நீ என் முதல் காதல்-35

 அத்தியாயம்-35

   ஸ்ரீநிதியாக ரிதன்யாவிடம் பேசி முடித்து கடிகாரத்தை பார்த்தவள் ம்ருத்யு வரும் அரவம் இல்லாததால், "நீ கிளம்பு. அவன் வெட்கப்படறான்." என்று ரிதன்யாவை அனுப்ப முயன்றாள்.

   "சரி நான் கிளம்பறேன். பட் ஒன் கண்டிஷன் உன் வீட்டுக்கு டோர் டெலிவெரியா காம்போ ஆஃபர்ல பீட்சா, கோக், ப்ரென்ஞ்ச் ப்ரைடு பொட்டேட்டோ ஆர்டர் பண்ணிருக்கேன். வந்ததும் வாங்கிட்டு சூடா சாப்பிட்டு கிளம்பறேன். அதுவரை வெயிட் பண்ணுக்கா" என்று கூறவும் ஸ்ரீநிதி தலையிலடித்தபடி மாடிக்கு ஓடினாள்.

   "ஏ... அத்தானை பிச்சி திண்ணுடாத." என்று கத்தவும் ஸ்ரீநிதி திரும்பி முறைக்க, ரிதன்யா வாய்மூடி க்ளுக்கி சிரித்தாள்.

   ஸ்ரீநிதியோ என்னவோ கேலி பண்ணிக்கோ என்று மாடிக்கு விரைந்தால், அங்கே ம்ருத்யுவோ அதேயிடத்தில் மெத்தையில் வீற்றிருந்தான்.

   "ரிது போயிட்டாளா?" என்று கேட்டதும், "பீட்சா ஆர்டர் பண்ணிருக்கா. வந்ததும் சாப்பிட்டு கிளம்பறேன்னு சொல்லிருக்கா. இப்ப கிளம்ப மாட்டா, நீ வா. அவளை பார்த்து ஷையா இருக்க அவசியமில்லை. அதெல்லாம் அடால்ட் டிக்கெட்." என்று கூறினாள்.

    "இல்லை நான் வரலை" என்று பிடிவாதம் பிடித்தான் ம்ருத்யு.

   "ஏன் நான் உன்னை ஒதுக்கறேன்னு ரிதுக்கிட்ட சீன் போட்டு நல்லப்பிள்ளை நாடகம் போட முடியாதேனு பீலிங்கா?" என்றாள்.

  "அடியேய் அவளிடம் நான் ஏன் நல்லவன்னு சீன் போடணும். ஐ பீல் ஷை.

    ஆப்டர் ப்யூ இயர்ஸ் நாம இப்படி இருந்து நம்ம குழந்தை ஓடிவந்து  மாட்டிக்கிட்டா எப்படி பீல் பண்ணுவோம். எனக்கு ரிது அப்படி தான். சும்மா அவளை என்னோட கோர்த்து விட்டு கோபப்படுத்துற மாதிரி பேசாத. எனக்கு அவ குட்டிப்பொண்ணுடி. இந்த ஏஜ் இரண்டுகெட்டானான வயசு. ஏதாவது நம்மளை பார்த்து தப்பு தப்பா எண்ணம் போகப்போகுது. ஏற்கனவே காதல், மோதல், இப்ப கிஸ் இதெல்லாம் உன்னை என்னை வச்சி தெரிந்துக்கறா. அத்தை வேற அவளை வச்சி ஸ்ரீயை கார்னர் பண்ணாத. அவ மனசு கெடும்னு சொன்னாங்க" என்று விளக்கியபடி பரிதவித்தான்.

