூளையும் மோதி  கலப்படைந்து விடுகிறது. 

  அன்று யோகிதா யுக்தா வீட்டுக்கு வந்தாள். ஆரவ் யோகிதாவை கண்டு ஒன்றும் பேசாமல் நகர, யோகிதா கைபிடித்து மன்னிப்பு வேண்டினாள். 

   ஆரவ் அவனுக்கே உண்டான திமிரில் கையை உருவிக் கொண்டு வெளியேறினான். 

      சம்யுக்தா பொறுமையாக யோகிதாவிடம் "நீ என்ன சதி செய்த யோகிதா. ஆரவ் உன்னை முறைத்துட்டு போறார்?" என்றதும் யோகிதா கண்கள் குளமாக அழுதாள். 

     "நான் சொல்வேன் நீ என்னை தப்பா எண்ணிடாதே. உங்கப்பா தான் பண்ணின சொன்னார். 

     நீ... நீ மருத்துவமனையில் இருந்த, உங்கப்பா ஆரவ் மீது உன்னை மிஸ்பிகேவ் பண்ண தனியா அழைச்சிட்டு போக நீ தப்பித்து வந்து விபத்து ஏற்பட்டதா புகார் கொடுத்தது எங்களுக்கு தெரியாது. கேஸ் பதிவாகி சாட்சி விசாரிக்கணும் என்று போலிஸ் கேட்டார். முதல்ல திவேஷ் வைத்து சாட்சி ரெடி பண்ணினாங்க. ஆனா ஆரவ் சந்துரு அண்ணா அவர் பிரெண்ட் எல்லாம் அவருக்கு சாட்சி சொல்ல தயாரா இருப்பாங்க. திவேஷ் வேண்டாம் உங்க பொண்ணோட கிளோஸ் பிரெண்ட் சாட்சி சொல்ல வையுங்க யாரோ சொல்லவும் உங்கப்பா தான் எங்கப்பாவிடம் பேசி என் மனதை மாற்றினார். 

   உனக்கு லண்டனில் படிச்சு லண்டன் மாப்பிள்ளை பார்த்து வைத்ததிருப்பதாகவும் ஆரவ் அண்ணாவை திருமணம் செய்தா நீ குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவயென்று சொன்னதும், எனக்குமே அது சரியா தோணுச்சு டி.

      லண்டன் லைப்பில் என் பிரெண்ட் இருக்கணுமா? இல்லை நர்ஸ் அம்மா  வீட்டில் மாத சம்பளத்தில் ஆரவ் அண்ணாவுக்கு மனைவியா இருக்கணுமா என்று யோசித்தப்ப உங்கப்பா சொன்னது பெஸ்ட்னு பட்டுச்சு. நான் தான் ஆரவ் அண்ணாவுக்கு எதிரா நீ விபத்தில் மயங்கினப்ப ஆரவ் மிஸ்பிகேவ் பண்ண வந்தார் சொல்லிட்டு மயங்கிட்டயென்று கோர்ட்டில் பொய் சொன்னேன்." என்று சொல்லி சம்யுவை தீண்ட, சம்யு விழிகள் எரிமலையை போர்த்தி இருந்தது. 

    "தயவு செய்து இங்கயிருந்து கிளம்பு. இனி என்னை பார்க்கவோ பேசவோ வந்திடாதே." என்றாள் சம்யுக்தா.

     "சம்யு... நான் தான் உங்கப்பா சொன்னதால அப்படி பண்ணினேன்." என்று மேலும் பேச வந்தவளை, 

    "நான் இந்த நாலு வருடத்தில் எத்தனை முறை உன்னிடம் பேசியிருப்பேன். எப்பவாது ஒரு முறை உண்மை சொல்லியிருந்தா மன்னித்து இருப்பேன். இப்ப போய் சொல்லறியே... சீ... போடி" என்று சொல்லவும் யோகிதா சம்யுவின் கோபத்தில் வெளியேறினாள். 

     ஆரவ் தனியாக தியேட்டரில் அமர்ந்தான். அவனுக்கு அருகே சந்துரு வரவில்லை. ஆரவ் இங்கே வருவதாக சொல்லிவிட்டு வரவில்லை. தியேட்டரில் படம் அது பாட்டிற்கு சென்று கொண்டிருக்க, இமை மூடிக் கொண்டான். 

