Posts

Showing posts with the label சிறுகதை

சிறுகதை-4 இல்லாளின் பந்தம் 144

Image
                                                                                                                     இல்லாளின் பந்தம் 144 அம்மாடி லட்சுமி பேப்பர் எங்க?'' என்றே ரகுவரனின் குரலுக்கு கையில் மணக்க மணக்க தேநீர் எடுத்து கொண்டு பேப்பர் நீட்டினாள்.       தேநீர் சுவைத்த ரகுனந்தன் ''என்ன எப்பவும் விட சுவை வித்தியாசமா இருக்கு''       ''அது ஒண்ணுமில்லைங்க ஊரே கொரானா கிடக்கு அதான் சுக்கு கிராம்பு பட்டை அரைத்து டீதூளில் கலந்து டீ போட்டு கொண்டு வந்தேன்''        ''என்னவோ கொரனாவை விரட்டுதோ இல்லையோ டேஸ்ட் நல்லா இருக்கு'' என்றபடி பேப்பரில் மூழ்கினார்.            அதில் '24 மணி நேரமும் காவலர்கள் ரோந்து... இருசக்கர வாகனத்தில் வருவருக்கு அறிவுறுத்தி தொப்புக்காரணம் போட்டு அனுப்பி வைக்கின்றார்கள்' என்றே வாசித்தவர்        ''இங்க பாரு வசந்த் ப்ரெண்ட்ஸ் கூட கிரிகெட் ஆட போகணும் சொன்ன இப்ப பாரு வெளியே போறவங்களுக்கு தண்டனையை... சிலர் வாகனத்தின் ஒட்டும் உரிமையை பறித்து அனுப்பறாங்க....'' என்றே பேசியவர் ப

ஒரு பக்க கதை - கோழையின் மரணம்

Image
     கோழையின் மரணம்                                                      சித்தார்த்தை கடிந்துக் கொண்டே இருந்தார் அவனின் தந்தை சிவதாணு. கல்லூரி இரண்டாம் ஆண்டு படிப்பின் மதிப்பெண் பட்டியலில் நான்கு பாடத்தில் தேர்வுப் பெறவில்லை, அது மட்டுமின்றி கூட படிக்கும் பெண்ணை விரும்பியதாக சொல்லி அவன் அண்ணன் வீட்டிற்கு வந்துக் கத்தி விட்டு சென்றதாலும் ஏற்பட்ட தொடர் வசவுகள் கோழையான அவன் மனதில் தற்கொலையை தூவி விட்டது.        ''போதும் அவனை திட்டியது. கொஞ்சம் தனியா இருந்து நிதானமா யோசிச்சா தற்போது வந்த காதல் இனக்கவர்ச்சி என்று புரிஞ்சுப்பான். இனி வரும் தேர்விலும் கவனம் வைப்பான்'' என தாய் அம்பிகை அவனுக்கு ஆறுதலாக சொல்லியப் படி தன் கணவனுக்கு 'இனி பேச வேண்டாம்' என அன்பு கட்டளை விடுத்தாள்.       ''என்னவோ போ அம்பிகை உன் மகன் நல்லதுக்கு சொன்னேன் . அவனுக்கு புரிஞ்சா சரி'' என பெரு மூச்சு விட்டு வெளியே கிளம்பினார்.                                 அம்பிகையும் அமைதியாக அமர்ந்திருக்கும் மகனுக்கு தெளிவுப் பிறக்க வேண்டி கோவிலுக்குக் கிளம்பிச் சென்றாள்.        'சே! யாரும

எண்ணத்தில் தெளிவு

Image
                                      எண்ணத்தில் தெளிவு                                                                                            கிச்சனில் இருந்தாலும் காமாட்சியின் கண்கள் நொடிக்கு ஒரு முறை வீட்டு வாசலிலே ஏறிட்டன.  ஆம், இருக்காத எப்பொழுதும் கல்லூரி முடிந்து சரியாக நான்கு மணிக்கெல்லாம் வீட்டு  வாசலில் நந்தனி ஸ்கூட்டி சத்தம் கேட்குமே ! இன்று 4.45 ஆகியும் அவளை காணாது தவித்து கொண்டு இருக்கிறாள்.  அவளது தவிப்பை புரிந்தவராக வரதராஜன்.           ''ஏன்? இப்படி  பதறுகிறாய் உலகம் தெரிந்த பெண் நந்தினி என்று...''  கணவன் முடிக்கும் முன்னரே , காமாட்சி ஆரம்பித்தாள்.           ''இப்படியே  செல்லம் கொடுப்பதால் தான் அவள் இஷ்டதிற்கு ஆடுறா...'' அதற்கு பின் வரதராஜன் வாய் திறக்கவில்லை .          ''எப்ப பார்த்தாலும் ஒரு மொபைல் கையில் வைத்து கொண்டு பேஸ்புக்  ,  டூவிட்டர், வாட்ஸ் அப்-னு  சுத்தறா. ஏன் ஒரு போன் அந்த மொபைலில் இருந்து பண்ணக் கூடாதா?''  என ஆரம்பிக்கவும் நந்தினி கையில் அடிப்பட்டு கட்டு கட்டிய ஒரு நாய் குட்டியோடு உள்ளே நுழையவும