    "அதெல்லாம் அவ கிழவி பேச்சு பேசறா. நீ நான் தான் அவளோட மனசை கெடுக்கணுமா? அதுக்கு அவசியமேயில்லை. வாடா" என்று இழுத்தாள். படிக்கட்டில் நடக்கும் போது ''என்னயிருந்தாலும் ஆப்டர் ப்யூ இயர்ஸ் நாம இப்படி இருந்நு நம்ம குழந்தை ஓடிவந்து மாட்டிக்கிட்டா எப்படி பீல் பண்ணுவோம். எனக்கு ரிது அப்படி தான்'னு சொன்ன பாரு. கியூட் ம்ருத்யு. ஐ லைக் இட்" என்று கொஞ்சினாள்.
 
    "கையை விடு, தள்ளி நட, அவப்போனப்பிறகு என்னவேன்னா பண்ணிக்கோ." என்று ஒரடி தள்ளி நடந்தான்.

    கதவருகே பீட்சா வாங்கியவள், பணத்தை வழங்கிவிட்டு, "கீப் தி சேஞ்ச்" என்று கூறிவிட்டு வேகமாய் பிரித்தாள்.

   "என்ன அவசரம் ரிது" என்று ஸ்ரீநிதி கேட்டபடி வந்தாள்.
 
  "அங்க நம்ம வீட்ல அம்மா வாங்க விடமாட்டறாங்க. அதான் இங்க ஆர்டர் பண்ணி சாப்பிட்டு போகலாம்னு." என்று பிரிக்க "அக்கா அத்தான் வாங்க உங்க ஷேர்" என்று முத்தமிட்டதை பார்த்திராதவள் போல அழைத்தாள்.

    ம்ருத்யு மெதுவாக அமர, சூடான பீட்சாவை திண்பதில் குறியாக இருந்தாள் ரிதன்யா.

  ஸ்ரீநிதியோ "ம்ருத்யு சீஸ் பீட்சா டா" என்று கிசுகிசுக்க, "ஸ்ரீ பயங்கற வாலு நீ. சும்மாயிரு" என்று அதட்டினான்.

      வாழ்க்கை பல வித சூழ்நிலையில் தனக்கு எது தேவை எது தேவையற்றது என்று ஒரு கட்டத்தில் புரியவைத்து விடுகின்றது. ஸ்ரீநிதிக்கு ஜீவியா ம்ருத்யுவா என்ற குழப்பத்தில் வாழ்க்கை அதன் போக்கிலேயே ம்ருத்யு தேவை என்று திணித்து விட்டாலும் ஒரு கட்டத்தில் அது தான் தனக்கானது என்ற உண்மை புரிந்து விடும் கணம் இனிமையான காலமாக அமைந்துவிடுகிறது.

    ம்ருத்யு-ஸ்ரீநிதி வாழ்வு இப்படியே இல்லறமே நல்லறமாக செல்ல, ஜீவியின் திருமணமும் முடிந்தது.

  ஸ்ரீநிதி ம்ருத்யு திருமணத்திற்கு சென்றிருந்தார்கள்.
    பெரிதாக ஸ்ரீநிதி அலட்டிக்கொள்ளாமல் பரிசை வழங்கி வாழ்த்தை தெரிவித்து நடையை கட்டியிருந்தாள்.

  தன் மாமா யுகேந்திரன் அத்தை ஷண்மதியை போல தாங்களும் வாழும் முடிவோடு ஸ்ரீநிதியை உள்ளங்கையில் தாங்கினான்.
   இரவில் மின்னலை மிஞ்சும் வேகமும், கொஞ்சலும் கெஞ்சலுமாய் வாழ்வை வாழ்ந்தான் ம்ருத்யு.
  தந்தை பைரவின் கனவாக ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தை துவங்கி அதில் நிர்வாகம் செய்ய ஆரம்பித்தான். பைரவிற்கு ம்ருத்யு பிறந்த காலத்தில்  அடிக்கடி வேலையிழந்த நேரத்தில் நாம ஓனரா இருந்தா இந்தநிலை ஏது? என்ற வார்த்தை உதிர்க்க ம்ருத்யு தன் தந்தைக்காக கடினப்பட்டு நிறுவனத்தை பூஜ்ஜியத்திலிருந்து தான் ஆரம்பித்தான். நிச்சயம் வளருவானென்று சொல்லி தான் தெரிய வேண்டுமா? அத்தை மாமா அப்பா அம்மா துணையிருக்க?
  இதில் அவன் ரத்தத்திற்கு தொழில் யுக்தி தெரியாமலா இருக்கும?