      என்றும் கிட்டும் அதே நிம்மதி. அத்தனை இரைச்சலிலும் அவனுக்கு தன் கைக்குள் அவள் கைகளை உணர்ந்தவன் காதில் மெல்லிய குரலில் 'ஆரு பயமா இருக்கு... பேய் கிட்ட வரமாதிரி இருக்கு. எந்திரிச்சு போயிடலாம்' என்ற யுக்தா குரல் கேட்கவும் இம்முறை விழியை திறந்து திடுக்கிட்டான். 

    தன் தோளில் சம்யு வாசம் வீசுவதாக தோன்ற பிரம்மையில் இருந்து விடுபட்டான். இங்கு வரும் பொழுது எல்லாம் தனக்கென் இந்த நிம்மதி வருகிறது என்பது தற்போது தான் அறிய முடிந்தது. 

    யுக்தா.... யாரை மறக்க முயன்றானோ அவளின் ஆறுதல் இந்த பெரிய ஹாலில் இரைச்சல் கொண்ட சினிமா தியேட்டரில், பலரும் வந்து சென்று அகன்றாலும் அகலாத நினைவுகளாக அவன் உள்ளத்தில் புதைந்து கிடைக்கின்றன. 

   அப்படியென்றால் இத்தனை நாட்களும் தனக்கு ஆறுதலாக இருந்தது காயத்தை கொடுத்தவளின் தோள் சாய்ந்த கணம் தானா? ஆரவிற்கு பேரதிர்ச்சி உடனே எழுந்து வெளியே சென்றான்.  

   பீச் வந்து மணற்கோட்டை கட்ட முயன்றான் முடியவில்லை. தன் மீதே கோபம் பன்மடங்காக மாறியது. 

      நேராக தன் வீட்டிற்கு செல்ல ஆரம்பித்தான். 

    இங்கு ஏர்போர்ட்டில் திவேஷ் கோபமாக மேல்மூச்சு வாங்க எக்ஸ்கலெக்ட்டர் வழியாக வந்துக் கொண்டிருந்தான். 

     தன் தந்தையை கண்டதும் அவரோடு காரில் ஏறி அமர்ந்தான். அவரை பேசவிடாது "எப்படி ஆரவ் வந்தான். சம்யுவை எப்படி ஆரவ் திருமணம் செய்ய சுவாமிநாதன் விட்டான். என்னப்பா நீங்க சம்யுவை கண்காணித்து வையுங்க சொன்னேன். அவள் கழுத்துல யாரையும் தாலி கட்ட விடாம, எத்தனை வரனை தடுத்துட்டு நிறுத்தியிருக்கேன். இப்ப என்னடாவென்றால் அந்த ஆரவோடவே திருமணம் நடந்து இருக்குனு சொல்லறீங்க. போச்சு... இத்தனை நாள் விலகி நாடகமாடியது எல்லாம் போச்சு." என்று கத்த துவங்கினான். 

      "டேய் அவன் அந்த பொண்ணை அடிச்சி இழுத்துட்டு போயிட்டான். உன் தில்லுமுல்லு எல்லாம் தெரியாது. அவன் கோபம் எல்லாம் சுவாமிநாதன் மேல தான்." என்றார் திவேஷ் தந்தை மனோகரன். 

     "நினைச்சிட்டு இருங்க.... திருமணமாகி ஒரு வாரம் ஆகுதா...? ஆரவ் பலமும் பலகீனமும் சம்யு மட்டும் தான். ஒருமுறை சம்யுவோட பழைய ஆரவா பேசிட்டான் அதுக்கு பிறகு முதல்ல இருந்து துருவி எல்லாம் தெரிஞ்சிப்பான். கடைசியில வந்து நிற்பான். அவனுக்கு அதிகமா காயம் தந்தது கடைசியா சம்யு நான் பேசிய பேச்சு என்றதில் வந்து நிற்கும். நான் அதுல தகிடுதத்தம் செய்தது தெரிந்தது என்னை உயிரோட விடமாட்டான். சுவாமிநாதன் கூட இப்ப மாமனார் போஸ்ட்ல இருக்கார்." என்றவன் தலை விண்ணென்று வலி தர எரிச்சலில் கிடந்தான். இதில் சம்யு-ஆரவ் வரவேற்பு நாளான நாளை இருப்பதை கண்டு உள்ளம் குமைந்தான்.  

      வீட்டிற்கு நேராக வந்தவன் தன் தாய் காணாமல் அறைக்கு வந்து சேர, அங்கே தன் வரவேற்பிற்காக சோளி எடுத்து இருந்ததை போட்டு பார்த்து கொண்டிருந்தாள் சம்யுக்தா. 

