முதல் முதலாய் ஒரு மெல்லிய -2

💘 2 காலை விடியல் அற்புதமாக விடிந்தது. எல்லா காலை பணியும் முடிந்து கரும்பச்சை கொண்டக் காட்டன் ஆடையை லாவகமாக அணிந்து ஹாலுக்குள் சென்றாள். தன்யா சீக்கிரமாக ஸ்பெஷல் கிளாஸ்க்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். கிச்சனில் ராதை காபி எடுத்துக் கொண்டு பவித்ராவிடம் வந்தாள். '' தனு எந்திரிச்சப்பவே வந்து பார்தேன் நீ நல்லா தூங்கிட்டு இருந்த அதான் டிஸ்டர்ப் பண்ணல. '' என்று காபியை கொடுத்தார். காபியை வாங்கி பருகியவாறு '' நல்லா தூங்கிட்டேன் ஆன்ட்டி ஸாரி. பொதுவா புது இடம் என்றால் தூக்கம் வராதுன்னு சொல்வாங்க ஆனா நல்லா தூங்கினேன்.” என்று கூறவும் பவித்ராவை கண்டு விஸ்வநாதன் நிம்மதி கொண்டார். முன்பு ஒரு முறை '' என்னால் நம்ம வீட்டுல நிம்மதியா தூங்கக் கூட முடியல அப்பா...