  ஸ்ரீநிதான் அடிக்கடி குட்டிபிசாசாக அன்னையின் தொழிலை கைப்பற்ற கூடவே கற்றுக்க ஆரம்பித்தாள். இதுநாள்வரை தந்தையோடு கடலுக்கும் சீ-புட் ஏற்றுமதி நிறுவனம் என்று சென்றவளுக்கு அன்னை மீது கோபம் தீர்ந்ததும் அன்னையின் இடத்தை தனக்கானதாக மாற்ற ஷண்மதியோடு சென்றாள். அப்பொழுதும் சில இளம் காளைகளுக்கு அக்கா தங்கை என்ற எண்ணமே உருவானதே தவிர இரு தேவிமார்களும் திருமணம் ஆனவர்கள் என்று பார்த்ததும் தெரியாது. யாராவது அவர்களாக வந்து பேசினால் திருமணம் ஆனதை பறைச்சாற்றுவார்கள் இந்த அரக்கியும் பிசாசும்.(தாய்-மகள்)

Epilogue

After 5 years.....

   மெத்தையில் முதுகு காட்டி உறங்கும் ம்ருத்யுவினை உற்று நோக்கியபடி, ம்ருத்யுவின் முதுகு கீறல்களை கணக்கிட்டாள் ஸ்ரீநிதி.

    அவன் தோளில் இரண்டு அடியை அடித்து "என்னடா இது நான் மொத்தம் மூன்று கீறல் தானே போட்டேன். அதென்ன எக்ஸ்ட்ரா இரண்டு கீறல் எப்படி முளைச்சது? யார் கீறினா?" என்று உலுக்கினாள்.

   சாவதனமாக தலையை நிமிர்த்தி அவளது மடியில் தலையை உரிமையாய் வைத்தவன், "என்ன நம்ப மாட்டியா டி? இது நாம பெத்த வேம்பயர் செய்த வேலை. இதென்னதுப்பா அதென்னதுப்பா கேட்டா உங்கம்மா கீறிட்டானு சொன்னேன். அவ சும்மாயில்லாம் நெய்ல்ஸ் வச்சி இரண்டு இழு இழுத்துட்டா. எனக்கென்ன பிஞ்சு கையில்ல கீறியது கீறலாகிடும்னு ஜோசியமா தெரியும்." என்றான்.
 
    "அடலூசே ரிது மேரேஜிக்கு ஷாப்பிங் ப்யூட்டிபார்லர் பர்சேஸ்னு கொஞ்சம் பிஸி. அதனால நெய்ல்ஸ் கொஞ்சம் பெரிசா வளர்ந்துடுச்சு. அவளிடம் போய் முதுகை காட்டி விளையாட விட்டுட்டியா? என்ன தான் அப்பனோ? எங்கப்பாவுக்கு மேல சாப்ட்டா இருக்க" என்று கவலையாக வடுவை வருடி உரைத்தாள்.
  
    ம்ருத்யு எழுந்தமர்ந்து மனையாளின் தாடை பிடித்து "ரிதுக்கு இந்த கல்யாணம் பிடிச்சிருக்கா? போர்ஸ் பண்ணி பண்ணலையே? ஏதாவதுனா சொல்லு நாம அத்தையிடம் மறுத்து பேசலாம். கண்டிப்பா அவன் தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு அவசியமில்லை." என்று ஆயிரெத்தியெட்டாவது முறை கேட்டான்.

   ஸ்ரீநிதி இடையில் கைவைத்து, "டேய் ஏன்டா திரும்ப திரும்ப இதையே கேட்கற. மம்மி காரணமில்லாம கொண்டு போய் அங்க தள்ளுவாங்களா? அதெல்லாம் நல்லயிடமா தான் இருக்கு." என்று நமுட்டு சிரிப்பை உதிர்த்தாள்.