     சோளியின் டாப் பாட்டம் அணிந்தவள் அதன் மேலாடையை தேடி திரும்ப அங்கே ஆரவ் சினத்தோடு நிற்பதை கண்டு புரியாமல் விழித்தாள். 

     "என்ன பேசி புரிய வைக்க முடியாதுன்னு உடலால் வலைக்க முயற்சி பண்ணறியா? இவ்ளோ இறங்கி போவேனு நினைக்கலை டி" என்று பேச தான் நிற்கும் நிலையை வைத்து இப்படி சாடுகின்றானென்று சம்யுவிற்கு கோபம் பொங்கியது. 

      "ஆரு... நீங்க இந்த நேரம் வருவீங்கயென்று நான் எதிர்பார்க்கலை. மெயின் கதவு மூடிட்டு தான் நான் இங்க வந்து டிரஸ்ஸை எடுத்து  ரிசப்ஷனுக்கு சரியா இருக்கானு பார்த்தேன். நீங்க இப்படி திடுதிடுப்புனு வருவீங்கனு எனக்கு தெரியாது. நீங்களா வந்துட்டு என்னை குறை சொன்னா என்ன அர்த்தம். உங்க மனசுல என் மேல தப்பு என்ற கண்ணோட்டத்திலயே பார்க்கறீங்க." என்று சம்யுவும் அதே கோபத்தோடு சொல்லி முடித்து நின்றாள். 

     ஆரவ் அவள் மீது தானாக வந்து மனதை தொலைக்கின்ற கோபத்திலும் சம்யு எதிரத்து பேசியதிலும் ஒரு அறை விட முயன்றான். 

     இம்முறை ஆரவை அடிக்க விடாது தடுத்தாள் சம்யு. 

     இந்த அடிக்கிற வேளை வேண்டாம் ஆரவ். நாளைக்கு ரிசப்ஷன் என் கன்னம் தக்காளி மாதிரி ஆகணுமா. வர்றவங்க கேள்வி கேட்டு அதுக்கு வேற முழிக்கணும். அதுவும் இல்லாம என்னை அடிச்சிட்டு அப்பறம் நீ தான் விசனம்படணும்." என்று ஆரவ் கையை பிடித்து தன்னை காத்து தடுத்து ஆரவ் எதிரிலே உடை மாற்ற தயங்கி, நீங்க வெளிய போனா உடையை மாற்றணும்" என்று கூறவும் ஆரவ் ஹாலுக்கு வந்தான். 

    சம்யு அறை கதவை சாற்றி, உடை மாற்றி கொண்டிருந்தாள். 

      லேசான பூனம் சேலையினை உடுத்தி வெளியே வர, ஆரவ் திரும்ப அதே நேரம் சுபாங்கினி வரவும் ஏற்கனவே நடந்த நிகழ்வை போல தோன்ற, அதன் பின் தான் தேதியை பார்த்தான். 

   இன்று சம்யுக்தா பிறந்த நாள் என்று அறிந்ததும், ஆரவ் தேதியை கண்டு தன்னை காண்பதை பார்த்து சம்யுக்தாவிற்கு ஆரவிற்கு தன் பிறந்த நாள் தேதி அறிந்து விட்டானே. அப்படியென்றால் அவனுக்கு என் பிறந்த தேதி நினைவு இருக்கு. அவன் என்னை முற்றிலும் மறக்கவில்லையே என்று துள்ளியது சம்யுக்தாவின் உள்ளம். 

   -வரையனல் தனிய தீவிகை ஒளிரும். 

  - பிரவீணா தங்கராஜ்.

     

Comments

  1. Ud konjam sekkirama podunga sis.. siramamilla sila kolaigal and panikoozh pa(r)vaiyandro ud podunga sis..

    ReplyDelete
    Replies
    1. siramamillamal sila kolaikal konjam logic miss agama elutha neram edukku.. sunday only post poda ninaichu iruken sis...
      panikul story madaval irendum intha kathai mudinthathum podalam vituten

      Delete
  2. Super sis... Ud sekkiram podunga... Matha story ellam eppo sis

    ReplyDelete
  3. அருமை அருமை..... அடுத்த பகுதி சீக்கிரமா கொடுங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

தித்திக்கும் நினைவுகள் (completed)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

நீ என் முதல் காதல் (On Going)

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

பிரம்மனின் கிறுக்கல்கள்