Posts

தென்றல்

அடடா ! காற்றும் பிள்ளை பாசத்தால் ஏங்குகிறதே ?! வாரி அணைக்கிறதே இதமாக !            --  பிரவீணா  தங்கராஜ் .

நாகரீகத் தூய்மை

முகாம் இட்டு சொல்கின்றனர் . சுற்றுப்புற தூய்மையை துப்புரவு தொழிலாளிகளிடமே !           --  பிரவீணா  தங்கராஜ் .

🌳மரம் வளர்ப்போம்🌳

மழை முத்தால் கிடைத்த நீர் வளத்தை  கனி முத்தாக மாற்றினாய் - உன் வளத்தால் உன்னால் சுவாசம் பெறும் மனிதன் உன் சுவாசத்தைப் பறித்தாலும் உன் கனி இனிப்பது எப்படியோ ...?! ஆதியில் வந்த முன்னோருக்கு - உன் அன்பு கனியை தந்து உணவாகினாய்... ஐந்தறிவு ஜிவிகளும் பழம் தின்றே விதை தூவுகின்றது மண்ணிலுன்னை ஆறறிவு கொண்ட மனிதனோ அவன் சுவாசம் அழிக்க யவனே வெட்டுகின்றான் யுன்னை உயிர் கொண்ட உன்னை வெட்டி உயிரற்ற பொருளாகும் மனிதன் வீட்டை அலங்கரிக்கும் பொருளாக ஏற்றுக் கொள்ளும் சிந்தை கொண்ட மனிதா ! "வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் " என உன்னை  வளர்க்க சொல்லி தர தான்  வேண்டுமா ?                              --   பிரவீணா  தங்கராஜ் .

உடன் கட்டை

பெண் விறகுகளுக்கும் ஒப்பானவளா ? கணவன் சடலத்தில் விழுந்து எரிகிறாளே ?!            --  பிரவீணா  தங்கராஜ் .

விபச்சார விடுதி

விபச்சார விடுதி – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

கைம்பெண்

வெண்மை அணிந்த மங்கைக்கு வண்ணம் பூச தயங்குகிறது . வாடிக்கையான பண்பாட்டால் ..       --  பிரவீணா  தங்கராஜ் .

பெண் சிசு

தவறு செய்யாமல் தண்டனை அநீதியான உலகம் இது . அழிக்கப்பட்ட சிசுவின் கதறல் ...              --  பிரவீணா  தங்கராஜ் . *ஜுலை 2010 -இல் " மங்கையர் மலரில் " பிரசுரிக்கப்பட்டவை .

பிறை நிலா

பிறைநிலா – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

நான்கு சுவரில்

நான்கு சுவரில் – ஹைக்கூ கவிதைகள் – Praveena Thangaraj Novels Forum

ஆசான்

படைக்கும் தொழிலுக்கு ஒரு படி உயர்ந்து . பாரில் மாணவருக்கு பயின்றதை புகட்டி , பண்பில் சிறக்க பாங்காய்  நடந்திட , ஏட்டுச் சுரக்காயோடு நன்னடத்தை நவின்று , ஏற்றம் கொண்ட வானவில்லாய்  உயர்த்தி , தவறு செய்த தருணங்களை மன்னித்து , தட்டிக்கொடுத்து திறமை வளர்த்து , கல்வி கடலிலே சிறு துளி நீர்த்தெளித்து , மகுடத்திற்கு வைரமாம் பணிகளிலே ஆசிரியத்துறை மட்டற்ற அளவிலே போற்றுவோம் இப்பணியை ..!                                                            --  பிரவீணா  தங்கராஜ் .