     "உனக்கு சிரிப்பா போச்சு. எனக்கு ரிதன்யா லைப் அங்க போய் மாட்டணுமானு பயமாயிருக்கு." என்றதும் ம்ருத்யு கவலை அவன் முகத்தில் தெரிய "ரிது இந்த வீட்டு செல்லக்குட்டிடா. அப்படியிருக்க அம்மா யோசிக்காம முடிவெடுக்க மாட்டாங்க. யூ டோண்ட் வொர்ரி ம்ருத்யுகண்ணா" என்றாள்.

   இரண்டு நாளில் ரிதன்யாவுக்கு திருமணம், திருமணமாக போகும் வீட்டு ஆட்களை விட ம்ருத்யு தான் அதிகமாக உளைச்சலில் மிதந்தான்.

  ரிதன்யாவுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை அப்படி.

   சி.எம் அரவிந்த்தின் பையன் ப்ருத்விராஜனுக்கு தான் ரிதன்யாவை கட்டிக்கொடுக்க ஷண்மதி முடிவெடுத்தது.

    இந்த சம்பந்தம் ஷண்மதியாக தேடிப்போகவில்லை.  ஒரு விழாவின் போது அரவிந்தன் யுகேந்திரனையும் ஷண்மதியையும் சந்திக்க நேரிட்டது.

    அப்பொழுது பிசினஸை தவிர்த்து பெர்சனல் பேசும் பொழுது ப்ருத்விக்கு மணப்பெண்ணை தேடுவதை யுகேந்திரனிடம் பகிர நேரிட்டது.

   அக்கணம் உங்களுக்கு இரண்டு பொண்ணுங்க இருக்காங்களா? என்று வினாத்தொடுத்து இழுக்க, ஷண்மதி "பெரியவ ஸ்ரீநிதிக்கு சொந்தத்துல முடிச்சிருக்கோம். சின்னவளுக்கு அசலில் பார்க்கணும்." என்று தான் கூறினாள்.

   அங்கே சி.எம் அரவிந்தை தவிர்த்து அவர் மனைவி தாராவும் இருக்க, அரவிந்திடம் ப்ருத்விக்கு ரிதன்யாவை கேட்க கிசுகிசுத்தார் தாரா.

  அரவிந்த் மனைவி தாரா கூறவும் ஒளிவுமறைவின்றி ரிதன்யாவை மருமகளாக கேட்க 'வீட்ல கலந்து பேசிட்டு சொல்லறோம்' என்று புன்னகை குறையாமல் கூறிவிட்டு வந்தார்கள்.

  வீட்டுக்கு வரும் பொழுதே யுகேந்திரனிடம் கருத்து கேட்க, "ரிஸ்க் ஆகிடும் ஷணு. என்னைக்காவது வார்த்தை நம்ம அறியாம வந்துடுமோனு." என்று பயந்தார்.

   "நீ அப்படியோசிக்கற. எனக்கு ம்ருத்யுவுக்கு அவங்க அப்பா அடிக்கடி நம்ம வீட்டுக்கு வந்துட்டு போகறப்ப பார்க்கற வாய்ப்பும், பழகற வாய்ப்பும் அமையும்னு யோசிக்கறேன்.

   ம்ருத்யு சி.எம் பையன்னு எனக்கு உனக்கு ஸ்ரீநிதிக்கு ம்ருத்யுவுக்கு தான் தெரியும்.

   என் சைட்லயிருந்து வார்த்தை போகாது. ஸ்ரீகுட்டியும் வார்த்தை விடாத ஆளு. ம்ருத்யுவுக்கு அவன் அம்மா அப்பாவை காயப்படுத்த பிடிக்காது. சோ பைரவ் அண்ணா தாரிகா அண்ணிக்காக அவனை உயிர் நகலா கொடுத்த அரவிந்த் நேர்ல நின்றாலும் கண்டுக்க மாட்டான்.

   நீ தான் எமோஷனல் ஆகாம இருக்கணும். எனக்கு தெரிந்து ஏற்கனவே பட்ட அனுபவத்தில நீ ம்ருத்யுவோட பிறப்பு ரகசியம் பத்தி மூச்சு விடறது டவுட் தான்." என்று நீண்ட விளக்கவுரைக் கொடுத்தாள்.

   யுகேந்திரன் பெருமூச்சுவிடுத்து "அப்ப ரிதுக்கு ப்ருத்வியை கட்டிவைக்கலாம்னு யோசிக்கறியா?" என்று கேட்டார்.

   "ரிதுக்கு பிடிச்சிருக்கான்னு கேட்பேன். அவ பேஸ் ரியாக்ஷன் பார்த்ததும் அரவிந்திற்கு இரண்டு மனைவி என்றதை சொல்வேன். ஆப்டர் மேரேஜ் இரண்டு மாமியார் இருக்க பாவம் என் ரிது குட்டி தவிச்சிடக்கூடாதுல. எப்படியும் ப்ருத்வியை தனிக்குடித்தனம் தான் வைப்பாங்க இருந்தாலும் நல்லது கெட்டதுக்கு இரண்டு மாமியார் முன்ன நிற்பாங்களே. அதோட அரவிந்த் தம்பி இந்திரஜித் அவனோட மனைவி சந்தோஷி என்று மூன்றுப்பேரை உபசரிக்கணும்.
  என் ரிதுக்குட்டி சாமர்த்தியசாலின்னா ஓகே சொல்வா. இல்லைனா மறுக்க வாய்ப்புண்டு. எதுனாலும் ரிது விருப்பம் தான் முடிவெடுக்கப்படும்." என்று தீர்க்கமாக கூறினாள்.

    வீட்டுக்கு வந்து கலந்தாலோசிக்க 'சி.எம் வீட்டு சம்பந்தமா? அரசியல்வாதி பையனச்சே' என்று பைரவ் 'கட்டிக்கொடுத்தா கூடுதலா செல்வாக்கு உண்டாகும்' என்றார்.
  
   தாரிகாவோ "இரண்டு மாமியார் இருக்க ரிதுக்குட்டி திணறிட்டா. இங்க செல்லமா வளர்ந்து அங்க போய் கஷ்டப்படக்கூடாதே" என்றார் அவர்.

   "பெத்தவங்க நீங்க என்ன முடிவெடுத்திருக்கிங்க" என்று ஸ்ரீவினிதா கேட்டார்.
   லலிதாவோ "பையன் எப்படி? அப்பாவுக்கு இரண்டு மேரேஜ் ஆச்சே. அவன் எப்படிபட்டவனோ?" என்று ஆளாளுக்கு ஒன்றை வினா எழுப்பினார்கள்.

  ஸ்ரீநிதியோ "அந்த ப்ருத்விக்கு நம்ம ம்ருத்யு ஏஜ் தானே இருக்கும்?" என்று கேட்டாள்.

   " எனக்கும் அவனுக்கும் மாசக்கணக்குல வித்தியாசம் இருக்கும்" என்று ம்ருத்யு ஸ்ரீநிதியிடம் கூறி அத்தையை கவனித்தான்.

  ரிதன்யாவோ "நீங்க என்ன டிசிஷன் எடுக்கறிங்களோ எனக்கு அது ஓகே மம்மி." என்றாள். எப்பொழுதும் அன்னையை நேசிக்கும் குட்டி வால்.
 
  ஷண்மதி ப்ருத்வியின் புகைப்படத்தை ரிதன்யாவிடம் காட்டவும் மெதுவாக வாங்கி பார்த்தாள்.

    "உன்னோட செவன் இயர்ஸ் பெரியவன். இலண்டன்ல தான் படிச்சிருக்கான். லண்டன் என்றாலும் அவங்கம்மா தாரா கூடவே போய் தங்கி பையனை பார்த்து கவனிச்சிருக்காங்க. அம்மாவோட நிழல்லயே வளர்ந்த பையன். ஆப்டர் மேரீட் தனிக்குடித்தனம். ஓகேன்னா உங்க அக்காவிடம் பதிலை சொல்லு. ஒரு சி.எம்கு இரண்டு மனைவி இருப்பது உலகத்துக்கு  புதுசில்லை. பட் அது அவங்கவங்க பெர்சனல். உனக்கு பையனை பிடிச்சிருக்கா அதை சொல்லு. பையனை பத்தி விசாரிச்சிட்டேன். அவங்க அம்மா தாரா கூடவே வளர்ந்தவன் ரொம்ப பொறுப்பானவன்" என்று ஷண்மதி அவள் பாட்டிற்கு பேசிவிட்டு கூட்டத்தினை கலைத்து விட்டாள்.

இரண்டு நாள் யோசித்து ஸ்ரீநிதியின் வீட்டுக்கு ரிதன்யா வந்தவள் "எனக்கு அவரை பிடிச்சிருக்கு அக்கா" என்றாள் வெட்கத்தோடு.

   ஸ்ரீநிதி அதனை தாயிடம் உரைக்கும் முன் ம்ருத்யு தான் இடையிட்டு "அவனுக்கு என் வயசு. இரண்டு மாமியார் கூட இடிப்படணுமா? கொஞ்சம் யோசி ரிது" என்றான்.

   "ஒன்னும் பிரச்சனையில்லை அத்தான். இரண்டென்ன, மூன்று மாமியார் இருந்தாலுமே இந்த ரிது ஒரு கை பார்ப்பா. எனக்கு அந்த ப்ருத்வி பையன் ரொம்ப ஸ்மார்ட்டா கண்ணுக்கு தெரியறான்." என்றாள் கண்ணில் மின்னல் வெட்ட.

   ம்ருத்யுவிற்கு ரிது வாயால் இப்படி வார்த்தை வந்ததும் எதிர்வினை கருத்து கூறாமல் தவிர்த்தான்.

   ஸ்ரீநிதியோ தாயிடம் மேற்கொண்டு ரிதன்யாவின் திருமண விஷயத்தை பேசுமாறு கூறிட, இதோ திருமண நாளும் வந்து விட்டது.

   ம்ருத்யு ஸ்ரீநிதிக்கு அந்த மண்டப ஹால் வந்ததும் திருமணத்திற்கு விஐபியாக வலம் வர, ரிதன்யாவின் பின்னால் ஸ்ரீநிதியும், தான் பெத்த மகள் *ஷரத்தா*வை கையிலேந்தியும், வந்தவர்களை வரவேற்று உபசரித்தான்.

   ப்ருத்வியின் திருமணக்கோலத்தில் அவன் பக்கம் இரு தங்கைகள் தமிழ் மின்மினி இருந்தார்கள். 

   ம்ருத்யுவிற்கு என்னதான் சித்தி பசங்களாக பாவித்தாலும் தானும் இந்த கூட்டில் ஒருவனாக இருந்திருப்போமோ? தன்னையும் அண்ணனாய் ஏற்றிருப்பார்களா? என்ற எண்ணம் வராமல் இல்லை.

  அப்படி கவலை வரவும், அப்பா பைரவ் அம்மா தாரிகாவின் முன் வந்து நின்றுக்கொள்வான்.

  இவர்கள் அன்பிற்கு முன் மற்ற உறவுகள் வேண்டாமென்ற ஆறுதல் வந்தது.

   ப்ருத்வி-ரிதன்யா இருவரும் மணக்கோலத்தில் பிஸியாக பிளாஸ்லைட் வெளிச்சத்தில் நின்றிருந்தனர்.

  பூமழை தூவியும், மஞ்சள் அரிசியும் மல்லிப்பூ தூவலும் ரிதன்யா-ப்ருத்வியின் கையால் மாங்கல்யம் அணிவித்து முடித்த நிகழ்ச்சியை பறைச்சாற்றியது. ம்ருத்யுவோ சி.எம்.அரவிந்தை தான் அடிக்கடி கவனித்தான். தந்தை தாரா ஷமிரா என்ற இரு சித்திகளோடு பொதுயிடத்தில் சரியான முறையில் நடக்க ஆச்சரியம் அடைந்தான். 'பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிட்டு இருக்கான்' என்று நகைப்பு தோன்றியது.  

    விஜபிகள் வந்து புகைப்படம் எடுத்து கைகுலுக்க, அரவிந்த் சம்பந்தியாக வலம் வந்தான். நிச்சயம் தன் ரத்தத்தில் உதிர்த்த பிள்ளை தன்முன் இருக்க, அதையறியாது மற்ற ஊரில் உள்ள விஐபிகளை வரவேற்று உபசரிப்பதை அவன் எக்காலமும் அறியப்போவதில்லை.

    மணமக்களை சாப்பிட அழைக்கும் நேரம் தமிழ், மின்மினியென இரு தங்கைகள் ப்ருத்வியை அழைக்க, அந்த நேரம் ரிதன்யா ஸ்ரீநிதியிடம் பேச, "குட்டிப்புயல் சாப்பிட போகலாம்" என்று கூற ரிதன்யா திருட்டு முழியோடு ப்ருத்வி பின்னால் சென்றாள்.

    ஸ்ரீநிதியோ "பார்டா குட்டிபுயலாம். ஏன் ம்ருத்யு இவனும் லேசுபட்டவன் இல்லைடா. ஒரு விஷயத்துல சி.எம்மை பாராட்டணும். ஒன்னுக்கு இரண்டா குடித்தனம் செய்து பேலன்ஸ் பண்ணறார். மனைவி மக்கள் என்று. நான் மக்களென்று சொன்னது புள்ளக்குட்டிகளை. சரி வா ஷரத்தா சாப்பிட்டா தூங்க வைப்போம். ரொம்ப நேரமா ஒரே ஓட்டமும் ஆட்டமும் தான்." என்று மகளை தூக்கி செல்ல, "நான் ம்ருத்யு டேடி கூட வர்றேன்" என்று அதிகாலை விரைவாய் எழுந்ததால், தூக்க கலக்கத்திலும் உரைத்தவளை ம்ருத்யு அழுத்தமாய் கன்னமுத்தம் கொடுத்தான்.

   பொறாமை பொங்க ஸ்ரீநிதி ம்ருத்யு கை வளைவை பிடித்து கொண்டு சென்றாள்.

   வரவேற்பில் பிசினஸ் பெருமக்களை விருந்து உபசரித்து தன் மகள் ஸ்ரீநிதி ரிதன்யாவையும் அடிக்கடி பார்வையால் தழுவிய ஷண்மதி யுகேந்திரன் கண்களுக்கு மகள்களின் வாழ்வு பிரகாசமாய் இருக்க கண்குளிர ரசித்தனர்.

தூரத்தில் இரண்டு சம்பந்தியான தாரா ஷமிராவோடு ஷண்மதி உணவருந்தி பேச, யுகேந்திரன் அரவிந்தோடு இயல்பாய் கதைத்தனர்.

  ப்ருத்வி தான் அவனது குட்டிபுயலான ரிதன்யாவிடம், தனிமையில் பேச கிடைக்காத அசௌவுகரியத்தால், வார்த்தையால் பேசுவதை விட பார்வையால் பேசினான்.

   மணக்கோலத்தில் மங்கையவளை அள்ளிக்கொள்ளும் வேகம் அப்பனைவிட, அண்ணனை விட கூடுதலாக, இருந்தாலும் இருக்கலாமென்பது தனித்து சொல்லவேண்டியதில்லை.

     அங்கே ம்ருத்யு-ஸ்ரீநிதி தங்கை ரிதன்யா-ப்ருத்வியை பின் தொடர்ந்து ரசித்தார்கள்.
 
   ப்ருத்வி 'குட்டிபுயல்' என்று அடைமொழியோடு தங்கைகளோடு அவளை இணைக்க, 'பெரியண்ணா அண்ணியும் வாங்க' என்று ஒரே மேஜையில் கலந்துக்க, ம்ருத்யுவும் அவ்விடம் அமரும் சங்கடம் பிறந்தது. முதலில் சங்கடம் என்றாலும் போக போக "என்ன அண்ணா குழந்தையை வச்சிட்டு சாப்பிட கஷ்டமாயிருக்கா? என்னிடம் கொஞ்ச நேரம் கொடுங்க" என்ற ப்ருத்வி கேட்டதில், "நோ நோ அவ என்னை தவிர யாரிடமும் போக மாட்டா" என்று கூறினான் ம்ருத்யு.
  
   ஆனால் ஷரத்தா தூக்க கலக்கத்தில் இருந்தவளை, ப்ருத்வி அழைக்கவும் "தந்தையை பார்த்து விழிமூடி திறந்து செல்ல அனுமதி கேட்டு நின்றாள் மழலையவள்.

    ரிதன்யாவோ "உங்களை பார்த்தை பயமோ என்னவோ, நீ வாடி பட்டு" என்று அக்கா மகளை அழைக்க சித்தியோடு வந்தாள்.

   ப்ருத்வியோ "அதெப்படி சித்தி கூட வந்துட்ட. நான் சித்தா தானே என்னிடம் வாங்க" என்று உரிமையாக அழைக்க ஷரத்தா ப்ருத்வியிடம் தாவினாள்.

  ம்ருத்யுவிற்கே ஆச்சரியம் குட்டி மகள் இதுவரை யாரிடமும் அப்படியொன்று போகமாட்டாளேனென்று.
   இதில் 'சித்தா' என்ற ப்ருத்வி அழைக்க கூற, ம்ருத்யு கண்கள் லேசாக கலங்கியது.

   "என்னாச்சு அண்ணா ஸ்பைஸியா இருக்கா?" என்று தமிழ் கேட்க, "சம்டைம் காரம் பிடிச்சி சாப்பிட்டாலும் கண்ணு கலங்கும் இல்லைண்ணா" என்று மின்மினி வினவ, அவனை அறியாது மகிழ்ந்தான்.
  
   தனக்கான உறவு எது எப்படி அமைய பெற்றாலும் அது இனி ரகசியமாகவே காப்பாற்றி அன்பை பகிரும் முடிவோடு தம்பி ப்ருத்வியோடு புன்னகையால் கலந்தான். தங்கைகளிடம் "கண்ணுல குட்டி டஸ்ட்" என்று தன்னை தேற்றிக்கொள்ள, ஸ்ரீநிதியும் அவனை ஆதரமாய் கையை தீண்டினாள்.

  'நீ என் முதல் காதல்' நீயில்லையேல் என் வாழ்வும் இல்லையென்று ம்ருத்யு ஸ்ரீநிதியின் கையை அழுத்தமாய் பிடித்தான். அதில் இனியேதும் பிரிவில் கண்மணியே என்ற காதல் நிரம்பி வழிந்தது.

-சுபம்.
-பிரவீணா தங்கராஜ்

  


Comments

Post a Comment

Popular posts from this blog

தித்திக்கும் நினைவுகள் (completed)

பஞ்ச தந்திரம் (Five knots will be untied)

முதல் முதலாய் ஒரு மெல்லிய (முழு தொகுப்பு link )

தீவிகை அவள்🪔 வரையனல் அவன் 🔥

ஸ்டாபெர்ரி பெண்ணே

நீ என் முதல் காதல் (On Going)

முதல் முதலாய் ஒரு மெல்லிய-1

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்...

தீவிகை அவள் வரையனல் அவன்- 1

தித்திக்கும் நினைவுகள்-1